பப்பாளி

பைடோப்தோரா உச்சி மற்றும் வேர் அழுகல் நோய்

Phytophthora spp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • குன்றிய வளர்ச்சி மற்றும் சிறிய இலைகள்.
  • உச்சி கடந்து திசுக்கள் அல்லது உச்சிப்பகுதி முழுவதும் பழுப்பு நிறமாற்றம் காணப்படும்.
  • வேர்களில் ஏற்படும் நோய்த்தொற்றானது பழுப்பு முதல் பழுப்பு வேர் அழுகல் நோய்க்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

8 பயிர்கள்
பாகற்காய்
திராட்சை
மரவள்ளிக்கிழங்கு
முலாம்பழம்
மேலும்

பப்பாளி

அறிகுறிகள்

இந்த நோய்க்கான அறிகுறிகள் பல்வேறு வேர் சம்பந்தமான நோய்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. சிறிய மற்றும் லேசான வெளிறிய இலைகள், குறைந்த பழ கொத்துக்கள் மற்றும் வேர்களின் உட்புற திசுக்கள் அழுகிப்போதல் ஆகியன உச்சி மற்றும் வேர் அழுகல் நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். பாதிக்கப்பட்ட கொடிகளின் வளர்ச்சி குன்றி, இலை தொகுதிகள் சிதறி, அவை முன்கூட்டியே கீழே விழக்கூடும். அடி நடுமரத்தின் குறுக்குப்பகுதியில் சிவந்த-பழுப்பு நிறத்தில் சிதைந்த சொறி நோய் போன்று தோன்றும். இது வேர்களின் உச்சிப்பகுதியிலிருந்து ஏற்படுகிறது. இந்த சொறிநோய் மரங்களின் நடுப்பகுதியை துளைத்து, தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொடியின் பிற பகுதிகளுக்கு செல்வதை தடை செய்து, இறுதியில் தாவரத்தை இறக்க செய்து விடுகிறது. கொடிகளை எளிதாக மண்ணிலிருந்து அகற்றிவிட முடியும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூஞ்சைகளுக்கு எதிரான சிகிச்சைகளை செயல்படுத்தலாம், உதாரணமாக சிதைவுகள் மற்றும் வெட்டுக்களில் போர்டெக்ஸ் கலவையினை பெயின்ட் செய்யலாம். அதே கலவைகளைக் கொண்டு பாதுகாப்பு சிகிச்சைகள் செய்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பின் இந்நோய் குணப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிடும், அத்தருணங்களில் பாதுகாப்பு சிகிச்சைகள் மட்டுமே நோயின் வீரியத்தினைக் குறைக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மரங்கள் மற்றும் திராட்சைகளை பூஞ்சைக்கொல்லிகள் மூலம் நீர்ப்பாசனம் வழியே சரிசெய்ய வேண்டும். முதல் அறிகுறிகள் இருக்கும்போது, மரங்களின் அடிப்புறத்தினை போசெடைல் அலுமினியம், பெனோமைல், மெடாலக்ஸைல் அல்லது மெத்தைல் தியோபனேட்-மெத்தைல் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக்கொல்லிகளைப் பயன்படுத்தவும். விவசாய உபரகாரணங்கள் பயன்படுத்திய பின்பு அவற்றினை பிளீச் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் இந்நோய் பரவாமல் தடுக்க இயலும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் பைடோப்தோரா ஜீனஸின் பல்வேறு இனங்களினால் ஏற்படுகிறது. ஒரு முறை இது வயலில் வந்துவிட்டால், பல ஆண்டுகளுக்கு இவற்றால் மண்ணில் வாழ முடியும். வயல்களில் இதனை அழிப்பது சாத்தியமற்றது. இந்த நோய்கிருமியானது தான் செயல்படுவதற்கு அதிகபடியான மண் ஈரப்பதத்தின் அளவை சார்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட திராட்சை கொடிகள் வயல்களில் ஒற்றையாகவும் அல்லது சிறிய குழுக்களாகவும் காணப்படுகிறது. இவை மோசமான வடிகால் பகுதிகள் அல்லது அவ்வப்போது அதிகப்படியான நீர்ப்பாசனத்துடன் தொடர்புடையது. சொட்டுநீர் பாசனத்துடன் கூடிய திராட்சை தோட்டங்களில், நேரடியாக அடைப்பானிற்கு அடியில் இருக்கும் திராட்சைக் கொடிகள் அல்லது நேரடியாக நடுமரத்தின் மீது தண்ணீர் பாயும் திராட்சை கொடிகளில் இந்த நோய்க்கான அறிகுறிகள் அவ்வப்போது தோன்றும். நோய் பரவுவதற்கு இன்னொரு வழி நோய்த்தொற்றுடைய பொருட்களின் போக்குவரத்து மூலம், உதாரணத்திற்கு ஒட்டு முறை மூலம் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • பைட்டோப்தோரா நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்தவும்.
  • தண்ணீர் தேங்கி நிற்க கூடிய ஏதேனும் மண் வடிகால் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும்.
  • மண்ணில் நீடித்த மற்றும் தொடர்ச்சியான நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.
  • வேர் பகுதியில் இயற்கை தழைக்கூளங்களை பராமரிக்கவும்.
  • திராட்சை தோட்டங்களில் தாவரக் கழிவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • பாதிக்கப்பட்ட திராட்சை கொடிகளை தோட்டத்திலிருந்து அகற்றிவிடவும்.
  • பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சுத்தமான வயலுக்கு செல்லும் முன் வயல் உபகரணங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  • தண்ணீரை நேரடியாக அடிமரத்தில் படாதவாறு சொட்டு நீர்ப் பாசனத்தை சரிசெய்து கொள்ளுங்கள்.
  • ஒட்டுமுறை செய்யும்போது, மண்ணை நன்கு கிளறி சமமான நிலையில் வைத்துக்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க