மற்றவை

அடி மற்றும் கழுத்தழுகல் நோய்

Athelia rolfsii

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • வெள்ளை நிறம், அடர்ந்த பஞ்சுபோன்ற படலங்களுடன், வட்ட வடிவ அமைப்பு தண்டிலும் சுற்றியுள்ள நிலத்திலும் காணப்படுகின்றன.
  • இலைகள் வாடுதல்.
  • தாவரங்கள் சாய்ந்தோ அல்லது இறந்தோ போய்விடும்.

இதிலும் கூடக் காணப்படும்

29 பயிர்கள்
பார்லிகோதுமை
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

பூஞ்சைகள் முதலில் தண்டுகளை தாக்குகிறது, இருப்பினும் பிற தாவர பாகங்கள் சாதகமான சூழ்நிலையில் இருந்தால், அவையும் பாதிக்கப்படலாம். இது தாவர திசுக்களிலும், சுற்றியுள்ள மண்ணிலும் விரைவாக வளர்ந்து வெள்ளை நிறத்தில், பஞ்சுபோன்ற பூஞ்சைப் படலத்தை உருவாக்குகிறது, மேலும் இதன் தோலின் நிறம் பழுப்பு முதல் காவி வரையிலான நிறத்தில், வித்தியாசமான வட்ட வடிவில் விதைகளையும் கொண்டிருக்கும். தண்டின் திசுக்கள் வெளிர் பழுப்பாகவும், மென்மையாகவும் மாறும், ஆனால் நீர்ப்பற்று இருப்பது இல்லை. சில சந்தர்ப்பங்களில், தண்டைச் சுற்றி முற்றிலுமாக வெட்டு பட்டு, இலைகள் படிப்படியாக வாடி, சோகை கொள்கின்றன. இறுதியில், பயிர் சாய்ந்தோ இறந்தோ போய்விடும். வயல்களில், முழு வரிசைகளிலோ, பெரும் பகுதிகளிலோ பட்டுப் போன பயிர்களே காணப்படும். நாற்றுகள் குறிப்பாக பாதிக்கப்படக் கூடியவை, மேலும் அவை பாதிக்கப்பட்டால், விரைவிலேயே இறந்துவிடுகின்றன. எப்போதாவது, பழங்களும் பூஞ்சையின் படலத்தால் மூடப்பட்டிருக்கும், மேலும் அவை விரைவாக அழுகியும் போய்விடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கடுமையான பூஞ்சைகள் (பெரும்பாலும் மற்ற சிகிச்சைகளோடு இணைந்து) இந்த நோய்க்காரணிக்கு எதிராக சில கட்டுப்பாட்டை வழங்கக்கூடும். பயிர் வகையையும் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் பெரிதும் சார்ந்தே பலன்கள் அமையும் என்பதை கவனத்தில் கொள்க. ட்ரைகோடெர்மா ஹர்ஜியானம், ட்ரைகோடெர்மா விரிடே, பேசிலஸ் சப்டிலிஸ், ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஃபிலண்திசம், க்ளியோக்லேடியம் வைரன்ஸ் மற்றும் பென்சிலியத்தின் சில இனங்கள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படும் உயிரினங்களில் சில.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நடவு செய்வதற்கு முன்னர் பல பயன்பாடு கொண்ட, மண்ணிலிடும் புகை சார்ந்த பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவது, பூஞ்சையை நன்றாகக் கட்டுப்படுத்தும். மெதாம்சோடியம்-ஐ அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை நாற்றுப் பாத்திகளுக்கோ , விலையுயர்ந்த பயிர்களைக் கொண்ட வயல்களுக்கோ சிகிச்சையாக பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த அறிகுறிகள் அதேலியா ரோல்ஃப்ஸீ என்னும் பூஞ்சையால் உருவாகின்றன. இது ஸ்க்லெரோஷியம் ரோல்ஃப்ஸீ என்றும் அழைக்கப்படுகிறது என்பதால் தான், இந்த நோயின் பொதுவான பெயர் உண்டானது. இது மண்ணிலும், தாவரக் குப்பைகளிலும் குளிர் காலத்தைக் கழிக்கும். பல வகையான விவசாய மற்றும் தோட்டப் பயிர்களில் (பருப்பு, சக்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிக்காய், சோளம், கோதுமை