வெங்காயம்

கரும்பூசண நோய்

Aspergillus niger

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • தாவரங்களில் கருப்பு, பூசண திரள்களின் தோற்றம் காணப்படும்.
  • நீர் தோய்த்த செதில்கள் காணப்படும்.
  • நரம்புகள் நெடுகிலும் கோடுகளின் உருவாகும்.
  • விதை மற்றும் பட்டை அழுகல் நோயின் அறிகுறிகள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


வெங்காயம்

அறிகுறிகள்

விதைகள் முளைக்காமல் அழுகிப்போகும், அவ்வாறு முளைத்தால், கழுத்துப்பட்டை பகுதி நீர் தோய்த்த புண்களுடன் அழுகிவிடும். சேதமடைந்த தாவர பகுதிகளிலும் நீர் தோய்த்த புண்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட பயிரைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். வெங்காயத்தில், முளைக்கும் ஆரம்ப காலத்தில் பட்டிகை பகுதியில் நாற்றுகள் அழுகும். பூஞ்சை அச்சு சதைப்பற்றான குமிழ் திசுக்களின் நரம்புகள் நெடுகிலும் வளர்கின்றன. வேர்க்கடலையில், பூஞ்சையானது பட்டிகை அல்லது உச்சி அழுகலை ஏற்படுத்துகிறது, இது வேர் சுருண்டுகொள்ளுதல் மற்றும் தாவரத்தின் மேல் பகுதியின் சிதைவு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. கொடிகளில், ஆரம்ப அறிகுறிகளில் தொற்று இடத்தில் சிவப்பு நிற சாறின் குண்டூசி சொட்டுகள் அடங்கும். அறுவடைக்கு பிந்தைய சிதைவு நிறமாற்றம், தரம் மோசமடைதல் மற்றும் பல்வேறு பயிர்களின் வணிக மதிப்பு குறைந்து போகுதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உங்கள் மண்ணை ட்ரைக்கோடெர்மா (எஃப்.ஒய்.எம். ஆல் செறிவூட்டப்பட்டது) கொண்டு நனைக்கவும். வேப்பம் பிண்ணாக்கு பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஏ. நைகெரின் பரவலைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். உங்கள் விதைகளை நடவு செய்வதற்கு முன் 60 நிமிடங்களுக்கு 60° செல்சியஸ் சூடான நீரில் சிகிச்சை செய்யுங்கள். ஃபெனாலிக் சேர்மங்கள் இருப்பதால் சிவப்பு செதில் இலைகளைக் கொண்ட வெங்காய வகைகள் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை மான்கோஜெப் கொண்டு நனைக்கவும் அல்லது மான்கோஜெப் மற்றும் கார்பென்டசைன் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தவும், மாற்றாக திரம் கூட பயன்படுத்தலாம். ட்ரையசோல் மற்றும் எக்கினோகாண்டின் பூஞ்சைக்கொல்லிகள் ஆகியவை பிற பொதுவான சிகிச்சைகள்.

இது எதனால் ஏற்படுகிறது

கரும்பூசணம் என்பது ஒரு பொதுவான பூஞ்சை ஆகும், இது பல்வேறு வகையான மாவுச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் தோன்றும். இது உணவு கெட்டுப்போகுதல் மற்றும் சீரழிவு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அஸ்பெர்ஜில்லஸ் நைகெர் என்ற பூஞ்சை காற்று, மண் மற்றும் நீர் ஆகியவற்றால் பரவுகிறது. இது பொதுவாக மட்குண்ணிகள் ஆகும், இது இறந்த மற்றும் அழுகும் பொருளில் உயிர் வாழ்கிறது, ஆனால் ஆரோக்கியமான தாவரங்களிலும் வாழக்கூடும். மத்திய தரைக்கடல், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகள் போன்றவை இந்த பூஞ்சை வாழக்கூடிய பொதுவான மண்ணாகும். இதன் உகந்த வளர்ச்சி வெப்பநிலை 20-40° செல்சியஸ் ஆகும், 37° செல்சியஸில் இதன் நல்ல வளர்ச்சி இருக்கும். மேலும், பழங்களை உலர்த்தும் செயல்பாட்டில், ஈரப்பதம் குறைகிறது மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் அதிகரிக்கிறது, இதன் விளைவாக பூஞ்சையின் ஸெரோடோலரண்ட் (வறண்ட நிலையை பொறுத்துக்கொள்ளும்) பூசணத்திற்கு சாதகமான ஊடகம் கிடைக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நல்ல வடிகால் உள்ள நிலத்தைத் தேர்வுசெய்யவும்.
  • விதைகளில் பூசண வித்துக்கள் எதுவும் இல்லாமல் இருப்பதையும், நாற்றுகள் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்யவும்.
  • சிவப்பு செதில் இலைகள் உடைய வெங்காய வகைகள் போன்ற எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • ஈரமான காலநிலையில் பயிர்களை அறுவடை செய்ய வேண்டாம்.
  • போக்குவரத்தின் போதும், குமிழ்களை சேமிப்பகத்தில் வைக்கும்போதும் எடுக்கும்போதும் நிலையான வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதத்தை பராமரிக்கவும்.
  • அறுவடைக்குப் பிறகு, எஞ்சிய அனைத்து குப்பைகளையும் சேகரித்து எரிக்கவும்.
  • அறுவடைக்குப் பிறகும், சேமிப்பு மற்றும் விற்பனைக்கு முன்பும் குமிழ்களை கவனமாக உலர வைக்கவும்.
  • வெப்பமான காலநிலையில், ஈரப்பதம் 80% க்கும் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • ஒரே நிலத்தில் அடுத்தடுத்து பயிர் செய்யும்போது பாதிக்கப்படக்கூடிய பயிர்களுக்கும், அதே ரகத்தினைச் சேர்ந்த தொடர்பு பயிர்களுக்கும் இடையில் 2-3 ஆண்டு சுழற்சியைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க