கத்திரிக்காய்

கத்திரிக்காயின் செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

Cercospora melongenae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளின் மேற்பகுதியில் சிறிய, வட்ட வடிவில், மஞ்சள் நிறத்தில், சற்றே குழியான புள்ளிகள் தோன்றும்.
  • இந்தப் புள்ளிகள் பெரிதாக வளர்ந்து, இணைந்து, மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் பழுப்பு நிறமாகும்.
  • இலைகள் சுருண்டு, உதிர்ந்து விடக்கூடும்.
  • விளைச்சல் குறையும்.

இதிலும் கூடக் காணப்படும்


கத்திரிக்காய்

அறிகுறிகள்

அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் தொற்று ஏற்படலாம் மற்றும் அவை இலைகள், இலைக்காம்புகள் மற்றும் தண்டுகளில் காணப்படும். ஆரம்ப அறிகுறிகளாக கீழ்ப்புறத்தில் உள்ள முதிர்ந்த மேல்பக்க இலைகளில் சிறிய, வட்ட வடிவிலான, மஞ்சள் நிற மற்றும் சற்றே குழியான புள்ளிகள் தோன்றும். காலப்போக்கில், இந்த புள்ளிகள் பெரிதாகி, மிகவும் ஒழுங்கற்றதாகி, மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்படும். பின்னர், இந்த இலைப்புள்ளிகள் இலைகளின் இரு பக்கத்திலும் காணப்படும். இலைகளின் இருப்பிடத்தைப் பொறுத்து, பழைய புள்ளிகள் ஒன்றிணைந்து பல்வேறு தோற்றங்களுடன் காணப்படும். அவை பழுப்பு நிறத்தில் இருந்து எஃகு-சாம்பல் (மேல் பகுதியில்) மற்றும் லேசான பழுப்பு நிறம் (கீழ் பகுதியில்) வரை இருக்கும். தொற்றுநோய் கடுமையானதாக இருந்தால், இலைகள் சுருண்டு கீழே விழுந்து விடும். பூஞ்சை பழங்களை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் கூட, தாவரங்களின் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக, பழங்களின் வளர்ச்சி குறைவதற்கு வழிவகுக்கிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நோய்தொற்றை கட்டுப்படுத்த உயிரியல் காரணிகளையும் பயன்படுத்தலாம். பாக்டீரியா பேசில்லஸ் சப்டிலீஸ் திரிபு க்யூஎஸ்டி 713 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உயிரியல்-பூஞ்சைக் கொல்லிகளை செர்கோஸ்போரா மெலோங்கெனேவை எதிர்த்துப்போராட இலைத்தொகுதி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். அசாடிரச்டா இண்டிகா (வேப்ப எண்ணெய்) தாவரத்தின் சாறு கூட தொற்றுநோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எப்போதும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கருத்தில் கொள்ள வேண்டும். பூஞ்சைக்கொல்லிகள் தேவைப்பட்டால், குளோரோதலோனில், மான்கோசெப் அல்லது ஆக்டாநாயிக் அமிலம் கொண்ட தயாரிப்புகளை தாமிரம் உப்புடன் சேர்த்து இலைவழி தெளிப்பான்களாகவும், மண்ணிலும் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

செர்கோஸ்போரா மெலோங்கெனே என்பது தாவரங்களில் நோய் ஏற்படுத்தும் ஒரு வகையான பூஞ்சையாகும். பூஞ்சையின் சிதல்கள் தாவரக் கழிவுகள் மற்றும் மண்ணில் குறைந்தபட்சம் ஓராண்டு வரை வாழும். பின்னர் அவை வெவ்வேறு வழிகளில் கீழ்ப்புறத்தில் உள்ள முதிர்ந்த இலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பொதுவாக அவை காற்று மற்றும் நீர் (மழை மற்றும் நீர்ப்பாசனம்) மூலம் பரவுகின்றன, ஆனால் அவை பாதிக்கப்பட்ட கருவிகளாலும் நபர்களாலும்கூட பரவுகின்றன. பின்னர் அவை தண்டுகள் மற்றும் இளம் இலைதொகுதிகளுக்கு பரவுகின்றன. ஈரப்பதம் மற்றும் அதிக ஒப்பு ஈரப்பதம் நோய் தொற்று மற்றும் வளர்ச்சிக்கு சாதகமானதாகும். எனவே மழைக் காலத்தில் (ஈரமான வானிலை, தொடர்ச்சியான தாவர ஈரப்பதம்) இந்த நோய் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை கொண்ட அல்லது நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • ஆரோக்கியமான அல்லது சான்றளிக்கப்பட்ட நோய் கிருமி-இல்லாத விதை மற்றும் தாவரப்பொருட்களை பயன்படுத்தவும்.
  • நல்ல காற்றோட்டம் மற்றும் நோய் பரவுவதைத் தடுக்க தாவரங்களுக்கு இடையில் அதிகமான இடைவெளிவிடவும்.
  • அதிகப்படியான களை வளர்ச்சியைத் தவிர்க்கவும்.
  • போதுமான உரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.
  • ஈரப்பதத்தைக் குறைக்க அதிகமான நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும் மற்றும் மேல்நிலை தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டாம்.
  • மாலையில் நீர் பாய்ச்சுவதை விட காலையில் நீர்பாய்ச்சவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும் போது வேலை செய்யாதீர்கள்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் மற்றும் உங்கள் கழிவுகளை அகற்றி, அதனை எரித்து அல்லது புதைத்து அழித்து விடவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க