Eutypa lata
பூஞ்சைக்காளான்
இந்த நோயானது அடிமரத்தின் உட்புற அழுகல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. பல வருடங்களாக நோய் அதிகரிக்கும்போது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் இறக்கலாம், இதனால் இந்நோய் "கிளை இறப்பு நோய்" என்று பெயர்பெற்றது. அடிமரத்தை குறுக்காக வெட்டும்போது, உட்புறத் திசுக்களில் ஆப்பு வடிவ புண்கள் அல்லது காயங்கள் காணப்படும். பூஞ்சை வளர்ச்சி சில நேரங்களில் இறந்த மர பட்டை மீது கரி போன்ற திட்டுக்களாக உருவாகியிருப்பதைக் காண முடியும். இந்த நோய் இலைகளின் மீதும் அறிகுறிகளை ஏற்படுத்தும். இவற்றுள் இலை கூர்முனைகளில் காணப்படும் புள்ளிகளும் அடங்கும், அதனைத் தொடர்ந்து வெளிறிய திட்டுக்கள் மற்றும் சிதைந்த ஓரங்கள் உருவாகும். இலைபரப்பின் உருக்குலைவு மற்றும் குவளையாக்கம் ஏற்படும். கணுவிடைப்பகுதி சுருங்கி, தளிர்களின் வளர்ச்சி குன்றி, வெளிறிய நிறத்துடன் காணப்படும். குலைகள் உருவாக ஆரம்பிக்காது அல்லது வெறுமனே வளராமல், விழுந்துவிடும்.
பேசில்லஸ் சப்டிலிஸ் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட வணிக சூத்திரங்களை காயங்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தலாம். சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு பயன்படுத்தப்படும் செப்பு-அடிப்படையிலான தயாரிப்புகள் திறந்த காயங்களில் ஏற்படும் பூஞ்சை நோய் தொற்றுகளைத் தடுக்கும்.
உயிரியல் சிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மைக்லோபூடானில், தியோபனேட்-மெத்தில் மற்றும் டெட்ராக்கொனாஜொல் போன்றவை இயுடிப்பா கருகல் நோய் உள்ளிட்ட தண்டு சொறி நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை சீர்திருத்தம் செய்யப்பட்டவுடன் உடனடியாக பயன்படுத்த வேண்டும். அக்ரிலிக் வண்ணப்பூச்சு அல்லது அத்தியாவசிய எண்ணெய்களின் 5% போரிக் அமிலத்துடன் காயத்தை அடைக்க பயன்படுத்தப்படும் பொருட்களும் நன்கு வேலை செய்யும்.
இந்த நோயானது இயுடிப்பா லட்டா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, மேலும் இவை பொதுவாக பழைய திராட்சை தோட்டங்கள் அல்லது பழத்தோட்டங்களில் காணப்படுகிறது. நோய்த்தொற்றின் முதன்மை மூலக்கூறுகள், மாசுபட்ட அடிமரத்தில் குளிர் காலத்தை செயலற்ற நிலையில் கழிக்கும் பூஞ்சை வித்துக்களாகும். வசந்த காலத்தில், மழைச் சாரலின் ஆதரவால் இந்த வித்துக்கள் வெளியாகி, காற்று மூலம் மலராத மொட்டுக்களுக்கு பரவுகிறது. பின்னர், இவை காயங்கள் அல்லது நேரடியாக இலைத்துளைகள் வழியே தாவரத்திற்குள் நுழைகிறது. மரத்தினுள் சென்றவுடன், இவை மெதுவாக பரவி, சில ஆண்டுகளில் வேறாகு திசுக்களை பாதிக்கிறது. மேம்பட்ட நிலைகளில், இது கிளைகள் அல்லது தளிர்களை முழுவதும் துளையிட்டு, கொடி அல்லது மரத்தின் மேல்பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்து போக்குவரத்துகளை தடுக்கிறது. 20° செல்சியஸ் முதல் 25° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை விதை முளைப்பிற்கு உகந்த நிலையாகும். இயுடிப்பா லட்டா ஆப்பிள், பேரி மற்றும் செர்ரி மரங்கள் மற்றும் அக்ரூட் பருப்பு மரங்கள் ஆகியவற்றையும் பாதிக்கலாம். மலைச்சாம்பல், கார்க் ஓக் அல்லது கருமுள் போன்ற நீண்ட வரிசை மரங்கள் புரவலன்கள் பட்டியலை நிறைவு செய்கின்றன மற்றும் இவை உட்புகும் பொருட்களின் நுழைவுவாயிலாக திகழ்கிறது.