Alternaria sp.
பூஞ்சைக்காளான்
அல்டெர்னரியா ஆரசிடிஸ் எனும் நுண்ணியிரி சிறிய பழுப்புநிற, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட புள்ளிகளையும் அதனைச் சுற்றி மஞ்சள் நிற ஒளிவட்டத்தினையும் இலைகளில் உருவாக்கும். அல்டெர்னரியா டெனுசிமா வி வடிவில் கருகல் நோயினை இலைகளின் நுனிப்பகுதியில் உருவாக்குகிறது. அதன் பின்பு, கரும்பழுப்பு சிதைவுகள் மைய நரம்பு வரை விரிவடையும் மற்றும் இலை முழுவதும் கருகிய தோற்றத்துடன் காணப்படும், இலைகள் உட்புறமாக சுருங்கும், பின்னர் உடையும் நிலைக்கு மாறும் (இலை கருகல்). அல்டெர்னரியா அல்டெர்னடா சிறிய, வட்ட வடிவிலிருந்து ஒழுங்கற்ற வடிவமாக மாறி இலைகள் முழுவதும் பரவும். ஆரம்பத்தில் வெளிறியதாகவும், நீரினால் ஊறியதாகவும் இருந்து பின்னர் பெரியதாகி, அவை சிதைந்து போவதுடன், அருகிலுள்ள நரம்புகளையும் தாக்கும் (இலைப் புள்ளி மற்றும் நரம்பு சிதைவு). மையப்பகுதி விரைவாக உலர்ந்து சிதைவுற்று, இலைக்கும் ஒருவிதமான முரட்டுத்தனமான தோற்றத்தினைக் கொடுக்கும். அத்துடன் இலை உதிர்தலையும் ஏற்படுத்தும்.
இந்நோய்க்கு எதிரான சிறப்பான மாற்று சிகிச்சை முறை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. அறிகுறிகள் தோற்றமளித்த பிறகு, காப்பர் ஆக்சிகுளோரைடு என்பவற்றை 1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் கலந்து தெளிப்பது இந்த நோய்க்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முதல் அறிகுறிகள் தோன்றியபின், மான்கோஜெப் (3 கிராம் / லிட்டர் தண்ணீர்) என்பவற்றை கொண்டு மேற்கொள்ளும் இலைத்திரள் பயன்பாடு இரசாயனக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த நோய்கள் மூன்று விதமான மண் வழியே பரவும் அல்டெர்னரியா உயிர்களால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட விதைகள் நோயினைப் பரப்புவதற்கு முதன்மை மூலமாகத் திகழ்கின்றன. ஒருவேளை அவ்வாறு பாதிக்கப்பட்ட விதைகளைப் பயிரிட்டு, சுற்றுசூழல் நிலைமைகளும் சாதகமாக இருந்தால், அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும். இரண்டாம் நிலை மூலங்களான பூச்சிகளும், காற்று அடிப்பதும் நோய் பரவுவதற்கு முக்கியக் காரணமாகும். 20 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான வெப்பநிலை, நீண்ட காலம் இலை ஈரமாக இருப்பது மற்றும் அதிக ஈரப்பதமான சூழ்நிலை நிலவுவது போன்றவை நோய் பரவுவதற்கான ஏற்ற சூழ்நிலைகளாகும். மழைக்காலத்திற்கு பிந்தைய பருவத்தில், வேர்க்கடலை பயிர்களுக்கு நீர் பாசனம் செய்தல் இந்த நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமையலாம். நோய்த் தாக்கம் மற்றும் அதன் பாதிப்பு நிலையினைப் பொறுத்து, காய் மற்றும் தீவன உற்பத்தியில் ஏற்படும் இழப்பு 22% முதல் 63% வரை இருக்கும்.