உளுந்து & பச்சை பயிறு

உளுந்து விதைப்புள்ளி நோய்

Colletotrichum lindemuthianum

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சிறிய, ஒழுங்கற்ற, நீர் தோய்ந்த புள்ளிகள் இலைகள், தண்டுகள், இலைக் காம்புகள் அல்லது காய்களில் தோன்றும்.
  • கரு நிற மையங்கள் மற்றும் பிரகாசமான ஓரங்களுடன் இணைந்த புள்ளிகள் நீர் தோய்த்த சிதைவுகளாக மாறும்.
  • தண்டுகள் மற்றும் இலைக் காம்புகளில் சொறி நோய் போன்று ஏற்படும்.
  • இலை உதிர்வும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


உளுந்து & பச்சை பயிறு

அறிகுறிகள்

அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தொற்று ஏற்படலாம், மேலும் அவை இலைகள், தண்டுகள், இலைக் காம்புகள் மற்றும் காய்களில் காணப்படும். விதை முளைத்த பிறகு தொற்று ஏற்பட்டால் அல்லது விதைகள் பாதிக்கப்பட்டால், நாற்றுகள் சிறிய துருபிடித்தது போன்ற புள்ளிகளுடன் காணப்படும், பின்னர் அவை கண்போன்ற புள்ளிகளாக பெரிதாகி, இறுதியாக கருகிவிடும். முதிர்ந்த தாவரங்களில், ஆரம்ப அறிகுறிகளாக ஒழுங்கற்ற கரும்பழுப்பு அல்லது கருப்பு நிற நீர் தோய்ந்த புள்ளிகள் தோன்றும், பொதுவாக இவை இலைகளின் கீழ்ப்புறத்தில் அல்லது இலைக் காம்புகளில் தோன்றும். காலப்போக்கில், இந்த புள்ளிகள் மூழ்கிய சிதைவுகளாக வளர்ந்து, கருத்த நடுப்பகுதியுடன், மஞ்சள், ஆரஞ்சு அல்லது பிரகாசமான சிவப்பு விளிம்புகளுடன் காணப்படும். இவை இலைகளின் மேற்பரப்பில் தோன்றும். காய்கள் துருப்பிடித்த நிறத்தில் சிதைவுகளை கொண்டிருக்கும், மேலும் அவை சுருங்கி, வாடி விடக்கூடும். கடுமையான தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதிகள் வாடி, கீழே விழுந்துவிடக்கூடும். தண்டுகள் மற்றும் இலைக்காம்புகள் மீது ஏற்படும் தாவர சொறிநோயை தொடர்ந்து, பொதுவாக இலை உதிர்வு ஏற்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உயிரியல் காரணிகள் உதவக்கூடும். பூஞ்சை டிரிகோடெர்மா ஹார்ஜியானம் மற்றும் பாக்டீரியா சுடோமோனஸ் ஃப்ளூரோசன்ஸ் ஆகியவற்றை கொல்லேட்டோடிரிகம் லிண்டெமுத்தியானம் என்னும் பூஞ்சையை எதிர்த்து போராட விதை சிகிச்சையாக பயன்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும் பூஞ்சைக்கொல்லி தெளிப்பான்களுள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வானிலை சாதகமாக இல்லாவிட்டால், நோய்க்கான இரசாயன சிகிச்சையானது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாமல் இருக்கலாம். விதைகளை ஊறவைத்து, பொருத்தமான பூஞ்சைக்கொல்லிகள் கொண்டு சிகிச்சை அளிக்கலாம், உதாரணமாக, திறம் 80% டபிள்யூபி @ 2 கிராம் / லிட்டர் அல்லது கேப்டன் 75டபிள்யூபி @ 2.5 கிராம் / லிட்டர் தண்ணீர். ஃபோல்பெட், மான்கோசெப், தியோபனேட் மெத்தில் (0.1%) அல்லது 15 நாட்கள் இடைவெளியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும் பூஞ்சைக்கொல்லி தெளிப்பான்களுள் அடங்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண் மற்றும் பாதிக்கப்பட்ட விதைகள் மற்றும் தாவரக்குப்பைகள் ஆகியவற்றில் பூஞ்சை கொல்லேட்டோடிரிகம் லிண்டெமுத்தியானம் உயிர் வாழ்கிறது. மாற்று புரவலன் மீதும் இது செயலற்ற நிலையில் உள்ளது. இலை தொகுதிகள் ஈரப்பதமாக இருக்கும்போது மழை, பனித்துளி அல்லது வயல் வேலை ஆகியவற்றின் வழியாக வளரும் நாற்றங்காலுக்கு இந்த பூஞ்சையின் வித்துக்கள் பரவுகின்றன. எனவே இலை தொகுதிகள் மழை அல்லது பனியினால் ஈரமாக இருக்கும் போது, வயல்களில் மேற்கொள்ளும் பணிகளை (தொழிலாளர்கள், சிகிச்சைகள் ... முதலியன) குறைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். குளிர்ச்சியானது முதல் மிதமான வெப்பநிலை (13-21 டிகிரி செல்சியஸ்) மற்றும் அடிக்கடி மழை பெய்யும் காலம் ஆகியவை பூஞ்சைக்கும் மற்றும் அதன் பரிமாற்றத்திற்கும் சாதகமானவை, இதன் விளைவாக நோய் தொற்று ஏற்படுதல் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை அதிகரிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட நோய்க்கிருமி இல்லாத விதை பொருட்களை பயன்படுத்தவும்.
  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது நோயை தாங்கும் தன்மை கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தாவரங்கள் அல்லது வயல்களை சோதிக்கவும்.
  • உங்கள் வயல்களுக்கு அருகே அதிகப்படியாக களைகள் வளர்ந்திருந்தால் (களைகள் மாற்று புரவலனாக செயல்படக்கூடும்) அவற்றை அகற்றவும்.
  • வயல்களை நல்ல தூய்மையான முறையில் பராமரிக்கவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது வயல்களில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், உங்கள் கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • அறுவடைக்குப் பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை புதைத்து விடவும் அல்லது அகற்றி அழித்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க