மக்காச்சோளம்

சோளம் கண் புள்ளி நோய்

Kabatiella zeae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கீழ்ப் புற இலைகளில் மிகச் சிறிய, நீர் தோய்த்த, வட்ட வடிவிலான புண்கள் காணப்படும்.
  • இந்தப் புண்கள் "கண் புள்ளிகள்" போன்று வளர்ந்து, மஞ்சள் கலந்த பழுப்பு நிற நடுப்பகுதியையும் மற்றும் கரும் பழுப்பு நிற விளிம்புகளையும் கொண்டிருக்கும்.
  • பின்னர் இவை ஒருங்கிணைந்து, நுண்ணுயிர்த் திசுக்கள் அல்லது வெளிறியத் திட்டுக்களை உருவாக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

கீழ்ப் புற இலைகளில் மிகச் சிறிய, நீர் தோய்த்த வட்ட வடிவிலான புண்கள் காணப்படும். இந்தப் புண்கள் பெரிதாகி மற்றும் "கண் புள்ளிகள்" போன்று வளர்ந்து, மஞ்சள் கலந்த பழுப்பு நிற நடுப்பகுதியையும், கரும் பழுப்பு நிற விளிம்புகளையும் கொண்டிருக்கும். பின்னர் இவை ஒருங்கிணைந்து, நுண்ணுயிர்த் திசுக்கள் அல்லது வெளிறியத் திட்டுக்களை உருவாக்கும். முதிர்ந்த இலைகளில் காயங்கள் பொதுவாகக் காணப்படும், ஆனால் இவை இலைப் பரப்புகளிலும் மற்றும் உறைகளிலும் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், நாங்கள் கபடியெல்லா ஜீக்கு எதிராக எந்த மாற்றுச் சிகிச்சைகளையும் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்று உங்களுக்குத் தெரிந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விளைச்சல் திறன், பயிர் மதிப்பு மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பூஞ்சைக்கொல்லி சிகிச்சையின் நன்மை மற்றும் தீமையை கவனத்தில் கொள்ளவும். மான்கோஜெப், பிராப்பிகோனாஜொல் மற்றும் குளோரோதலோனில் ஆகியன பூஞ்சைக் கொல்லி சிகிச்சைகளில் அடங்கும். இந்த சேர்மங்களுடனான விதை சிகிச்சைகளையும் கருத்தில் கொள்ளலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பூஞ்சை மண்ணில் உள்ள சோளக் கழிவுகளில் காணப்படும், மற்றும் அவை விதைகளிலும் காணப்படும். வசந்த காலத்தில், இது வித்துக்களை உற்பத்தி செய்து, காற்று அல்லது மழை பொழிவுகள் மூலம் புதிய பயிர்களுக்குப் பரவும். இரண்டாம் நிலை பரவுதல் என்பது காற்று அல்லது மழைப்பொழிவு மூலம் வித்துக்கள் ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரங்களுக்கு பரவுவது ஆகும். இலை ஈரப்பதம், குளிர்ந்த வெப்பநிலை, அடிக்கடி மழைப்பொழிவு அல்லது பனி ஆகியவை இந்த நோய் பரவுவதை ஆதரிக்கின்றன. வெப்ப மற்றும் வறண்ட வானிலை, மறுபுறம் அதன் முன்னேற்றத்தை மெதுவாகக் குறைக்கும். ஒரே பயிரை பயிர் செய்வது மற்றும் குறைந்த உழவு நடைமுறைகள் பூஞ்சை வளர்ச்சிக்குச் சாதகமானவை. பூக்கும் போது அல்லது சோளம் முதிர்ச்சியடையும் நிலைகளில் பூஞ்சைத் தாவரங்களின் மேல் பாகத்திற்கு பரவியிருந்தால், தாவர உற்பத்தி மற்றும் மகசூலைக் குறைக்ககூடும்.


தடுப்பு முறைகள்

  • உள்ளூரில் எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் தன்மை கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • அறுவடைக்குப்பின் தாவரக் கழிவுகளை நன்கு உழுது மற்றும் புதைக்க வேண்டும்.
  • 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க