நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

சிட்ரஸ் இலைப்புள்ளி நோய்

Pseudocercospora angolensis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • அடர் ஓரங்கள் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் வெளிர் பழுப்பு முதல் சாம்பல் நிற புள்ளிகள் காணப்படும்.
  • இளம் பழங்கள் மீது மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் உப்பிய, கட்டி போன்ற வளர்ச்சி காணப்படும்.
  • முதிர்ந்த பழங்கள் மீது மூழ்கிய பழுப்பு நிற நடுப்பகுதியுடன், தட்டையான சிதைவுகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

வட்டமான, பெரும்பாலும் ஒற்றைப் புள்ளிகள் இலைகளில் தோன்றும் மற்றும் அவற்றின் விட்டம் 10 மி.மீ. வரை பெரிதாகும். அவை உலர்ந்த காலநிலைகளில், சிவந்த விளிம்புகள் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் வெளிறிய பழுப்பு அல்லது சாம்பல் நிற மையப்பகுதியைக் கொண்டிருக்கும். மழைக்காலம் துவங்கிய பிறகு, அவை கருப்பு நிறமாகி, வித்துக்களால் மூடப்படும். அவை இலைகளின் கீழ் பகுதியில் குறிப்பாகக் காணப்படும். நோய் அதிகரிக்கையில், புள்ளிகள் ஒருங்கிணைந்து, இலைகளில் பொதுவான பச்சைய சோகையை ஏற்படுத்துகின்றன, சில நேரங்களில் அதனை தொடர்ந்து இலையுதிர்வு ஏற்படும். எப்போதாவது, அந்த புள்ளியின் நடுப்பகுதி கீழே விழுந்து, அந்தப் பகுதியில் துளையை ஏற்படுத்துகிறது. பச்சை காய்களில், இந்தப் புள்ளிகள் பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன், வட்டவடிவம் முதல் ஒழுங்கற்றவடிவில், தனியாக அல்லது ஒன்றாகக் காணப்படும். கடுமையான தொற்றுகள் கருப்பு நிற, உப்பிய, கட்டிகள் போன்ற வளர்ச்சியையும், அதனை தொடர்ந்து மைய சிதைவுகளும், வீழ்ச்சியும் ஏற்படுகிறது. முதிர்ந்த பழங்களில் உள்ள காயங்களின் அளவு மாறுபடுகின்றன, ஆனால் வழக்கமாக தட்டையாக இருக்கும். அவை சில நேரங்களில் நீர் தோய்த்த சற்று பழுப்பு நிற மையத்தைக் கொண்டிருக்கும். எப்போதாவது காயங்கள் இலைக்காம்புகளிலிருந்து தொடங்கி, தண்டுகளில் ஏற்படும். பலவிதமான இத்தகைய காயங்கள் கருகல் நோயை ஏற்படுத்தலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிட்ரஸ்லடிஃபோலியா மற்றும் சிட்ரஸ் எலுமிச்சை ஆகிய பழ இனங்களிலிருந்து பெறப்படும் இயற்கை சாறுகள் நோய்க்கான வளர்ச்சியைக் குறைக்கிறது. எலுமிச்சை இலைச் சாறு மற்றும் சிட்ரஸ் அவுரண்டிஃபோலியா மற்றும் பாட்டில் ப்ரூஷ் செடிகள் (கால்ஸ்டீமன் சிட்ரினஸ் மற்றும் கால்ஸ்டீமன் ரிஜிடஸ்) ஆகியவற்றின் எண்ணெய் நோய்கிருமியைத் தடுக்கும். இந்த விளைவுகள் இதுவரை ஆய்வுகூடங்களில் கட்டுப்பாட்டு நிலையில் மட்டுமே ஆராயப்பட்டன. காப்பர் அடிப்படையிலான பூஞ்சைக் கொல்லிகளையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ட்ரைஃப்ளாக்சிஸ்ட்ரோபின் அல்லது மான்கோசெப் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக்கொல்லிகள் ஒவ்வொன்றுடனும் கனிம தெளிப்பான் எண்ணெயை கலத்தல், பூஞ்சையை அழித்து நல்ல முடிவுகளை ஏற்படுத்துகிறது. குளோரோதலோனில், தாமிரம் மற்றும் அவற்றின் கலவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான பூஞ்சைக்கொல்லிகளும் பயனுள்ளதாக இருக்கும். மழைப்பொழிவு வித்துக்களை உற்பத்தி செய்ய தூண்டுவதால், மழைக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் சூடோசெர்க்கோஸ்போரா அங்கொலென்சிஸ் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. வித்துக்களின் உற்பத்திக்கு சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்வரை, இது பெரும்பாலும் பாதிக்கப்பட்ட தாவர பொருள் மீது செயலற்ற காயங்களாக வாழ்கிறது. நீடித்திருக்கும் ஈரப்பதமான வானிலை, அதனைத் தொடர்ந்த உலர்ந்த சூழ்நிலை மற்றும் அவற்றுடன் 22-26°C மிதமான குளிர்ந்த வெப்பநிலை ஆகியவை இவற்றின் வாழ்க்கை சுழற்சிக்கு சாதகமாக உள்ளது. இலைகள் பரவுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளன, ஏனெனில் இலைகளின் காயங்கள் உற்பத்தி செய்யும் வித்துக்கள், பழங்களின் காயங்கள் உற்பத்தி செய்யும் வித்துக்களை விட அதிகமானது. காற்றில் பரவும் வித்துக்களால் இந்த பூஞ்சை நீண்ட தூரம் பரவுகிறது. அதே சமயம், இந்த பூஞ்சை அதே இடத்தில் நீர்த்துளிகள் மற்றும் மழை துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பொருட்களை பிற வயல்கள் அல்லது இடங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் மனிதர்களால் இந்த நோய் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது சகிப்புத்தன்மை கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • கீழே விழுந்த பழங்கள் மற்றும் இலைகளை சேகரித்து, அவற்றை எரித்து அல்லது புதைத்து அழித்து விடவும்.
  • குறுக்கு மாசுபாட்டைத் தவிர்ப்பதற்காக பழத்தோட்டத்தைச் சுற்றி காற்றுத் தடுப்புகளை உருவாக்குங்கள்.
  • மரங்கள் இடையே பரந்த இடைவெளி விட்டு பழத்தோட்டத்தில் காற்றோட்டத்தை மேம்படுத்தவும்.
  • தொடர்ந்து தாவரங்களை சீர்திருத்தம் செய்யவும் மற்றும் மாற்று புரவலன்களுடன் ஊடுபயிர் செய்வதை தவிர்க்கவும்.
  • நீர்ப்பாசனத்தின் மூலம் பழத்தை ஒத்திசைக்க முயற்சிக்கவும்.
  • மாசுபட்ட பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட தாவரங்கள், மரங்கள் அல்லது பழங்கள் போக்குவரத்தினை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க