மற்றவை

சோளம் நீண்ட கரிப்பூட்டை நோய்

Tolyposporium ehrenbergii

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கதிர்களில் பாலாடை போன்ற பழுப்பு நிற, உருளைகளை போன்று, சற்று வளைந்த "கரிப்பூட்டை ஸ்பாரகக்கூட்டம்" சிதறி காணப்படும்.
  • ஸ்போரகக்கூட்டம் வெடித்து, கருநிற விதைமூல குவியல்களை வெளியிடும்.
  • 8-10 கருத்த பழுப்பு நிற மெல்லிழை கொத்துக்கள் வெளிப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

இந்த நோய் பொதுவாக ஒப்பீட்டளவில் சிறுபூவின் சிறிய பகுதியை மட்டுமே பாதித்து, அவற்றை "கரிப்பூட்டை ஸ்போரகங்களாக" மாற்றி, கதிர்களின் மீது அவை சிதறி காணப்படுகிறது. இந்த ஸ்போரகங்கள் நீண்ட, நீளுருளை போன்ற, சற்று வளைந்த பூஞ்சைக் கட்டமைப்புகளை கொண்டிருக்கும். இவை ஒப்பீட்டளவில் தடித்த பாலாடை போன்ற-பழுப்பு நிற மென்படலத்தால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஸ்போரகக்கூட்டமும் அதன் நுனியில் பிளந்து, கருப்பு நிற விதைமூல திரள்களை வெளியிட்டு, நோயை மேலும் பரப்புகிறது. இந்த அமைப்புக்குள் சுமார் 8-10 கருத்த பழுப்பு நிற மெல்லிழைகள் காணப்படும், இவை எஞ்சிய தாவர மலர் திசுக்களை பிரதிபலிக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய் ஏற்படுவதை தடுக்க கரிம பாதரசம் கலந்த மருந்து கலவையை கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு எந்த ரசாயன சிகிச்சையும் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் டாலிபாஸ்போரியம் எஹ்ரென்பெர்கி என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இதன் விதை மூலங்கள் ஒன்றோடு ஒட்டி பந்துகளை போன்று உருவாகின்றன, இவை மண்ணில் பல ஆண்டுகள் வாழ்வதற்கு உதவுகிறது. இந்த விதைமூல பந்துக்கள் சோள விதைகளில் ஒட்டிக்கொண்டு, தொற்று நோய்க்கு முதல் காரணமாக அமைகிறது. இந்த அறிகுறிகள் விதைமூல பந்துகள் சிறுபூவின் திசுக்களில் முளைத்து,மேலும் விதைமூலங்களை உற்பத்தி செய்யும்போது, சோள பயிர்கள் வளரத் தொடங்கும் கட்டத்தில் ஏற்படும். இவை மற்ற தாவரங்களின் இலைகளுக்கு காற்று மூலம் பரவி, அதன் அடிகளுக்கு சென்று, ஒவ்வொரு பூங்கிளைகளிலும் நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. காற்று மூலம் பரவும் சிதல்கள் இலைஉறைகளில் தேங்கியிருக்கும் நீர்துளிகளில் தங்கி, அதில் முளைத்து, பின்வரும் பருவகாலத்தில் கதிரிலிருந்து வெளிப்படும் சிறுபூக்களை தாக்குகிறது.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான விதைகளை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • பல நோய் எதிர்ப்பு திறன் அல்லது சகிப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெறுகின்றன, அவற்றை மட்டுமே நடவு செய்யுங்கள்.
  • நோயுற்ற தானியங்கள் மற்றும் தாவர பொருள்களை உடனடியாக சேகரித்து, அழித்து விடுங்கள்.
  • மண்ணில் உள்ள விதைமூலங்கள் கருகுவதை உறுதிசெய்வதற்கு 2-3 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்யுங்கள்.
  • டி.எஹ்ரென்பெர்கி முளைக்கும் பருவத்தில், காற்றின் மூலம் பரவும் சிதல்கள் இளம் தாவரங்களை தாக்குவதை தடுக்க பருவ காலத்தின் ஆரம்பத்திலேயே நடவு செய்ய வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க