சோயாமொச்சை

வடக்கு தண்டு சொறி நோய்

Diaporthe caulivora

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கீழ் புற கிளைகள் மற்றும் இலை காம்புகளின் அடிப்பகுதியில் சிவந்த-பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • தண்டுகளை சுற்றி நீளமான கரும்-பழுப்பு நிற சொறிகள் தோன்றும்.
  • தாவரங்களில் உள்ள நீர் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இலைகளின் நரம்புகளுக்கு இடையே பச்சைய சோகை ஏற்படும்.
  • புண்களால் பாதிக்கப்பட்ட இலைகள் இறந்துபோகும், ஆனால் தண்டுகளில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

ஆரம்ப அறிகுறிகளானது கிளைகளின் அடிப்பகுதி மற்றும் தாவரத்தின் கீழ் பகுதியில் உள்ள இலைக் காம்புகளில் சிறிய சிவந்த-பழுப்பு நிற புண்கள் காணப்படும். பின்னர் இந்த புண்கள் தண்டுகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் படர்ந்து, கரும்பழுப்பு நிறமாக மாறும். தண்டுகளின் மீதான பச்சை மற்றும் பழுப்பு நிற திட்டுக்கள் மாறி மாறி இருக்கும் தோற்றமானது இந்த நோயை வகைப்படுத்துகிறது. தண்டுகளின் மீதான சொறி உட்புறத் திசுக்களை சேதப்படுத்தி, நீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்தைத் தடுக்கிறது. நரம்புகளுக்கு இடையேயான வெளிறிய சோகை இலைகளில் காணப்படும். இலைகள் இறந்து போகக்கூடும், ஆனால் தண்டுகளுடனேயே ஒட்டிக்கொண்டு இருக்கும். புண்களுக்கு மேலே உள்ள தாவர பாகங்கள் இறந்து போகக்கூடும் மற்றும் காய்கள் கடுமையாக பாதிப்படையக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கிடைக்கும்பட்சத்தில், உயிரியல் பூஞ்சை கொல்லிகளுடனான ஒருங்கிணைந்த அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகளின் சிகிச்சைகள் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவுகின்றன, ஆனால் இவற்றை பயன்படுத்தும் காலம், சுற்றுசூழல் நிலைகள் மற்றும் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை பொறுத்து இவற்றின் விளைவுகள் மாறுபடும். தேவைப்பட்டால், மெஃபோநோக்ஸ்சாம், குளோரோதலோனில், தியோபனேட்-மெத்தில் அல்லது அசாக்சிஸ்டிரோபின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளை தாவரங்கள் வளரும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சோயாபீன்சின் தண்டு சொறி நோயானது டையாபோர்த்தே பேசோலோரம் என்னும் மண்ணின் மூலம் பரவக்கூடிய பூஞ்சையினால் ஏற்படுகிறது. பூஞ்சையின் இரண்டு மாறுபட்ட வகைகள் தென்னிந்திய மற்றும் வட இந்திய தண்டு சொறிநோய்களை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட பயிர் கழிவுகள் அல்லது விதைகளில் இந்த பூஞ்சை குளிர்காலத்தை செயலற்ற முறையில் கழிக்கிறது. இது தாவரங்களை வளரும் காலத்தின் ஆரம்ப நிலையில் பாதிக்கிறது, ஆனால் இனப்பெருக்கக் கட்டத்தின் போது மட்டுமே அறிகுறிகள் தோன்றும். தொடர்ச்சியான ஈரப்பதம் மற்றும் மழை காலங்கள், குறிப்பாக பருவ காலத்தின் ஆரம்பத்தில், இந்த நோய்க்கு ஆதரவாக உள்ளன. நிலங்களை சரியாக உழுவாமல் இருப்பதும் இந்த நோய்க்கு ஆதரவாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • நோய் கிருமி அற்ற சான்றளிக்கப்பட்ட விதைப்பொருட்களை பயன்படுத்தவும்.
  • பருவ காலத்தில் தாமதமாக நடவு செய்யவும்.
  • சமச்சீரான ஊட்டச்சத்துக்களுடன் நல்ல மண் வளத்தை பராமரிக்கவும்.
  • குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சோளம், கோதுமை, மக்காசோளம் போன்ற புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • உங்கள் வயல்களுக்கு அருகே உள்ள அதிகப்படியான களை வளர்ச்சியை தவிர்க்கவும்.
  • ஈரப்பதத்தைத் தவிர்க்க, முடிந்தவரை சீக்கிரம் அறுவடை செய்யவும்.
  • மண்ணை சூரிய வெளிச்சத்திற்கும், காற்றுக்கும் வெளிப்படுத்த மண்ணை நன்கு உழுதல் வேண்டும்.
  • அறுவடைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பயிர் கழிவுகளை புதைத்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க