Mycosphaerella citri
பூஞ்சைக்காளான்
அறிகுறிகள் வலுவிலும், இயல்பிலும், மரத்தின் வகையைப் பொறுத்து சற்றே வேறுபடுகின்றன, ஆனால் அனைத்து வணிக வளர்ச்சிகளும் ஓரளவிற்குப் பாதிக்கப்படுகின்றன. முதலில், அவை முதிர்ச்சியடைந்த இலைகளின் மேற்பரப்பில், சோகை கொண்ட பகுதிகளால் சூழப்பட்ட மஞ்சளிலிருந்து அடர் பழுப்பு வரையான நிறத்தில் புள்ளிகளாகக் காணப்படும். இந்தப் புள்ளிகளுக்கு கீழே, இலைகளின் கீழ் பரப்பில்,வெளிர் ஆரஞ்சு நிறத்திலிருந்து மஞ்சள் சார்ந்த பழுப்பு வரையான நிறத்தில் சற்றே எழும்பிய கொப்புளங்கள் காணப்படும். பின்னர் இரு பக்கங்களிலும் காணப்படும் அறிகுறிகள் அடர் பழுப்பு நிறமாகவோ, கருப்பு நிறமாகவோ மாறி, 'பிசுக்கு' போன்ற தோற்றத்தைக் கொள்ளும். பாதிக்கப்பட்ட மரங்கள் படிப்படியாக தங்கள் இலைகளை இழந்துவிட, இது மரத்தின் வீரியத்தையும், பழ விளைச்சலையும் குறைக்கலாம். பழங்களில், இந்த பிசுக்கு நிறைந்த புள்ளிகள், பச்சை நிறப் பகுதியால் சூழப்பட்ட, சிறிய சிதைந்த கருப்பு நிறத் திட்டுகளாகத் தோன்றும். இந்த அறிகுறி பிசுக்கு புள்ளி புறணி கொப்புளம் எனப்படும். இது பழத்தின் மேற்பரப்பில் பெரும் பகுதியை மூடிவிடக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக மழையும் கொண்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் தொற்று ஏற்படலாம்.
மன்னிக்கவும், மைக்கோஸ்ஃபெரெல்லா சிட்ரிக்கு எதிரான, வேறு மாற்று சிகிச்சையைப் பற்றி நாங்கள் அறியவில்லை. இந்த நோயை எதிர்த்துப் போராட உதவும் வகையில் உங்களுக்குத் ஏதாவது தெரிந்திருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் குறிப்புகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். கோடைக்கால மாதங்களில், ஓரிரு முறை பெட்ரோலியம் எண்ணெயைக் கொண்டு சரியான நேரத்தில் செய்யும் பயன்பாடுகள், பிசுக்கு புள்ளி நோயை பொதுவாகக் கட்டுப்படுத்திவிடும். இலைகள் மற்றும் பழங்களில் வித்துகளின் ஊடுருவலை இது குறைக்கிறது. இதனால், நோய்க் கிருமி ஏற்கனவே இலைகளில் குடியேறி இருந்தாலும் கூட, நோயின் அறிகுறிகள் தோன்ற தாமதமாகின்றன. காப்பர் அல்லது காப்பர் சல்பேட்-ஐ கொண்ட தயாரிப்புகள் பொதுவாக எண்ணெய்யில் சேர்க்கப்படும் போது, இலை மற்றும் பழங்களின் அறிகுறிகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துகின்றன. பிற பூஞ்சைக் கொல்லிகளும் (உதாரணமாக: ஸ்டிரோபில்யூரின்கள்) முன்னர் பயன்படுத்தப்பட்டன. ஆனால் சில சந்தர்ப்பங்களில், அவை எதிர்ப்பு சக்தி தோன்ற வழி வகுத்துள்ளன.
தோதான பயிர் கிடைக்காத போது, மண்ணின் மேற்பரப்பிலும், பயிர் சிதைவுகளிலும், வாழும் பூஞ்சையான மைக்கோஸ்ஃபெரெல்லா சிட்ரி-யால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. வசந்த காலத்தில், நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது, இந்தப் பூஞ்சை மழைப்பொழிவு, மேல்நிலை நீர்ப்பாசனம் அல்லது அதிகமான பனி ஆகியவற்றால் வெளியிடப்படும் வித்துகளை உருவாக்குகிறது. காற்றும், அவற்றை மற்ற நாரத்தை தோப்புகளுக்கு கொண்டு செல்லக்கூடும். அவை இலைகளின் கீழ் பகுதியை அடைந்துவிட்டால், அங்கு முளைத்து, இலைப் பரப்பின் இயற்கை துவாரங்களின் மூலம், பூஞ்சை திசுக்களில் ஊடுருவுகின்றன. இதற்கு உயர்ந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் இலையில் நீடிக்கும் ஈரப்பதம் ஆகியவை சாதகமாக இருக்கும். கோடையில் முதல் நோய்த்தாக்கம் ஏற்பட்டு, பின் குளிர்காலத்தில் முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு பல மாதங்கள் பிடிக்கலாம். மாறாக, குளிர்ச்சியான வெப்பநிலையும், வறண்ட வானிலையும், குறைவான வித்து எண்ணிக்கையையும் குறைவான தொற்றையும் ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் நிலைமைகள் சாதகமாக இருந்தால், மரத்தின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும், இலைகள் தொற்றுநோய்க்கு இடமளிக்கலாம். மரங்களின் மீது துரு பூச்சிகள் காணப்படுவதும், இந்த நோயுடன் தொடர்புடையதாகும்.