சோயாமொச்சை

திடீர் இறப்பு நோய்

Fusarium virguliforme

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சிதறிய, விரவலான, மஞ்சள் நிறப் புள்ளிகள் இலை நரம்புகளுக்கு இடையே காணப்படும்.
  • புள்ளிகள் வளர்ந்து, உலர்ந்து, உதிரக்கூடும்.
  • தண்டு மற்றும் வேரின் பழுப்பு நிறமாற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

பூத்தல் காலத்தில், சிறிய, வெளிறிய பச்சை நிற வட்ட புள்ளிகள் இலைகளில் காணப்படும். நரம்புகளில் சிதைவுகள் ஏற்படும் பின்னர் சிதைவுகள் இலைகளுக்கு பரவும். நோய் பரவும்போது, நரம்புகளுக்கு இடையே சிதைந்த திசுக்கள் அழிந்து மற்றும் கீழே விழும், இது இலைகளுக்கு முரட்டுத்தனமான தோற்றத்தினை அளிக்கும். இலைகள் உலர்ந்து, சுருண்டு அல்லது கீழே விழுதல் போன்றவை ஏற்படலாம், ஆனால் காம்புகள் தண்டுகளுடன் இணைந்தே இருக்கும். தண்டுகளின் அடிப்பகுதி மற்றும் முக்கிய வேர்களில் அழுகிய அறிகுறிகள் (பழுப்பு நிறமாற்றம் ) தென்படும். பூத்தல் தடைபடும் மற்றும் கனிகள் வளர்ச்சியுறாது அல்லது கனிகள் நிரப்பப்படாமல் இருக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இன்று வரை, ஃபுசரியம் விர்குலிஃபோர்மே எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்கு சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் ஒருங்கிணைத்துக் கையாளவும். இலைவழியே செயல்படுத்தப்படும் பூஞ்சைக் கொல்லிகள் போதுமான பலனளிப்பதில்லை ஏனெனில், நோய்க்குக் காரணமான பூஞ்சைகள் வேர் அமைப்பில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக ஃப்ளூபைரம் போன்ற குறிப்பிடத்தக்க பூஞ்சைக் கொல்லிகளை விதைகளில் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

ஃபுசரியம் விர்குலிஃபோர்மே எனும் பூஞ்சைகள் வித்துக்களாக மண்ணில் அல்லது பாதிக்கப்பட்ட பயிரின் எஞ்சிய பாகங்களில் உயிர்வாழும். இவை பயிர்களைத் தாக்கி அவற்றின் வேர்களின் வழியே குடியேற்றம் செய்கின்றன, இது காய்கள் உருவாகும் காலத்தில் நடக்கிறது ஆனால் அறிகுறிகள் பூத்தல் காலங்களில்தான் தென்படும். குளிர்ந்த மற்றும் ஈரமான மண், மழைக்கால வானிலை, அடர்த்தியாகப் பயிரிடப்பட்ட பயிர்கள், மோசமான வடிகால் அமைப்பு அல்லது இறுக்கமான மண் அமைப்பு போன்றவை நோய்க்கு ஏதுவான சூழ்நிலைகளாகும். சோயாபீன் நீர்க்கட்டி நூற்புழுக்களின் காயங்கள், பூச்சிகள் மற்றும் சரியாக கையாளததால் ஏற்படும் இயந்திரக் காயங்கள் போன்றவை சோயாபீன்ஸ் பயிர்களில் நோய் பாதிப்பிற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • சிறந்த வடிகால் முறையினை அளிக்கவும்.
  • உயர்தரம் வாய்ந்த சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயிரிடவும்.
  • சகிப்புத்தன்மை அல்லது தடுப்புத்திறன் கொண்ட பயிர்வகைகளைப் பயிரிடவும்.
  • வானிலை மோசமாவதைத் தவிர்க்க குறித்த காலத்திற்கு முன்னதாகவே பயிரிடவும்.
  • நன்கு காற்றோட்டத்துடன் அமைய பயிர்களுக்கு இடையே போதுமான இடைவெளிவிட்டுப் பயிரிடவும்.
  • முதன்மை அறிகுறிகள் குறித்து பயிர்களைக் கண்காணிக்கவும்.
  • மண் இறுக்கத்தினைத் தளர்த்துவதற்கு நன்றாக உழுதல் செய்யவும்.
  • பிறவகைப் புரவலன் அல்லாத பயிர்களுடன் பயிர்சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க