அரிசி

இலையுறை அழுகல் நோய்

Sarocladium oryzae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கதிர்களை சூழ்ந்திருக்கும் இலை உறைகளின் மேல்பகுதிகளில் புள்ளி போன்ற சிதைவுகள் உருவாகும்.
  • இலை உறை அழுகும் மற்றும் வெள்ளை நிறத்தில் பொடி போன்ற பூஞ்சைகள் வளரும்.
  • வளர்ந்த கதிர்களின் தானியங்கள் வண்ணமிழந்து காணப்படும், அத்துடன் கதிரினை மலட்டுத் தன்மை உடையதாக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

கதிர்களை சூழ்ந்திருக்கும் இலைகளில் நீள்வட்ட, ஒழுங்கற்ற புள்ளிகள் (0.5 முதல் 1.5 மிமீ) சிதைவுகளாக காணப்படுவது ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். சாம்பல் நிற மையங்கள் மற்றும் பழுப்பு நிற ஓரங்கள் அத்துடன் கூடிய அழுகல் மற்றும் இலை உறைகளின் நிறமாற்றம் போன்றவை சிதைவுகளின் பண்புகளாக இருக்கும். அதிகமான நோய் பாதிப்புகள் இருக்கும்போது, இளம் கதிர்கள் தானியங்களைக் கொண்டு வளர முடியாமல் போய்விடும். பாதிக்கப்பட்ட இலை உறைகள் அதிகப்படியான வெள்ளை நிற பொடி போன்ற பூஞ்சை வளர்ச்சிகளை, இலை உறைகளின் வெளிப்பகுதியில் கொண்டிருக்கும். வளர்ந்த கதிர்களின் தானியங்கள் வண்ணமிழந்து காணப்படும், அத்துடன் கதிரினை மலட்டுத் தன்மை ஆக்கும். வளராத கதிர்கள், சிவப்பு-பழுப்பு முதல் அடர் பழுப்பு நிறத்துடன் கூடிய சிறு பூக்களைக் கொண்டிருக்கும். இந்த நோய் தொற்று கதிர் வளர்ச்சிக்காலத்தின் பிந்தைய பகுதியில் ஏற்பட்டால், அதிகப்படியான சேதங்களை ஏற்படுத்தும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ப்சூடோமோனாஸ் ப்ளோரேசென்ஸின் ரைஸோபாக்டீரியா போன்றவை இந்நோய் உருவாக்கும் பூஞ்சைகளுக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. இவற்றினைப் பயன்படுத்தி நோய் தாக்கத்தினைக் குறைப்பதுடன், மகசூலையும் அதிகரிக்கலாம். இப்பூஞ்சைகளுக்கு, பைபோலரிஸ் ஸிகோலா மற்றொரு ஆற்றல்மிக்க எதிரியாகும். இது இந்த நோயை ஏற்படுத்தும் பூஞ்சைகளை முழுவதும் கட்டுப்படுத்தக்கூடியது. டாகெட்ஸ் எரெக்டாவின் பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து பெறப்படும் சாறுகளின் பூஞ்சைக்கு எதிரான செயல்பாடு இந்நோயை உண்டாக்கும் சாரோக்லாடியம் ஒரைஸே பூஞ்சைகள் 100% வளருவதைத் தடுக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்போது, மான்கோஸெப், காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது ப்ரோபிகோனஸோல் (பொதுவாக @ 1 மில்லி/லி தண்ணீர்) போன்றவற்றினை பயன்படுத்தி நோயின் தாக்கத்தினைக் குறைக்கலாம். விதைப்பதற்கு முன்னர் மான்கோஸெப் போன்ற பூஞ்சைகொல்லிகளை கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்நோய் விதை மூலம் பரவக்கூடிய நோய்களுள் ஒன்று. சாரோக்லாடியம் ஓரிஜே எனும் பூஞ்சைகளால் இந்நோய் முதன்மையாக ஏற்படுகிறது. சிலவேளைகளில் சாக்ரோலாடியம் அட்டேனௌடம் பூஞ்சைகளினாலும் நோய் ஏற்படும். நடவு செய்யப்படும் பயிர்களின் அடர்த்தி அதிகமாகும்போது நோய் ஏற்படுவதும் அதிகரிக்கும், மேலும் கதிர்கள் உருவாகும் நிலையில், பூச்சிகளால் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்கள் வழியே பூஞ்சைகள் உள்ளே நுழையும் தாவரங்களிலும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பொட்டாசியம், கால்சியம் சல்பேட் அல்லது சிங்க் உரங்களை பக்கக் கன்றுகள் வளரும் நிலைகளில் அளிப்பது தண்டுகள் மற்றும் இலைத் திசுக்களை பலப்படுத்தும், இதன் மூலம் அதிகப்படியான பாதிப்புகள் குறைக்கப்படும். இது வைரஸ் தொற்றுக்களால் பலவீனமான தாவரங்களுடன் தொடர்புடையது. சூடான (20-28 டிகிரி செல்சியஸ்) மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் பூஞ்சைகள் வளர சாதகமான சூழ்நிலைகள் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான சான்றிதழ் அளிக்கப்பட்ட மூலங்களிடம் இருந்து பெறப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • 25 செமீ x 25 செமீ இடைவெளியில் பயிரிடுதலை மேற்கொள்ளவும்.
  • ஒரேயொரு பயிரினை மட்டும் விவசாயம் செய்வதை தவிர்க்கவும், ஒரு நிலத்தில் குறைந்தது இருவகைப் பயிர்களையாவது பயிரிடவும்.
  • தொடர்ச்சியாக, கதிர் பேன் போன்ற பூச்சிகள் இருப்பதைக் கண்காணிக்கவும்.
  • பொட்டாசியம், கால்சியம் சல்பேட் அல்லது ஜிங்க் உரங்களை பக்கக் கன்று வளரும் காலங்களிலேயே பயன்படுத்தவும்.
  • நிலத்தில் இருந்து பயிரின் எஞ்சிய பாகங்கள் மற்றும் களைகளை நீக்கிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க