Colletotrichum sp.
பூஞ்சைக்காளான்
நீர் ஊறிய வட்டமான அல்லது கோண வடிவிலான சிதைவுகள் கனிகளில் தோன்றி பின்னர் அவை மிருதுவாகி, உள்நோக்கிய பள்ளமாக மாறும். அருகிலுள்ள திசுக்கள் வெளிறிய நிறங்களில் இருக்கும்போது, சிதைவுகளின் மையங்கள் ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறத்துடன் இருந்து பின்னர் கருப்பு நிறத்திற்கு மாறும். சிதைவுகள் கனிகளின் பெரும்பாலான மேற்பரப்புகளை ஆக்கிரமிக்கும். பல்வேறு சிதைவுகள் ஏற்படும். பொதுவாக கனிகளின் சிதைவுகளில் ஒரே மையம் கொண்ட அடர் வட்டங்கள் இருக்கும். காய்கள் பாதிக்கப்பட்டிருக்கும், ஆனால் அவை முதிர் கனியாக பழுக்கும் வரை இந்த பாதிப்பு வெளியே தெரியாது. இலைத்திரள்கள் மற்றும் தண்டுகளின் அறிகுறிகள் சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட சாம்பல் – பழுப்பு நிற புள்ளிகளாக அடர் பழுப்பு ஓரங்களுடன் காணப்படும். பருவத்தின் பிந்தைய காலத்தில், பழுத்த பழங்கள் அழுகிப்போகும் மற்றும் கிளைகள் நுனியிலிருந்து இறந்துப்போகும்.
பாதிக்கப்பட்ட விதைகளை 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூடான நீரில் 30 நிமிடங்களுக்கு மூழ்க வைத்து பின்னர் பயன்படுத்தலாம். இதில் வெப்பநிலை மற்றும் நேரம் சரியாக கண்காணிக்கப்பட வேண்டும், அவற்றினைப் பொறுத்தே இந்த சிகிச்சையின் பலன் கிடைக்கும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக் கொல்லிகள் தேவைப்பட்டால் மான்கோசெப் அல்லது காப்பரை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை தெளிக்கவும். பூ பூக்கும்போது சிகிச்சைகளை தொடங்கவும்.
இந்த நோய் கொலெட்டோட்ரிக்கம் எனப்படும் பூஞ்சையின குழுவால் ஏற்படுகிறது, பிறவற்றுள் சி. குளோயோஸ்போரியாய்டுகள் மற்றும் சி. கேப்சிசி உள்ளிட்டவையும் அடங்கும். அனைத்து வளர்ச்சி நிலைகளிலும், முதிர்ந்த மற்றும் முதிராத கனிகளிலும், அறுவடைக்குப் பிறகும் கூட இந்த நோய் கிருமிகள் மிளகு தாவரங்களை பாதிக்கக்கூடும். விதைகள், செடிகளின் குப்பைகள் அல்லது சொலனாசியே போன்ற மாற்று புரவலன்களில் இவை உயிர்வாழ்கின்றன. பாதிக்கப்பட்ட நாற்றுகளில் இருந்தும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. பூஞ்சைகள் வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான நிலைகளில் விரைவாக வளருகின்றன. மழை அல்லது பாசன நீரின் மூலம் இவை பரவுகின்றன. கனியில் நோய்த்தொற்று 10 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் ஏற்படும். இதில் 23 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை நோய் வளருவதற்கு ஏதுவான சூழ்நிலையாகும். கனிகளின் மேற்பரப்பு ஈரமாக இருப்பது விதைப்புள்ளி நோயின் தாக்கத்தினை தீவிரப்படுத்தும்.