Phytophthora nicotianae
பூஞ்சைக்காளான்
இந்த நோயின் அறிகுறிகளைத் தாவரத்தின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும், எல்லாத் தாவர பாகங்களிலும், காண முடியும். இலைகளில் அசாதாரண நிறங்களும் வடிவங்களும், உருமாற்றமும், சுருண்டு போவதும் தோன்றுகின்றன. பரவலாகச் சோகை அடைந்த இலைகளுக்கு நடுவே சிதைந்த திட்டுகள் தோன்றும். நோய் முன்னேறும்போது, இறந்த திசுக்கள் விழுந்து, இலைகள் ஒரு கிழிந்த தோற்றத்தைக் கொள்கின்றன. மரங்களில், பழங்களும் கூட ஒரு அசாதாரணமான வடிவத்தைக் கொண்டிருக்கின்றன, அவற்றின் தோலை கருப்பு அல்லது பழுப்பு நிற சிதைவுகள் மூடியிருக்கும். பின்னர் கட்டங்களில், இந்தச் சிதைவுகளில் விரிவான பூஞ்சை வளர்ச்சி ஏற்பட்டு, அவை சுரந்து ஒழுகக் கூடும். பழங்கள் வாடி, தோல் சுருங்கிப் போவதன் தெளிவான அறிகுறிகளைக் காட்டுகின்றன. மரப்பட்டை அடர் பழுப்பு நிறமாக மாறி, மரத் தண்டுகள் மீது அரிநோய் தெளிவாகத் தெரியும். பட்டையின் சிதைவுகளிலிருந்து மிகுதியான பசை வெளிவரும் (பசைக்கசிவு). வெட்டித் திறந்து பார்த்தால், தண்டுகள் மற்றும் வேர்களின் உள் திசுக்கள் அழுகலின் (நிறமாற்றம்) அறிகுறிகளைக் காட்டுகின்றன. மொத்தத்தில், தாவரங்கள் வாடி, கடுமையான சந்தர்ப்பங்களில், நாற்றழுகல் நோய் என்னும் அதிக ஈரத்தினால் வரும் நோயைக் காண முடியும்.
பயிர் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து இந்தப் பூஞ்சையின் கட்டுப்பாடும் வேறுபட்டிருக்கும். பைட்டோஃப்தோரா நிகோடியானே-க்கு எதிரிகளான நுண்ணுயிரிகள் பலவும் இருக்கின்றன, உதாரணமாக ஆஸ்பெர்ஜிலஸ் டெரியஸ், சூடோமோனாஸ் புடிடா அல்லது டிரிகோடெர்மா ஹர்சியானம் போன்றவை. ஈரமான கால நிலைகளின் போது, 2-3 மாதங்களுக்கு ஒரு முறை காப்பர் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது, நோய் ஏற்படுவதைத் தடுக்கும். காயப்பட்ட பட்டையை நீக்கிவிட்டு, காப்பர் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லியின் பசையால் பூசிவிடலாம்.
உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். சில பயிர்களில், மெட்டாலாக்ஸில் மற்றும் பாஸ்போனேட் இரண்டுமே பயனுள்ளவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. மெட்டாலாக்ஸிலிக்கு சில எதிர்ப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பல முக்கிய தாவர இனங்களில் பைட்டோஃப்தோரா நிகோடியானே ஏற்படுகிறது. ஆகையால், இது குறிப்பாக ஒரு தீவிரமான நோய்க்கிருமி ஆகிவிடுகிறது. இது பெரும்பாலும் சூடான, ஈரப்பதமான சூழலில் ஏற்படும், மண்ணின் மூலம் பரவக்கூடிய பூஞ்சை ஆகும், ஆனால் மிதமான காலநிலையிலும் இதைக் காணலாம். நோய்க் காரணியின் பெருக்கத்திற்கும், அதன் வித்துகள் பரவுவதற்கும், பரந்த ஈரப்பதம் அவசியம். மழைத்துளிகள் அல்லது நீர்ப்பாசனம் மூலம் தெளிக்கப்படும் நீர், நோயுற்ற தாவரங்களில் இருந்து ஆரோக்கியமான தாவரங்களுக்கு வித்துகள் பரவுவதற்கு உதவுகிறது. இது தண்ணீரில் வித்தாகவும் உயிர்வாழக் கூடும். இதன் விளைவாக மூல நோயின் தளத்தில் இருந்து தொலைவில் இருக்கும் தாவரங்களையும், வடிகால் அகழிகள் அல்லது நீர்ப்பாசன முறைகளின் மூலம் மாசுபடுத்தக் கூடும்.