Puccinia melanocephala
பூஞ்சைக்காளான்
1-4 மிமீ வரையிலான நீண்ட மஞ்சள் நிற புள்ளிகள் இலைகளில் காணப்படுவது, துரு நோய்க்கான முதன்மை அறிகுறிகள் ஆகும். நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது (முக்கியமாக இலையின் அடிப்புறத்தில்) இலையின் நரம்புக்கு இணையாக புள்ளிகள் நீட்சியடையும். அவை 20 மிமீ வரை நீளம் கொண்டதாகவும், ஒன்று முதல் மூன்று மிமீ வரை அகலம் கொண்டதாகவும் இருக்கும். அவை வெளிறிய ஒளிவட்டங்களால் சூழப்பட்ட ஆரஞ்சு-பழுப்பு அல்லது சிவப்பு-பழுப்பு நிறத்துடன் சிதைந்த பகுதியாக மாறும். பின்னர் இவை துருப்பிடித்த கொப்புளங்கள் போன்றாகும். இது இலையின் மேற்புற அடுக்கினை தகர்த்து, சிதைவுகளை அதிகரிக்கும். இலை விளிம்புகளுக்கு அருகே சிதைவுகள் அதிகமாகவும், இலைகளின் அடித்தளத்திற்கு அருகே குறைவாகவும் இருக்கும்.
மன்னிக்கவும், துரு நோயினை ஏற்படுத்தும் புசினியா மேலனோசெபாலா பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது, பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவது சரியான வழிமுறை அல்ல மற்றும் அவை சாத்தியமானதும் அல்ல..
20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை கொண்ட பகல் பொழுதினைத் தொடர்ந்து, 98% ஒப்பு ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த இரவுப் பொழுது அமைவது துரு நோய்க்கு சாதகமாக அமையும். நீண்ட நேரம் இலைகளில் ஈரத்தன்மை இருப்பது (9 மணி நேரம் அல்லது அதற்கு மேல்) நோய் பரவலுக்கு ஏதுவாக அமையும். சூழ்நிலைகள் ஏதுவாக அமைந்தால் துரு நோயின் வாழ்க்கைச் சுழற்சி 14 நாட்களுக்கு குறைவாக அமையும். இரண்டு மற்றும் ஆறு மாதங்களான பயிர்களில் துரு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.