Diplocarpon rosae
பூஞ்சைக்காளான்
அறிகுறிகளானது மேல்-இலை பக்கத்தில் சிறிய புள்ளிகளாக விவரிக்கப்படுகின்றன. இந்த ஊதா அல்லது கருப்பு நிறத் திட்டுகள் 2 முதல் 12 மிமீ வரை வேகமாக பெரிதாகி, பரவலான ஓரங்களுடன் காட்சியளிக்கின்றன. இலையைச் சுற்றியுள்ள பகுதி மஞ்சள் நிறமாகி, முன்கூட்டியே உதிர்ந்துவிடும். சில நேரங்களில் இளம் தண்டுகளில் சிறிய, கருப்பு நிற, சிரங்கு திட்டுகள் தோன்றும். கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படும்போது, தாவரத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இலைகளும் உதிர்ந்து, கம்மியான பூக்களே பூக்கும்.
கரும்புள்ளியைக் கட்டுப்படுத்த பின்வரும் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன: தாமிரம், சுண்ணாம்பு சல்பர், வேப்ப எண்ணெய், பொட்டாசியம் பைகார்பனேட். பேக்கிங் சோடாவையும் (சோடியம் பைகார்பனேட்) பயன்படுத்தலாம்: 1 டீஸ்பூன் (5 மில்லி) பேக்கிங் சோடாவை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, அத்துடன் ஒரு துளி திரவ சோப்பை சேர்த்தும் பயன்படுத்தலாம். பேசிலஸ் சப்டிலிஸ் என்ற பாக்டீரியாவைக் கொண்ட ஒரு கலவைப்பொருள் கிடைக்கிறது. டிரைக்கோடெர்மா ஹார்ஸானியம் என்பதை பூஞ்சைக் கொல்லிகளுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்ல கட்டுப்பாட்டை அளிக்கிறது.
உயிரியல் சிகிச்சைகள் இருந்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். கரும்புள்ளியைக் கட்டுப்படுத்த டெபுகோனசோல், டெபுகோனசோல் + ட்ரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் டிரிடிகோனசோல் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ரோஜா செடிகளில் கரும்புள்ளிகள் டிப்ளோகார்பன் ரோஸே என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்தப் பூஞ்சை உதிர்ந்த மற்றும் அழுகும் இலைகள் மற்றும் தண்டுகளில் குளிர்காலத்தை கழிக்கும். வித்துகள் காற்று மற்றும் மழைத்துளிகளால் பரவுகின்றன, இது வசந்த காலத்தில் இலைகள் விரிவதைப் பாதிக்கின்றன. 20-26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில், மழைக்காலத்தில் பூஞ்சை பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும்.