மற்றவை

தண்டு அழுகல் நோய்

Sclerotinia sclerotiorum

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழங்கள், இலைகள் அல்லது காம்புகளில் புள்ளிகள்.
  • வெண்ணிற பஞ்சு போன்ற பூஞ்சைகள் புள்ளிகளை மூடிக்கொள்ளுதல்.
  • பின்னர் அடர்ந்த நிறத்தில் மரு போன்ற இனப்பெருக்க அமைப்புகள்.
  • தண்டு மற்றும் தாவரத்தின் மேல் பாகங்கள் வாடிப்போகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்

20 பயிர்கள்
விதையவரை
பாகற்காய்
முட்டைக்கோசு
கடுகு எண்ணெய்
மேலும்

மற்றவை

அறிகுறிகள்

புரவலன் தாவர இனங்களுக்குள், அறிகுறிகள் வேறுபடுகின்றன, எனினும் பல ஒற்றுமைகளும் உள்ளன. தொடக்கத்தில், பழங்கள், இலைகள், அல்லது காம்புகளின் மீது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட நீர்-தோய்ந்த புள்ளிகள் தோன்றும். அவை விரிவடையும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகள் வெண்மையான, பரவலான பஞ்சு போன்ற பூஞ்சையினால் மூடப்பட்டிருக்கும். அடுத்த கட்டங்களில், அதன் மீது ஸ்க்லெரோடியா என்று அழைக்கப்படும் சாம்பல் அல்லது கருப்பு மரு போன்ற இனப்பெருக்க அமைப்புகள் பரவலாகத் தோன்றும். தண்டுகள் மற்றும் கிளைகளின் அடிப்பகுதியில், ஆரோக்கியமான திசுக்களில் இருந்து தெளிவாக வரையறுக்கப்பட்ட "உலர்" சிதைவுகள் தோன்றக் கூடும். அவை சில இனங்களில், உச்சியின் அடிப்புறத்தில் குறிப்பாக தெளிவாகத் தெரியும். அடுத்த கட்டங்களில், தண்டைச் சுற்றி பூஞ்சை வளர்ந்துவிடுவதால், செடியின் மேல் பாகங்கள் வாடி, பழுப்படைந்து இறந்து விடக்கூடும். தண்டுகளுக்குள் தாவர திசுக்களுக்குப் பதிலாக ஸ்க்லெரோடியா வளர்கிறது. இது செடி இறந்துவிடுவதற்கும், சாய்ந்துவிடுவதற்கும் காரணமாகலாம். பாதிக்கப்பட்ட காய்களும், விதைகளும் சுருங்கலாம் அல்லது பூஞ்சாண வளர்ச்சியால் ஆக்கிரமிக்கப்படலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஸ்க்லெரோடினியாவின் மிகுதியான பூஞ்சாணத்தை குறைக்கவும், நோய் வளர்ச்சியைத் தடுக்கவும், கொனியோத்தைரியம் மினிடன்ஸ் அல்லது டிரைகோடெர்மாவின் இனங்கள் போன்ற பூஞ்சாண ஒட்டுண்ணிகளின் வித்துகள், துகள் வடிவங்களில் மண்ணில் பயன்படுத்தப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். கடுமையான நோய் பாதிப்புற்ற வயல்களில் மட்டுமே, இலைகளுக்கான (ஃபோலியர்) பூஞ்சைக் கொல்லிப் பயன்பாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பயிருக்கு ஏற்றார்போலும், வளர்ச்சி நிலையைப் பொறுத்தும் சிகிச்சைகள் மாறுபடும். முட்டைக்கோசு, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் ஸ்கெலெரோடினியா நோய்களைக் கட்டுப்படுத்துவது கடினமானதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இப்ரோடியான் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு (3 கி/லி தண்ணீர்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பூஞ்சைக் கொல்லிகளும் மலைக்கீரை மற்றும் வேர்க்கடலையில் பயனுள்ள கட்டுப்பாட்டை வழங்குகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் சில கலவைகளில் எதிர்ப்பு சக்தி வளர்ந்துவிடுவதும் விவரிக்கப்பட்டுள்ளது.

