சோயாமொச்சை

தவளைக்கண் இலைப் புள்ளி நோய்

Cercospora sojina

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளில் சிறிய, நீர் தோய்த்த புள்ளிகள் காணப்படும்.
  • இந்தப் புள்ளிகள் சாம்பல் நிற மையப்பகுதி மற்றும் கரும் பழுப்பு நிற ஓரங்களுடன் சிதைந்த வட்ட வடிவ காயங்களாக மாறும்.
  • இந்தக் காயங்கள் தண்டுகள் மற்றும் காய்களுக்குப் பரவும்.
  • பாதிக்கப்பட்ட விதைகள் சிறிய மற்றும் பெரிய கரு நிறப் புள்ளிகளுடன், சுருங்கிக் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

இந்த நோய் தொற்றானது அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் ஏற்படக்கூடும், ஆனால் பூக்கும் நேரத்தில் இளம் இலைகளின் மீது இது மிகவும் பொதுவாக ஏற்படும். ஆரம்ப அறிகுறிகளாக இலைகளில் சிறிய, நீர் தோய்த்த புள்ளிகள் காணப்படும். காலப்போக்கில், இவை பெரிதாகி (1-5 மிமீ) , சாம்பல் நிற மையப்பகுதி மற்றும் கரும் ஊதா ஓரங்களுடன் வட்டவடிவ புள்ளிகளாக மாறும். கடுமையான நோய்த்தொற்றின் போது, இலைகள் இறந்து மற்றும் உதிர்ந்து விடும். தண்டுகளில் நசுங்கிய மையப்பகுதிகளுடன் நீட்டிய புள்ளிகள் தோன்றும். காய்களில், வட்டமான அல்லது நீளமான பழுப்பு நிற நீர் தோய்த்த புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட விதைகள் சுருங்கி மற்றும் அவற்றில் பல்வேறு அளவுகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கிடைக்க பெற்றால், எப்போதும் உயிரியல் தயாரிப்புகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கருத்தில் கொள்ளுங்கள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருதில் கொள்ளுங்கள். நோய் ஆரம்பிக்கும் காலத்திலும் மற்றும் வளரும் காலத்தின் பிந்தைய நிலையிலும் பைராகிளாஸ்ட்டுரோபின் என்பவற்றை கொண்ட தயாரிப்புகளின் இரு முறைப் பயன்பாடு நோய்க்கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும். ஈரப்பதமான நிலைகள் பூஞ்சைக்கொல்லிகளின் விளைவை அதிகரிக்கின்றன. அறுவடை செய்வதற்கு 21 நாட்களுக்கும் குறைவாக இருந்தால் சிகிச்சையை ஆரம்பிக்க கூடாது.

இது எதனால் ஏற்படுகிறது

தவளைக்கண் இலை புள்ளி நோயானது செர்க்கோஸ்போரா சொஜினா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இவை நாற்றுகளுக்கிடையே வயல்களில் உள்ள பயிர்க் கழிவுகள் அல்லது விதைகளின் மீது வாழ்கிறது. இவை நடவு செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட விதைகள் நோய்த்தொற்றுடைய நாற்றுகள் முளைப்பதை அதிகரிக்கச் செய்யும். இளம் சோயா இலைகள் முதிர்ந்த இலைகளை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. அடிக்கடி வெதுவெதுப்பான, ஈரப்பதமான, மழைப்பொழிவுடன் கூடிய மேகமூட்டமான வானிலை இந்த நோயின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மண்ணின் மேற்பரப்பில் எஞ்சியுள்ள பாதிக்கப்பட்ட சோயாபீன் தாவரங்களின் கழிவுகளும் நோய் வளர்ச்சிக்கு சாதகமானதாக அமையும்.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்புத் திறன், நெகிழ்திறன் அல்லது சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • சான்றளிக்கப்பட்ட நோய்க்கிருமி இல்லாத விதைகளைப் பயன்படுத்தவும்.
  • வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கிளைகளை அகற்றவும்.
  • வயல்களில் நல்ல வடிகால் வசதி அமைக்கவும்.
  • பருவ காலத்தின் ஆரம்பத்தில் நடவு செய்யவும்.
  • மக்காச்சோளம் மற்றும் பிற தானியங்கள் போன்ற புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்யவும்.
  • ஆழமாக உழுது, தாவரக் கழிவுகளை புதைக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரக் கழிவுகளை அகற்றி மற்றும் அவற்றை அழித்து விடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க