பருத்தி

அடிக்கணை சிதைவு (சோர் ஷின்)

Rhizoctonia solani

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • ஒழுங்கற்ற வடிவில், கருப்பிலிருந்து செம்பழுப்பு வரையான நிறத்தில் சிதைவுகள் நாற்றுகளின் தண்டுகளில் ஏற்படும்.
  • தண்டுகள் நடுக்கட்டுற்று, தாவரங்கள் இறக்க நேரிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

அமிழ்ந்த, நீள்வட்டத்தில் இருந்து ஒழுங்கற்ற வடிவமுடைய, செம்பழுப்பிலிருந்து கருப்பு வரையான நிறத்தில், சிதைவுகள் நாற்றுகளின் தண்டுகளில் தோன்றும். இந்தச் சிதைவுகள் பருத்தி நாற்றுகளின் தண்டுகளை நடுக்கட்டு அடையச் செய்வதால், பயிர்கள் பெரும்பாலும் அழிந்துவிடுகின்றன. மேலோட்டமான பூஞ்சை வளர்ச்சி சிதைவுகளின் மேற்பரப்பில் தோன்றக்கூடும். பெரும்பாலும் இவற்றின் மீது மண் துகள்கள் ஒட்டிக்கொள்ளும். நோய் தொற்றும், சிதைவின் வளர்ச்சியும் பெரும்பாலும் நிலப்பரப்பின் கீழ் நிலையில் ஏற்படுகின்றன, ஆனால் தண்டு வளர்ந்து, நீளும் போது, இந்தச் சிதைவுகள் மண்ணின் மேற்பரப்பில் வெளிப்படையாகத் தெரியும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

குளிரோ, மழை வானிலையோ எதிர்பார்க்கப்பட்டால், அடுத்த 4 -5 நாட்களுக்குப் பயிரிட வேண்டாம். 5 செமீ-ஐ விட ஆழமாகப் பயிரிட வேண்டாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். எட்ரிட்யாசோல், காப்பர் ஆக்சிகுளோரைடு, டால்க்லொஃபோஸ்-மெத்தில் அல்லது தியாபென்டோசோல், திராம் மற்றும் காப்டன் போன்ற பூஞ்சைக் கொல்லிகளின் கலவைகள், கணிசமாக நாற்றுகளின் வெளிப்பாட்டு சதவிகிதத்தை அதிகரித்து, பருத்தி நாற்றுகளில் நோய் குறியீட்டைக் குறைக்கின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் ரைசோக்டோனியா சோலனி என்னும் மண் பூஞ்சையின் காரணமாக ஏற்படுகின்றன, இது ஏராளமான மூலப் பயிர்களையும் தொற்றுகிறது. நாற்றுகளுக்கு ஏற்படும் இயந்திரச் சிதைவுகள், உதாரணமாக நடவு செய்யும் போது ஏற்படுவது போன்றவை, தொற்றுக்கு ஆதரவாக உள்ளன. மண்ணின் நிலைக்கு அருகே சேதங்கள் ஏற்படும்போது, அவற்றை, கடுமையான மண்ணின் மேற்பரப்பின் மீது, காற்று வீசும் போது தண்டுகள் உராய்வதால் திசுக்களில் ஏற்படும் சிராய்ப்புகளோடு குழப்பிக் கொள்ளக்கூடும். நாற்றுகள் வளரும் போது, அவை இயற்கையாக நோய்த் தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்கின்றன, ஏனெனில் வேர் அமைப்புகள் இன்னும் விரிந்து, வேரின் அணுக்கள் குறிப்பிடத்தக்க அளவு பெரிதாகிவிடுகின்றன.


தடுப்பு முறைகள்

  • நோய் அறிகுறிகளுக்காகப் பழத்தோட்டத்தை அடிக்கடி கண்காணிக்கவும்.
  • எதிர்ப்பு சக்தி வாய்ந்த அல்லது கடினமான வகைகளைத் தெரிவு செய்யவும்.
  • நோயற்ற விதைப்பு பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • ஈரமான மண்ணில் நடவு செய்ய வேண்டாம்.
  • குளிர்ந்த காலநிலையில் நீர்ப்பாசனம் செய்யாதீர்கள்.
  • சோளத்தோடும், சிறு தானியங்களோடும் செய்யும் பயிர் சுழற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
  • மண்ணின் வெப்பநிலை 20 °C க்கும் அதிகமானதாக இருக்கும்போது பயிரிடவும்.
  • உயர்த்தப்பட்ட படுக்கைகளில் பயிரிடுவது மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்கவும், வடிகாலை மேம்படுத்தவும் உதவுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க