கொய்யா

கரி படிந்த பூஞ்சை (ஸூட்டி மோல்ட்)

Pezizomycotina

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழங்களின் மீது அடர் சாம்பல் நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையான பூஞ்சை வளர்ச்சி ஏற்படுகிறது.
  • இலைகள், காம்புகள் மற்றும் தண்டுகளும் பாதிக்கப்படலாம்.
  • இலைகள் இறந்து, உதிரக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

27 பயிர்கள்

கொய்யா

அறிகுறிகள்

மா மரங்களிலும், பூச்சிகளால் ஏற்கனவே உண்ணப்பட்ட தாவரங்களிலும், கரி படிந்த பூஞ்சையைக் காணலாம். இந்தப் பூஞ்சை உண்மையில் தேன்பனி (ஹனிட்யூ) எனப்படும், பூச்சிகள் பிற பூச்சிகளை ஈர்க்க உற்பத்தி செய்யும் ஒருவகையான ஒட்டும் குணம் கொண்ட ஒரு இனிப்பான சுரப்பாகும். இந்த தேன்பனியை ஆதாரமாகக் கொண்டு, பூஞ்சை படிப்படியாக பாதிக்கப்பட்ட தாவரப் பகுதியின் மேற்பரப்பை மூடி, அதில் கருப்பின் பல்வேறு நிற மாற்றத்தைக் கொண்டு வண்ணம் தீட்டும். இந்தக் கரி படிந்த பூஞ்சை, ஒட்டுண்ணியும் அல்ல, நோய்க் காரணியும் அல்ல. எனவே அவை தாவரத் திசுக்களில் குடியேறுவதோ, அறிகுறிகளைத் தூண்டுவதோ இல்லை. இருப்பினும், அவை ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துவதற்கும், வளிமண்டலத்தோடு வாயுக்களைப் பரிமாறுவதற்குமான ஒரு தாவரத்தின் திறனை மாற்றியமைக்கின்றன. கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் இறந்து உதிர்ந்துவிடக்கூடும், இதன் விளைவாகத் தாவர வளர்ச்சியும், சமாளித்து வாழும் திறனும் பாதிப்படைகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வெள்ளை ஈக்கள், அஃபிட் எனப்படும் செடிப்பேன்கள், செதில்கள், எறும்புகள், மற்றும் மாவுப் பூச்சி (மீலி பக்) போன்றவற்றைத் தடுக்க கரிம பரந்த நிலை கலவையான வேப்ப எண்ணெய்யின் தயாரிப்புகளை பயன்படுத்தவும். வேப்ப எண்ணெய் பூஞ்சையின் வளர்ச்சியையும் கூட குறைக்கிறது. பூச்சிக்கொல்லி சோப்பு அல்லது பாத்திரம் கழுவும் சோப்பை (எ.கா. 5 லிட்டர் தண்ணீருக்கு ஒரு தேக்கரண்டி) பாதிக்கப்பட்ட தாவரங்களில் தெளிக்கலாம். சோப்புக் கலவையை தாவரங்களில் நன்கு படிய விட்ட பிறகு, அதைக் கழுவி விடவும், அதன்மூலம் பூஞ்சையை நீக்கி விட முடியும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தாவரங்களை உண்ணும் பூச்சிகளைத் தடுக்க மாலத்தியான் போன்ற ஆர்கனோபாஸ்பேட் குடும்பத்தின் செயற்கை பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மாம்பழ இலை தத்துப்பூச்சி (அம்ரிடோடஸ் அட்கின்ஸோனி) போன்ற உணவுக்கடத்தித் திசுக்களை சாப்பிடும் பூச்சிகள், வெள்ளை ஈக்கள், அஃபிட் எனப்படும் செடிப்பேன்கள் மற்றும் தாவர சத்துகளை உறிஞ்சும் பல வகைகளும் இந்த நோயுடன் தொடர்புடையவை. இவை உண்ணும் போது, தேன்பனியை அந்தந்த தாவரங்களின் மேற்பரப்பில் சுரக்கும், இது கரி படிந்த பூஞ்சையின் வளரச்சிக்கு சரியான மூலமாக அமைகிறது. இந்தத் தேன்பனி அருகிலுள்ள இலைகளிலும், செடிகளிலும் சொட்டக் கூடும், இதனால் பூஞ்சை மேலும் பரவுகிறது. இந்தப் பூஞ்சை, காளானைப் போலவோ வித்துகளாகவோ தாவர பாகங்களிலோ, கருவிகளிலோ போக்குவரத்து வாகனங்களிலோ உயிர் வாழ்கின்றன. பூச்சிகளும் ஒரு தாவரத்திலிருந்து மற்றொன்றுக்கு இந்தப் பூஞ்சையைப் பரப்புகின்றன. உதாரணமாக, எறும்புகள், தங்கள் சொந்த நலனுக்காகக் கரி படிந்த பூஞ்சையைப் பாதுகாக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • மரங்களுக்கு இடையே போதுமான இடைவெளிவிடுவதையும், வேண்டிய அளவு சூரிய ஒளியை வழங்குவதையும் உறுதி செய்யவும்.
  • மரங்களைச் சுற்றி உறுதியான தடுப்புகளை உருவாக்கவும் அல்லது மரங்களை எறும்புகளிடமிருந்து தடுக்கவும் மற்றும் தாவர சத்துகளை உறிஞ்சும் பூச்சிகள் மரங்களை அடைவதைத் தடுக்கவும் மரங்களுக்கு போதுமான அளவு நீரையும் உரத்தையும் வழங்கி, பட்டயத்தை (ஃபலோம்) உண்ணும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக மரங்களுக்குச் சரியான அளவு இயற்கையான எதிர்ப்பு சக்தி உண்டாவதை உறுதி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க