மற்றும் வேர்க்கடலை என்று சிலவற்றை குறிப்பிடலாம்) நோயை ஏற்படுத்துகிறது. சாதகமான சூழ்நிலையில், இது மிகவும் விரைவான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நிலப்பகுதியிலோ, அதன் அருகிலோ உள்ள தாவரத் திசுக்களில் சில நாட்களுக்குள் குடியேறிவிடும். குறைந்த pH மண் (3.0 முதல் 5.0 வரை), அடிக்கடி செய்யும் நீர்ப்பாசனம் அல்லது மழை, அடர்த்தியான நடவு மற்றும் அதிக வெப்பநிலை (25 முதல் 35 டிகிரி செல்சியஸ்) போன்றவை பூஞ்சையின் வாழ்க்கைச் சுழற்சியையும், தொற்று முறையையும் ஆதரிக்கின்றன. இதற்கு மாறாக, அதிக ஹைட்ரஜன் அயனிச்செறிவை கொண்ட கொண்ட கரைசல் மண் பொதுவாக சிக்கல்களை ஏற்படுத்தாது. பாதிக்கப்பட்ட மண் மற்றும் நீரின் பெயர்ச்சி, அசுத்தமான கருவிகள் மற்றும் உபகரணங்கள், பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் சார்ந்த பொருட்கள் (விதைகள் மற்றும் உரம்) ஆகியவற்றைச் சார்ந்து இது பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட இடங்களிலிருந்து பெற்ற ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவும்.
  • எதிர்ப்பு சக்தி வாய்ந்த வகைகள் கிடைத்தால், அவற்றைப் பயன்படுத்தவும்.
  • இதற்கு முன்னர் இந்த நோயால் பாதிக்கப்படாத நிலத்தில் பயிரிடவும்.
  • நடவு செய்திடாத பயிர்களை விதைப்பு விகிதம் மிக அதிகமாக இல்லை என்பதையும் நல்ல இடைவெளி கொடுத்திருப்பதையும் சரி பார்க்கவும்.
  • தாமதமாக நடவு செய்வதும், நோய் நிகழ்வுகளைக் குறைக்க உதவும்.
  • மண்ணில் அதிக ஈரப்பதத்தைத் தடுக்க, நல்ல வடிகால் வசதிகளை வயல்களுக்கு வழங்கவும்.
  • தேவைப்பட்டால் செங்குத்தாக தாவரங்களை வைத்திருக்கக் கம்புகளை பயன்படுத்தவும்.
  • பூஞ்சைகளுக்கு சாதகமாக தாவரங்களுக்கு அதிகப்படியாக நீர் பாய்ச்ச வேண்டாம்.
  • உங்கள் கருவிகளையும், உபகரணங்களையும் துப்புரவாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வயலிலிருந்து மற்றோர் வயலுக்கு மண்ணை எடுத்துச் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
  • வயல்களை களைகள் இல்லாமல் பராமரிக்கவும்.
  • வாரத்திற்கு ஒருமுறையாவது வயலில் நோய் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணிக்கவும்.
  • நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அல்லது பயிரின் பாகங்களை எடுத்து ஆழமாக குழிதோண்டி மூடவும் அல்லது எரித்து விடவும்.
  • வயல் வேலை செய்யும்போது தாவரங்களை சேதப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • பூஞ்சை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மண்ணை மூடி, கருப்பு பிளாஸ்டிக் மறைப்பைப் பயன்படுத்தவும்.
  • சுண்ணாம்பைக் கலந்து மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவை சரி செய்யவும்.
  • தாவரங்களை வலுப்படுத்த ஒரு நல்ல உரமிடும் திட்டத்தை வழங்கவும்.
  • பூஞ்சைகளின் வளர்ச்சியினைத் தடுக்க தாவர எச்சங்களை 20 முதல் 30 செமீ வரையிலான ஆழத்தில் புதைக்கவும், பின்னர் அவற்றை சூரிய ஒளிக்கு வெளிக்கொணரவும்.
  • பிற புரவலன் பயிர்களின் மூலம் பயிர் சுழற்சியினை சில ஆண்டுகளுக்கு கடைபிடிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க