Ceratocystis paradoxa
பூஞ்சைக்காளான்
பூச்சிகள் பயிர்களில் உருவாக்கிய காயங்கள் அல்லது வெட்டுக்கள் மூலமாக பூஞ்சைகள் பயிர்களுக்குள் உள்நுழைகின்றன. உட்புறத் திசுக்களின் வழியே இவை வேகமாக பரவுகின்றன. இதனால் உட்புற திசுக்கள் முதலில் சிவப்பாகவும், பின்னர் பழுப்பு-கருப்பு மற்றும் கருப்பு நிறமாகவும் மாறுகின்றன. பயிர்கள் அழுகுவதால் தேவையில்லாத துவாரங்கள் உருவாகும் மற்றும் நன்கு பழுத்த அன்னாசிப்பழ வாடையினை ஏற்படுத்தும். இந்த வாசனை சில வாரங்கள் வரை நீடிக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களின் வேர்கள் உருவாக தவறும், தொடக்க நிலை மொட்டுக்கள் வளராது, அப்படியே வளர்ந்தாலும் அவை இறந்துவிடும் அல்லது குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.
நடவு செய்வதற்கான பருவகாலம் தாமதமானால், கரணைக் குச்சிகளை சூடான நீரில் (51 டிகிரி செல்சியஸ்) 30 நிமிடங்கள் சிகிச்சையளித்து பின்னர் பயிரிடவும். நிலத்தில் முளைக்காமல் இருக்கும் கரும்புத் தண்டுகளைப் பார்த்து அவற்றினை வெட்டுங்கள், அவற்றில் நோய் பாதிப்பு இருக்கிறதா (அழுகல் மற்றும் துர்நாற்றம்) என சோதித்து பார்க்கவும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூஞ்சைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது பொருளாதார அடிப்படையில் நடைமுறைக்கு சாத்தியமற்ற விஷயம்.
பயிரிடப்பட்ட முதல் வாரங்களில் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. பூஞ்சைகளின் வித்துக்கள் காற்று அல்லது நீர் மற்றும் நீர்ப்பாசன தண்ணீர் ஆகியவற்றின் மூலமாக பரவுகின்றன. பூச்சிகள் முக்கியமாக வண்டுகள் பூஞ்சைகளின் வித்துக்களை பயிர்களில் துளையிட்டு பரப்புகின்றன. இந்த வித்துக்கள் மண்ணில் சுமார் ஓராண்டு வரை உயிர்வாழும் தன்மையுடையவை. பாதிக்கப்பட்ட பயிர்களில் சில மாதங்கள் உயிர்வாழும். மழை பெய்த பின்னர் தண்ணீர் தேங்கும் இடங்களுக்கு அருகே இவை விரைவாக பரவும். 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, பூஞ்சைகளின் வித்துக்கள் பரவவும், நோய் வளரவும் ஏதுவான வெப்பநிலையாகும். நீண்ட கால வறட்சி நிலையும் நோய்ப்பூச்சியால் கரும்பு பயிர்கள் பாதிக்கப்படும் சாத்தியங்களை அதிகரிக்கும்.