நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தையின் பசைக்கசிவு நோய்

Phytophthora spp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • மண்ணின் நிலையிலிருந்து நீடித்து வளர்ந்திருக்கும் மரப்பட்டைகளில், கருமையான, நீரில் தோய்ந்த பகுதிகள் தோன்றும்.
  • வறண்ட காலநிலைகளில், பட்டைகளின் விரிசல்களில் இருந்து, நீரில் கரையக்கூடிய பசை வெளிவரும்.
  • மண்ணிற்குக் கீழே உள்ள மரப்பட்டை நீரில் நனைந்து, வழுவழுப்பாக, செம்பழுப்பிலிருந்து கருப்பு வரையான நிறமாக இருக்கும்.
  • சிதைந்த பகுதிகள், உள் திசுக்கள் வரை நீடித்து, மரப்பட்டையைச் சுற்றி வளைத்து, அது சரிந்து விழ வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

அடி அழுகல் அல்லது பசைக்கசிவு நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் மண்ணின் நிலைக்கு அருகிலிருந்து தோன்றும். மரப்பட்டைகளில், கருமையான, நீரில் தோய்ந்த பகுதிகள் தோன்றும். ஈரமான நிலைமைகளில், அவற்றில் இருந்து ஒரு புளித்த வாசனை வெளிவரும். குறிப்பாக வறண்ட காலநிலையில், பட்டையின் நீளமான பிளவுகளிலிருந்து, நீரில் கரையக்கூடிய பசை வெளிப்படுகிறது. மண்ணிற்குக் கீழே உள்ள மரப்பட்டை நீரில் நனைந்து, வழுவழுப்பாக, செம்பழுப்பிலிருந்து கருப்பு வரையான நிறமாக, இறுதியில் மாறிவிடுகிறது. பழுப்பு நிறத்தில் சிதைந்த பகுதிகள் மரத்தின் உள் திசுக்கள் வரை நீடிக்கக் கூடும். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. பின்னர் அடுத்த காலகட்டங்களில், இறந்த மரப்பட்டை உலர்ந்து, சுருங்கி, பிளவுபட்டு, திட்டு திட்டாக உதிர்ந்து விழுந்து, திறந்த அரிநோயாக மாறிவிடும். பூஞ்சைகள், பட்டைகளைச் சுற்றி வளைத்துவிட்டால், மரங்கள் சரிந்து இறந்து போகக்கூடும். பாதிக்கப்பட்ட பழங்களில் ஒரு மென்மையான பழுப்பு நிற அழுகல் ஏற்படுகிறது, இறுதியில் அதற்கே இயல்பான ஒரு காரமான வாசனையை உருவாக்குகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

4-10 நிமிடங்களுக்கு விதைகளைச் சூடான நீரில் (சுமார் 49 டிகிரி) போட்டு வைப்பது, விதைகளின் மூலம் வரும் தொற்றை ஒழித்துவிடுகிறது. நுண்ணிய நீர்ப்பாசன முறைகளில் குளோரினைப் புகுத்துவது, ஃபைடோஃப்தோரா தொற்றுக்களை திறன்பட குறைத்துவிடுகிறது. சில பூஞ்சை அல்லது பாக்டீரியா இனங்கள் (ட்ரிகோடெர்மா மற்றும் பஸில்லஸ் இனங்கள்) ஃபைடோஃப்தோராவின் கட்டுப்பாட்டுக் கருவியாக சோதனை செய்யப்பட்டு நல்ல முடிவுகளை அளித்துள்ளன . ஆரம்ப கட்டங்களில் நோயைக் கட்டுப்படுத்த காப்பர் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தப்படலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். மெடாலாக்ஸில் மற்றும் ஃபோசீட்டில்-அலுமினியம் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு பழத்தோட்டத்தில் செய்யும் சிகிச்சை, பூஞ்சையின் தடுப்பு மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக்கு ஒரு பயனுள்ள நிறைவைக் கொடுக்கும். ஃபோசீட்டில்-அலுமினியத்தின் இலைத்திரள் பயன்பாடும், மெடாலாக்ஸில் மண் பயன்பாடும் மிக நல்ல முடிவுகளைக் காட்டியுள்ளது. அறுவடைக்கு முன் செய்யும் தெளிப்புகள், அறுவடைக்குப் பின் செய்யும் மூழ்கி வைக்கும் சிகிச்சைகள் இரண்டும் மற்றும் / அல்லது, செறிவூட்டப்பட்ட உறைகளின் பயன்பாடும் பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த அறிகுறிகள் ஃபைடோஃப்தோரா பூஞ்சைகளின் பல்வேறு வகைகளாலும் ஏற்படுகின்றன. சாதகமான சூழல்களில் (உயர் ஈரப்பதமும், உயர்ந்த வெப்பநிலையும்) அவை குறுகிய தூரம் நீந்தக்கூடிய, நீரால் பரவக்கூடிய வித்துக்களைத் தயாரிக்கின்றன. இந்த வித்துக்களே மழையாலோ, பாசனத்தாலோ மரங்களின் வேர்களுக்குக் கொண்டு செல்லப்படக் கூடிய நோய்க் காரணிகள் ஆகும். அவை முளைத்து, வேர் முனைக்குள் நுழைந்து, சல்லிவேர் முழுவதையும் அழுகச் செய்து, மீதி வேருக்கும் பிறகு பரவுகிறது. இந்த வித்துகள் தண்டின் அடிப்புறத்தைச் சுற்றி இருக்கும் சிதைவிலோ, பட்டையின் பிளவிலோ தெளிக்கப்படும்போது அடி அழுகல் அல்லது பசைக்கசிவு ஏற்படுகிறது. மரத்தில் ஏற்படும் பாதிப்பு, அதில் இருக்கும் ஃபைடோஃப்தோரா இனத்தைப் பொறுத்தும், நிலவும் சுற்றுச்சூழல் நிலைமைகளைச் (மண்ணின் வகை, தண்ணீர் இருப்பது) சார்ந்தும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட இடங்களில் இருந்து பெற்ற விதைகளை விதைக்க வேண்டும்.
  • எதிர்ப்பு சக்தியோ, சகிப்புத்தன்மையோ கொண்ட வகைகளைத் பழத்தோட்டத்திற்கு தேர்ந்தெடுக்கவும்.
  • நாற்றங்கால் தளம் நல்ல வடிகாலைக் கொண்டு இருக்க வேண்டும்.
  • பயன்படுத்துவதற்கு முன் கருவிகளை சுத்தப்படுத்தியதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • நோயினால் நேரக் கூடிய இழப்புக்களைத் தடுக்க நடுவில் சற்று மேடான படுக்கைகள் மீது மரங்களை நடவும்.
  • சிதைவுகள் குறிப்பாக தண்டுத் தளத்திற்கு அருகில் ஏற்படாமல் தவிர்க்கவும்.
  • பட்டுப்போன அல்லது பாதிக்கப்பட்ட மரப்பகுதிகளை உடனடியாக நீக்கவும்.
  • நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று, முதல் பக்கவாட்டு வேர்கள் வரை பழத்தோட்டத்தை தொடர்ந்து பரிசோதிக்கவும்.
  • வரப்பு நீர்ப்பாசன நீருக்கும் மரங்களின் தண்டுகளுக்கும் இடையேயான தொடர்பைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க