இது எதனால் ஏற்படுகிறது

மண் மூலம் பரவும் பூஞ்சையான ஸ்க்லெரோடினியா ஸ்க்லெரோடியோரம் என்பவற்றால் அறிகுறிகள் ஏற்படுகிறது. இதனால் நீண்ட காலத்திற்கு தாவரக் குப்பைகளிலும், மண்ணிலும் வாழ முடியும். அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பெரும்பகுதி மண்ணில் தான் நடைபெறுகிறது. நிலத்திற்கு அருகிலிருக்கும் இலைகளிலும், தாவர பகுதிகளிலும் ஏன் அறிகுறிகள் ஆரம்பிக்கின்றன என்பதை இது விளக்குகிறது. சாதகமான சூழ்நிலைகளில், இது கரிமப் பொருட்களிலும், அவ்வப்போது தாவர திசுக்களை ஆக்கிரமிப்பதன் மூலமும் தன் வளர்ச்சியை மீண்டும் தொடங்குகிறது. அவை அனைத்துத் தாவர பாகங்களிலும் குடிபெயர்வதால், விதைகள் தம் உறையிலோ, உட்புறத்திலோ நோய்க்காரணியைத் தாங்கலாம். தாவரங்களில் தயாரிக்கப்படும் புதிய வித்துக்கள் காற்றினால் பரவக்கூடியவை. உச்சியின் கீழ் காணப்படும் ஈரப்பதமான நுண்தட்பவெப்ப நிலை (மைக்ரோகிளைமேட்), வித்துகள் தண்டிற்குப் பரவ உதவுகிறது. ஆரம்பக்கால வளர்ச்சிக்கு, இலையில் பல மணி நேர ஈரப்பதமும், 15-லிருந்து 24 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையும் தேவைப்படுகிறது. வெளிப்புற ஊட்டச்சத்துக்கள் இருப்பதும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது. இந்தப் பூஞ்சை பீன்ஸ், முட்டைக்கோசு, கேரட் மற்றும் கேனோலா போன்ற பல் வகை புரவலன் தாவரங்களைக் கொண்டுள்ளது.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட இடங்களிலிருந்து பெற்ற ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தவும்.
  • சம்பந்தப்பட்ட பயிரில், எதிர்ப்பு சக்தி அல்லது அதிக சகிப்பு தன்மை வாய்ந்த வகைகள் கிடைக்குமென்றால் அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
  • முன்னர் பாதிக்கப்பட்ட நிலத்தில் நடவு செய்யாதீர்கள்.
  • பயிர்களுக்கு நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கும் வகையில், வரிசைகளுக்கு இடையேயான தூரத்தை அகலமாகப் பராமரிக்கவும்.
  • தாவரங்களுக்கு உறுதுணையாகக் கம்பிகளையோ கம்புகளையோ பயன்படுத்தவும்.
  • நோயின் அறிகுறிகள் தென்படுகிறதா என வயலைக் கண்காணிக்கவும்.
  • வயலிலும், அதைச் சுற்றியும் உள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட கிளைகள் அல்லது பயிரின் பாகங்களை வெட்டிவிடவும்.
  • வளர்ச்சியின் பிற்பகுதியில் அதிகமாக உரமிட வேண்டாம்.
  • தாவர வளர்ச்சியின் பிற்பகுதியில் அதிகப்படியான பாசனத்தை தவிர்க்கவும்.
  • நிலத்தை உழ வேண்டாம், ஏனெனில் உழுதல் அற்ற அமைப்புகளில் நோய் தாக்கம் ஏற்படும் ஆபத்து குறைவாக உள்ளது.
  • தானியங்கள் போன்ற புரவலன் அல்லாத தாவரங்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க