அரிசி

அரிசியின் தண்டு அழுகல் நோய்

Magnaporthe salvinii

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சிறிய, ஒழுங்கற்ற கருப்பு நிற சிதைவுகள் இலை உறைகளில் காணப்படும்.
  • சிதைவுகள் பெரியதாகும்.
  • கணுவிடைப்பகுதிகள் அழுகி, சாயக்கூடும்.
  • நிரப்பப்படாமல், கீழே விழும் கதிர்கள், மாவு போன்ற தானியங்கள், பக்கக்கன்றுகள் இறந்து போகுதல்.
  • வெறுமையான, பாதிக்கப்பட்ட தண்டுகளுக்குள் அடர் சாம்பல் நிற பூசண வளர்ச்சி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

பொதுவாக பக்கக் கன்று வளர்ந்த பின்னரே அறிகுறிகள் காணப்படும். சிறிய, ஒழுங்கற்ற கருப்பு நிற சிதைவுகள், நீர் மட்டத்திற்கு அருகேயுள்ள இலை உறைகளில் காணப்படுவது ஆரம்ப நிலை அறிகுறிகளாகும். நோய் அதிகரிக்கையில், சிதைவுகள் பெரிதாகி, உறைகளின் உட்புறம் செல்லும், பின்னர் பழுப்பு – கருப்பு சிதைவுகளைத் தோற்றுவிக்கும். தண்டின் ஒன்று அல்லது இரண்டு கணுவிடைகள் அழுகும் மற்றும் சரிந்துபோகும் (மேல்தோல் மட்டும் அப்படியே இருக்கும்), இது எவ்வித பொருட்களும் இல்லாத தண்டுகளை உருவாக்கும், தானியமற்ற கதிர்கள், மாவுபோன்ற தானியங்கள் அல்லது பக்கக்கன்றுகள் அழிந்து போகுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். வெறுமையான, பாதிக்கப்பட்ட தண்டுகளின் உட்புற மேற்பரப்பில் சிறிய, கருப்பு பூசண நூல்கற்றைகளுடன் அடர்-சாம்பல் நிற பூஞ்சை இழைகள் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிறந்த கள மேலாண்மை நடைமுறை பயிற்சிகள், நோய்ப் பூஞ்சைகளுக்கு எதிரான உயிரிகளைப் பயன்படுத்துதல் போன்றவை தண்டு அழுகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு வலிடாமைசின் அல்லது ஹெக்ஸகோனசோல் (2 மில்லி / லி) ப்ராபிகோனசோல் (1 மில்லி / லி) அல்லது தியோபனேட் மெத்தில் (1.0 கிராம் / லி) போன்றவற்றின் அடிப்படையிலான இரசாயனங்களை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை, வழக்கமாக பக்கக்கன்றுகள் வளரும் நடுநிலையில் அல்லது நோய் ஆரம்பமாகும் நேரத்தில் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்கள் மாக்னபோர்தே சால்வினி என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன.இது இறந்த தாவர திசுக்களுக்குள் அல்லது மண்ணுக்குள் குளிர்காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கிறது. பின்னர், நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது (அதிக ஈரப்பதம், அதிக தழைச்சத்து உரங்களை இடுதல்), இதன் வித்துக்கள் மழை சாரல்கள் மற்றும் நீர் பாசனம் மூலம் பரவும். பின்னர் இது இலையை அடையும்போது, அதன் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு இலை வெட்டு வழியாக குடையும் ஒரு கிருமி குழாயை உருவாக்குகிறது. தவறான நடைமுறைகள் அல்லது பூச்சி தாக்குதலின் விளைவாக ஏற்படும் காயங்களினால் இந்த செயல்முறை எளிதாக்கப்படுகிறது. பயிர் முதிர்ச்சி அடையும்போது, நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. வெப்பமண்டலத்தில், அறுவடைக்குப் பிறகு அதிக ஈரப்பதமான காலங்கள் பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஏதுவாக இருக்கிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வகைகளைப் பயன்படுத்தவும்.
  • பயிரிடும்போது பயிர் அடர்த்தியினை குறைக்கும் வகையில் பயிரிடவும்.
  • நைட்ரஜன் அளவுகளைக் குறைத்து பயன்படுத்தவும் மற்றும் அவற்றினை பிரித்து வெவ்வேறு பயன்பாட்டின் மூலம் அளிக்கவும்.
  • மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவின் மதிப்பினை அதிகளவில் வைத்திருக்க, பொட்டாஷ் அளவினை அதிகரிக்கவும்.
  • வயல்களிலும், வயல்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பயிர்களை சேகரித்து எரித்துவிடவும் அல்லது அவற்றினை சிதைத்துவிடவும்.
  • இதற்கு மாற்றாக, அறுவடைக்குப் பின்னர் நெற்பயிரினை அடிவரையில் வைக்கோலுடன் சேர்த்துவெட்டவும்.
  • அவ்வாறு இல்லையெனில், மீதமுள்ள பயிர்க் கழிவுகளை மண்ணில் ஆழமாக புதைக்க வழிவகை செய்யவும்.
  • பாசன நீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்கவும்.
  • சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரையில் நிலத்தினை தரிசாக விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க