அரிசி

அரிசியின் இலை சூட்டுப்புண்

Monographella albescens

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலை நுனியிலிருந்து தொடங்கி, வெளிறிய, நீர் தோய்த்த சேதங்கள் இலைகளின் மீது காணப்படும்.
  • இந்த சேதங்கள் பெரிதாகி, இலை பரப்பின் மீது சூட்டுப்புண்ணை ஏற்படுத்தும்.
  • இலைகள் வாடிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

பயிரின் வளர்ச்சி நிலை, பயிர்வகை மற்றும் பயிர்களின் அடர்த்தி ஆகியவற்றினைப் பொறுத்து இலை சூட்டுப்புண் நோயின் அறிகுறிகள் அமையும். பெரும்பாலான வகைகளில், சாம்பல் – பச்சை நிறம் கொண்ட நீர் தேங்கிய சிதைவுகள் இலைகளின் ஓரங்கள் அல்லது விளிம்புகளில் உருவாகும், பின்னர் இந்த சிதைவுகள் இலையின் நுனிகள் அல்லது ஓரங்களில் இருந்து தொடங்கி, வெளிர் பழுப்பு மற்றும் அடர் பழுப்புநிறத்தில் வளைய வடிவிலான சிதைவுகளாக பரவும். இந்த சிதைவுகள் தொடர்ந்து பெரிதாகும்போது, இலையின் கூர்முனைப்பகுதி அதிகமான அளவில் இலை சூட்டுப்புண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகள் வறண்டு, இலைக்கு கருகிய தோற்றத்தினை வழங்கும். சில நாடுகளில், வளைய வடிவிலான சிதைவுகள் அரிதாகவே காணப்படும், கருகிய அறிகுறிகள் மட்டுமே தோன்றும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இதுவரை இந்த நோய்க்கு எதிராக மாற்றுச் சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தியோபனேட்-மெத்தைல் போன்றவற்றில் விதையினை ஊறவைக்கும் சிகிச்சைகளைப் பயன்படுத்தி எம்.ஆல்பசென்ஸால் ஏற்படும் நோய்த்தொற்றை குறைக்கலாம். வயலில், மான்கோசெப், தியோபனேட் மெத்தில் @ 1.0 கிராம் / லி அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்ட இலைத்திரள் தெளிப்பான்களை இலை சூட்டுப்புண் ஏற்படுவதையும் அதன் தீவிரத்தையும் கணிசமாகக் குறைக்கின்றன. இந்த வேதியியல் பொருட்களை ஒன்று சேர்த்து பயன்படுத்துவதும் பலனளிக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

வழக்கமாக, பருவ காலத்திற்கு பின்னர் முதிர்ந்த இலைகளில் நோய் பரவுகிறது. ஈரப்பதமான வானிலை, அதிகப்படியான நைட்ரஜன் உரமளித்தல் மற்றும் நெருக்கமாக பயிரிடுதல் போன்றவை நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையாகும். 40 கிலோ/ஹெக்டேருக்கு மேல் நைட்ரஜன் இருப்பின் கருகல் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்படாத இலைகளுடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்ட இலைகளில் நோய் வேகமாக பரவும். பாதிக்கப்பட்ட விதைகள் மற்றும் முந்தைய அறுவடைக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பயிர்களின் பகுதிகள் போன்றவை நோய் தொற்றின் ஆதாரங்களாக அமைகின்றன. பாக்டீரியா இலைக் கருகல் நோயினை பூஞ்சை இலை சூட்டுப்புண் நோயிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க, வெட்டிய இலைகளை சுத்தமான தண்ணீரில் 5-10 நிமிடங்கள் மூழ்கவைத்து பார்க்க வேண்டும். அப்போது கசிவு ஏற்பட்டால் அவை பாக்டீரியா இலை கருகல் நோய். அவ்வாறு கசிவு ஏற்படவில்லை என்றால் அவை பூஞ்சை இலை சூட்டுப்புண் நோய் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • நோயெதிர்ப்பு வகை பயிர் வகைகள் கிடைத்தால் அவற்றினைப் பயன்படுத்தவும்.
  • நடவு செய்யும்போது பயிர்களுக்கு இடைப்பட்ட இடைவெளியினை சற்று அதிகமாக பராமரிக்கவும்.
  • மண்ணில் உள்ள சிலிகான் அளவினை அதிகமாக பராமரிப்பதனால் நோயின் பாதிப்பு குறைவதுடன், மகசூலும் அதிகரிக்கும்.
  • உரமளித்தலின்போது அதிகப்படியான நைட்ரஜன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • பக்கக் கன்றுகள் வளரும் நிலைகளில், நைட்ரஜனைப் பிரித்து சிறிது சிறிதாக பயிர்களுக்கு அளிக்கவும்.
  • களைகளை நிலத்தின் உள்ளே மற்றும் நிலத்தைச்சுற்றி அகற்றிவிடவும்.
  • அரிசி குச்சிகளுக்கு கீழே நன்றாக உழுதல் செய்யவும் மற்றும் பாதிக்கப்பட்ட அரிசிப் பகுதிகளை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க