Alternaria alternata
பூஞ்சைக்காளான்
இந்தப் பூஞ்சை இரண்டு மாதிரியான அறிகுறிகளை மாதுளையில் ஏற்படுத்தும், ஆனால் இவை ஒரே நேரத்தில் ஏற்படவேண்டிய அவசியமில்லை. கரும்புள்ளி மற்றும் பழங்களின் இதய அழுகல் என்று அழைக்கப்படும் இந்த நோய், பெரும்பாலும் மாதுளையின் ரகத்தைச் சார்ந்து இருக்கும். கரும்புள்ளி நோயானது பழங்கள் மற்றும் இலைகளில் பச்சை மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்ட சிறிய, செம்பழுப்பு நிறக் கரு வளையப் புள்ளிகள் மூலம் (1-3 மி.மீ.) வகைப்படுத்தப்படுகிறது. நோய் அதிகரிக்கையில், இந்தப் புள்ளிகள் இணைந்து 50% பழங்களின் பரப்பளவை மூடும் அளவிற்கு பெரியத் திட்டுக்களாக உருவாகும். இலைகளில், இவை வெளிறிய நிறமாகி, முதிர்ச்சியடைவதற்கு முன்னரே உதிர்வதற்கு வழிவகுக்கும். பழங்களின் வெளிப்புறப் பகுதி அழுகத்தொடங்கும், அதே நேரத்தில் உண்ணக்கூடியத் திசுக்கள் சேதமடையாமல் இருக்கும். சற்று அசாதாரண தோலின் நிறம் அல்லது பழத்தின் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள் இதய அழுகல் நோயின் வெளிப்புற அறிகுறிகளாக இருக்கலாம், ஆனால் பழம் அறுவடை வரையிலும் தனது ஆரோக்கியமான தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். அவற்றை வெட்டித் திறந்து பார்த்தால், விதையலகின் சிதைவு தெளிவாகக் காணப்படும்.
ஆல்டெர்னேரியா ஆல்டெர்னேட்டாவை எதிர்ப்பதற்கு எந்த விதமான உயிரியல் சிகிச்சைகளும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், செம்பு ஆக்ஸிகுளோரைடு அடிப்படையிலான தயாரிப்புகள் மாதுளையில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைத்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூக்கும் காலத்தில் அல்லது பழங்களில் முதன்முதலில் அறிகுறிகள் தென்படும்போது மேற்கொள்ளப்படும் இரண்டு கட்டுப்பாட்டுத் தெளிப்புகள் நோய்க்கு எதிரான நல்ல கட்டுப்பாட்டை வழங்குகிறது. பிராப்பிகொனாஜொல், தியோஃபனேட் மெத்தில் அல்லது அஸாக்ஸிஸ்டிரோபின் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள செறிவுகளைக் கடைப்பிடிப்பதோடு, எதிர்ப்புத் திறன் உருவாகுவதைத் தடுக்க, பல்வேறு வகையான செயல்பாடுகளுடன் பூஞ்சைக்கொல்லிகளைப் பயன்படுத்தவும்.
கரும்புள்ளி மற்றும் இதய அழுகல் நோய்க்கான அறிகுறிகள் ஆல்டெர்னேரியா குடும்பத்தின் பல வகையான பூஞ்சையினால் ஏற்படுகிறது, ஆனால் ஆல்டெர்னேரியா ஆல்டெர்னேட்டா இந்த நோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாகும். இந்தப் பூஞ்சை பொதுவாக தாவரக் குப்பைகள், பதனிடப்பட்ட பழங்கள் அல்லது மண்ணில் உயிர்வாழக்கூடியது. இந்த வித்துக்கள் பிறகு காற்றின் மூலம் மலர்களுக்குப் பரவுகிறது. பூச்சிகள் மற்றும் பறவைகள் இந்த நோயின் பிற காரணிகளாகும். பூப்பூத்தலின் பிந்தைய நிலைகளிலும் அல்லது பழம் உருவாகும் கட்டத்தின் ஆரம்ப நிலையிலும் அடிக்கடி ஏற்படும் மழைப்பொழிவு அல்லது ஈரப்பதமான வானிலை ஆகியவை இந்த நோய்க்கு உகந்த சூழலாகும். பெரும்பாலும், இதய அழுகல் அறுவடைக்குப் பிறகு, போக்குவரத்து அல்லது சேமிப்பின் போது மட்டுமே அறியப்படும். இந்தப் பூஞ்சை மாதுளம் பழத்திற்குள் வளர்ச்சியடைந்து, அவற்றை அழுகச்செய்து, விற்க முடியாமல் ஆக்கிவிடும்.