Mycosphaerella angulata
பூஞ்சைக்காளான்
இந்த நோய்த்தொற்று இலைகளை மட்டுமே தாக்கும். நோயின் ஆரம்ப கட்டங்களில், பாதிக்கப்பட்ட கொடிகளின் இலைகள் மங்கலான, வெளிறிய புள்ளிகளுடன் காணப்படும். இவை இலைகளின் கீழ் புறத்தில் அதிகமாக காணப்படும். பருவ காலத்தில், அவை பெரிதாகும் போது, புள்ளிகளின் நடுவில் ஒழுங்கற்ற பழுப்பு நிற வடுபோன்று தோன்றி, அவற்றுக்கு கோணலான தோற்றத்தை அளித்து, அவற்றை நன்றாக தெரியும்படி செய்கிறது. இந்த அறிகுறிகள் இலைகளின் எஞ்சிய பகுதிகளுக்கும் பரவி, அவை மஞ்சள் நிறமாகி, இறுதியில் அவற்றை இறக்க செய்து விடுகிறது. நோய் அதிகரிக்கையில், பருவ காலத்தின் இறுதியில் அதிகப்படியான இலை உதிர்வை இது ஏற்படுத்துகிறது. இலைகளின் பற்றாக்குறை தாவரங்களின் வீரியம் மற்றும் விளைச்சலை குறைத்து, குறைவான தரத்திலான திராட்சைகளை விளைவிக்கிறது.
மன்னிக்கவும், மைகோஸ்பேரெல்லா அங்குலேட்டாவுக்கு எதிரான மாற்று சிகிச்சை எதுவும் நாங்கள் அறியவில்லை.இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் ஏதாவது ஒன்றை நீங்கள் அறிந்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். உங்களிடமிருந்து தகவலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் முறையான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் இலை கோணப்புள்ளி நோயை கட்டுப்படுத்த முடியும். பருவ காலத்தின் ஆரம்பத்தில் பூச்சிக்கொல்லிகளை திரும்ப திரும்ப பயன்படுத்துவதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை திறம்பட தவிர்க்க முடியும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் மைகோஸ்பேரெல்லா அங்குலேட்டா என்னும் பூஞ்சை தாவர நோய்கிருமியால் ஏற்படுகிறது. இது மஸ்கடின் திராட்சை (வைட்டிஸ் ரோடண்டுபோலியா) இனத்தை தாக்கும் முக்கிய நோயாகும். ஆனால் மற்ற திராட்சைகளையும் இது பாதிக்கலாம். இவற்றின் வித்துகள் காற்று மற்றும் நீர் துளிகளின் மூலம் பிற இலைகள் மற்றும் தாவரங்களுக்கு பரவுகிறது. இவை இலைகளில் இயற்கையாக காணப்படும் துளைகள் மற்றும் காயங்கள் வழியாக தாவர திசுக்களை அடைந்து, அவற்றை சேதப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட இலைகளில் ஒளிச்சேர்க்கை குறைந்து, இலை உதிர்வு, திராட்சை கொடிகளின் வீரியம் குறைதல், திராட்சைகளை சூடு பண்ணிற்கு வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். பழங்கள் உருவாவதற்கு முன் நோய் தொற்று ஏற்பட்டால், அவை பழங்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்னரே பெர்ரிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் அல்லது நிறுத்திவிடும். வளரும் பருவத்தில் குறிப்பாக சூடான, ஈரமான சூழ்நிலைகளில் இந்த நோய்க்கிருமி வாழ்கிறது.