வாழைப் பழம்

வாழைப்பழத்தில் பாக்டீரியாவின் மென் அழுகல் நோய்

Pectobacterium carotovorum

நுண்ணுயிரி

சுருக்கமாக

  • அருவருப்பான துர்நாற்றத்துடன், வேர் வழிச் சந்ததிகளின் உட்புறத் திசுக்கள் அழுகிப்போகும்.
  • பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர் தோய்த்த பகுதிகளுடன் கழுத்து மண்டலம் மற்றும் இலைகளின் அடிப்பகுதி அழுகிப்போகும்.
  • தண்டுகளின் அடிப்பகுதி உப்பி, பிளவுபடும்.பொதுவாக மரத்தின் வீரியம் குறைந்துபோகும், அதனைத் தொடர்ந்து இலைகள் உலர்ந்துபோகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகளானது, சமீபத்தில் நடவு செய்த தாவரங்களில் உள்ள போலிதண்டுகள் மற்றும் வேர்களின் உட்புறத் திசுக்கள் அழுகிப்போகும். இது உள்புற திசுக்களில் கரும்பழுப்பு அல்லது மஞ்சள் நிற நீர்தோய்த்த பகுதிகள் மற்றும் அருவருப்பான துர்நாற்றம் ஆகியவற்றினால் வகைப்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட தாவரங்களின் கழுத்துப்பகுதி பிளவுபட்டு திறக்கும்போது, மஞ்சள் முதல் சிவந்த கசிவுகள் காணப்படும். கழுத்துப்பகுதி அழுகிப்போதலைத் தொடர்ந்து இலைகளின் வீரியம் திடீரென இழந்துவிடும், பின்னர் இலைகள் முழுவதுமாக உலர்ந்து போகும். நோயின் பிந்தைய நிலைகளில், மரப்பட்டையின் அடிப்பகுதி வீங்கி, பிளவுபடும். முதிர்ந்த தாவரங்களில், கழுத்து மண்டலத்திலும் மற்றும் இலை தளங்களிலும் அழுகல் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட தாவரங்களை இழுத்தால், கழுத்துப்பகுதி அருகே அவை உடைந்து, மண்ணில் தண்டுகளையும் மற்றும் வேர்களையும் விழச்செய்யும். நடவு செய்த 3-5 மாதம் கழித்து இந்த அறிகுறிகள் திடீரென தென்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க எந்தவொரு உயிரியல் சிகிச்சையும் தற்போது இல்லை. நோய் கண்டறிந்த பிறகு, பாதிக்கப்பட்ட தாவரங்களை குணப்படுத்தவோ அல்லது நோய்த்தொற்றை குறைக்கவோ சாத்தியம் இல்லை. ஏதேனும் உயிரியல் சிகிச்சைகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். நோய் கண்டறிந்த பிறகு, பாதிக்கப்பட்ட தாவரங்களை குணப்படுத்தவோ அல்லது நோய்த்தொற்றை குறைக்கவோ சாத்தியம் இல்லை. ஏதேனும் இரசாயன சிகிச்சைகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய் மண்ணில் பரவக்கூடிய பாக்டீரியம் பெக்டோபாக்டீரியம் கரோட்டோவொரமின் ஒரு கிளையினத்தால் ஏற்படுகிறது. இது ஈரமான மண் மற்றும் பயிர் கழிவுகளில் வாழ்கிறது. இது மழை மற்றும் நீர்பாசன நீர் வழியாக மரங்களுக்கு இடையே பரவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட தாவர பொருட்கள் மூலமும் பரவுகிறது. முக்கியமாக இளம் தாவரங்கள் (வேர் வழிசந்ததிகள்) இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன. நோய்க்கிருமி தாவர திசுக்களின் இயற்கை மற்றும் செயற்கை காயங்கள் மூலம் வேர் அமைப்பில் நுழைகிறது. அறிகுறிகளானது மரப்பட்டையின் உட்புற திசுக்கள் அழுகிப்போகுதல் மற்றும் நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்துக் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. அதிக ஈரப்பதம் மற்றும் அடிக்கடி மழைப்பொழிவு பாக்டீரியா வளர்ச்சியை ஆதரிக்கின்றன. கோடைக் காலத்தில் சூடான, ஈரமான பருவ நிலைகளில் தொற்று நோய் மோசமாக உள்ளது. குலைகள் உருவாகும் நேரத்தில் நோய் ஏற்படும் போது பொருளாதார இழப்புகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • கடுமையான நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு இணங்கவும்.
  • நம்பகமான மூலங்களில் இருந்து அல்லது ஆரோக்கியமான வேர் பகுதியில் இருந்து ஆரோக்கியமான தாவர பொருட்களை பயன்படுத்தவும்.
  • தாவரங்களுக்கு இடையே சரியான இடைவெளிவிடவும்.
  • வயலில் நீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க நல்ல வடிகால் வசதியினை உறுதிப்படுத்துங்கள்.
  • முறையாக மக்கிய கரிமப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயல் வேலைக்குப் பிறகு மாசுபோக்கியைக் கொண்டு உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் தொற்று நீக்கவும்.
  • குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, எதிர்ப்பு திறன் மற்றும் புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • பயிர்ச்செய்கையில் அனைத்தும் கவனமாக கையாளப்படுவதை உறுதி செய்யவும்.
  • இயந்திரங்களினால் ஏற்படும் காயங்களைத் தவிர்க்கவும்.
  • இலை தொகுதிகள் ஈரமாக இருக்கும் போது, வயலில் பணி செய்யவோ அல்லது உரமிடவோ வேண்டாம்.
  • வறண்ட வானிலைகளில் அறுவடை செய்யவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அவற்றை எரித்து அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க