அரிசி

குறுகிய பழுப்பு நிற இலைப்புள்ளி நோய்

Sphaerulina oryzina

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளின் அச்சில் நேரியல் சிதைவுகள்.
  • இலை உறைகளில் முற்போக்கான நிறமாற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

நேரியல் இலை சிதைவுகள் 2-10 மிமீ நீளமும், 1-1.5 மிமீ அகலத்திற்கு குறைவாகவும் காணப்படும்.. இந்த வளர்ச்சி அமைப்பு இலைக்கு இணையாக இருக்கும். சிதைவுகள் அடர் பழுப்பு மையத்தினையும் மங்கிய வெளிப்புற ஓரத்தினையும் கொண்டிருக்கும். இலைகளில் இருக்கும் சிதைவுகள் போன்றே அவற்றின் உறைகளிலும் சிதைவுகள் ஏற்பட்டிருக்கும். உமியில் மற்றும் மலர்க்காம்புகளில் உள்ள சிதைவுகள் சிறியதாக, பக்கவாட்டில் பரவத் தொடங்கும். தடுப்பு வகை பயிர்களில் சிதைவுகள் குறுகிய அளவில், சிறியதாக மற்றும் நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய பயிர் வகைகளை விட அடர் நிறத்தில் காட்சியளிக்கும். பூ பூக்கும் காலத்திற்கு சற்று முன்னதாக, வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் புள்ளிகள் தோன்றும். இந்நோய் தானியங்களை முன் கூட்டிய முதிர்ச்சியடைய செய்துவிடும். விதைகள் அல்லது தானியம் ஊதா – பழுப்பு வண்ணமாகும். தாவரங்கள் கீழே சாய்ந்து கிடப்பதையும் காணலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், ஸ்பாருலினா ஒரைசினாக்கு எதிராக, எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் தற்போது இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். குறுகிய பழுப்பு நிற புள்ளிகள் பயிர்களுக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தெரிந்தால், ப்ரோபிகோனாஸோலை தெளித்தல் முறையில் பயிரின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளின்போது பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

வழக்கமாக, வெப்பநிலை 25 – 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் பகுதிகளில் மற்றும் மண்ணில் சாம்பல் சத்து பற்றாக்குறையாக இருப்பின் இந்நோய் ஏற்படுகிறது. பயிர் வளர்ந்து குறிப்பிட்ட நிலையினை அடைந்த பின்னரே இவை தோன்றும். மாற்று புரவலன்களில் இப்பூஞ்சைகள் உயிர்வாழ்ந்து புதிய நெற்பயிர்களுக்கு பரவுகின்றன. கதிர்கள் உருவாகும் சமயங்களில் இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது மற்றும் பயிர்கள் முதிரும்போது நோயின் தாக்கமும் அதிகரிக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளை பயிரிடவும்.
  • பிற வகை பயிர்கள் களத்திலோ அல்லது களத்திற்கு வெளியிலோ இருப்பின் அவற்றினை நீக்கிவிடவும்.
  • சமச்சீரான அளவில் சத்துக்கள் கிடைக்கும்படி செய்யவும்.
  • போதுமான அளவில் பொட்டாசியம் அளிக்கப்பட்டதை உறுதிசெய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க