பருத்தி

பருத்தியின் சாம்பல் நிற பூஞ்சைக் காளான்

Mycosphaerella areola

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சிறிய, இளம் பச்சையிலிருந்து மஞ்சள் வரையான நிறத்தில், கோண வடிவப் புள்ளிகள்.
  • இந்த புள்ளிகளுக்கு அடியில் வெண்ணிற சாம்பல் நிற துகள் வளர்ச்சி காணப்படும்.
  • இலைகள் உலர்ந்து, முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே உதிர்ந்துவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பொதுவாக வளரும் பருவத்தின் முடிவில், நோயின் அறிகுறிகள் தோன்றும். பழைய இலைகளில், சிறிய, வெளிர் பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் வரையான நிறத்தில், நரம்புகளால் வரையறுக்கப்பட்ட கோண வடிவ புள்ளிகள், மேல் பகுதியில் தோன்றும். அடிப்புறத்தில் இந்த புள்ளிகளுக்கு அடியில் வெண்ணிற சாம்பல் நிற துகள் வளர்ச்சி காணப்படும். அதிக ஈரப்பதம் நிலவும் காலங்களில், பளபளப்பான வெண்ணிற பூஞ்சை வளர்ச்சியால் அடிப்புறம் மூடப்பட்டிருக்கும். கடுமையான பாதிப்படைந்த இலைகள் சிதைந்து, சுருண்டு, உலர்ந்து செம்பழுப்பு நிறமாக மாறி, முன்கூட்டியே உதிர்ந்துவிடும். இலைகள் உதிர்வது, தாவரத்தைப் பலவீனப்படுத்தி, உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட காய்கள் வலிமை இழந்து, அறுவடையில், இழுக்கும்போதும், போரடிக்கும் போதும், முன் கூட்டியே விரிந்தோ உடைந்தோவிடுவதால், அறுவடையின் போது நேரும் இழப்புக்கள் அதிகரிக்கும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் (10 கிராம் / கிலோ விதைகள்) கொண்ட தயாரிப்புகளை கொண்டு விதை சிகிச்சை மேற்கொள்ளலாம். இந்த பேக்டீரியம் கொண்ட கலவையை தெளிப்பது நோய் தொற்றைப் பெரிதும் குறைக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பு பாக்டீரியாக்களான பாசிலஸ் சர்குலனஸ் மற்றும் செரெட்டியா மார்க்கெஸென்ஸ் ஆகியவை மைக்கோஸ்பெரல்லாவின் மற்ற இனங்களைக் கட்டுப்படுத்தவும், பிற பயிர்களில் சம்பந்தப்பட்ட நோய்கள் நேர்வதைக் குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் ஈரமாக கூடிய திறன் உடைய சல்பரை கரைத்து தெளித்தல் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 8-10 கிலோ கந்தக தூளினை தெளித்தல் போன்றவை மற்ற சாத்தியக்கூறுகளாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். நோயின் ஆரம்ப நிலைகளில் அல்லது அதன் தீவிரம் குறைவாக இருக்கும்போது, உயிரியல் சிகிச்சைகள் கருதப்படவேண்டும். நோயின் மேம்பட்ட கட்டங்களில் அல்லது அதன் தீவிரம் அதிகரிக்கும்போது, பிராபிகோனாஜொல் அல்லது ஹெக்ஸ்சாகோனாஜொல் (2 மிலி / லி) ஆகியவற்றை கொண்ட புதிய பூஞ்சைக்கொல்லிகளின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு வாரத்திலிருந்து 10 நாட்களுக்கு பிறகு இந்த சிகிச்சையை மீண்டும் செய்யவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் மைக்கோஸ்பெரல்லா அரியொலா என்னும் பூஞ்சையால் ஏற்படுகின்றன. இது முந்தைய பருவங்களின் தாவர குப்பைகள் அல்லது தானே வளரும் தாவரங்களில் உயிர் வாழ்கிறது. இவையே புதிய பருவத்தில் இந்த நோய் பரவுவதற்கான முக்கிய ஆதாரங்களாகும். 20-30 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பநிலை, அதிக நேர ஈரப்பதமும், குறைந்த பகல் நேர ஈரப்பதமும் மற்றும் விட்டு விட்டு பெய்யும் மழை போன்றவை நோய் தொற்றுவதையும், நோயின் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும். குளிர்ச்சியான வானிலை, அத்துடன் மழை இல்லாமல் கூட, வரிசையாக பல நாட்களுக்கு நீடித்திருக்கும் பனி இரவுகள் ஆகியவையும் பூஞ்சைக்கு ஏற்ற சூழலாகும். இலைகளின் சிதைவுகளில் வித்துகள் உருவாகின்றன, அதன்பிறகு காற்றால் பரப்பப்பட்டு இரண்டாம் நிலை நோய்த் தொற்றுகளுக்கு காரணம் ஆகின்றன. பருவத்தின் பிற்பகுதியில், காய் உருவாவதற்கு சற்று முன்பு அல்லது உருவாகும்போது தாவரங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி கொண்ட தாவர வகைகளை (பல உள்ளன) பயிரிடவும்.
  • வடிகால் மேம்படுத்த உயர்த்தப்பட்ட முகடுகளில் நடவு செய்யவும்.
  • பருவத்தின்போது சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ விதைக்க வேண்டாம்.
  • மழைக்குப்பிறகு கவிகைகள் சீக்கிரமாக உலர்வதற்கு தாவரங்களுக்கு இடையே இடைவெளி விடவும்.
  • நோய்க்கான அறிகுறிகளுக்காகத் தொடர்ந்து பருத்தி தோட்டத்தைக் கவனியுங்கள்.
  • அறிகுறிகள் தென்படும் இலைகளை நீக்கி, அழிக்கவும்.
  • வயதிலும் மற்றும் அதன் சுற்றிலும் உள்ள களைகளை கட்டுப்படுத்தவும்.
  • முந்தைய பருவங்களின் தன்னார்வ பயிர்களை அழித்துவிடவும்.
  • இலை ஈரப்பதத்தை குறைக்க, சொட்டு நீர்ப்பாசன முறையை பயன்படுத்தி, மேல்நிலை நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.
  • தாவரங்களுக்கு காலையில் நீர்ப்பாய்ச்சவும், ஆதலால் அவை பகல் நேரத்தில் உலர்ந்துவிடும்.
  • உயர்வான விதானம் மற்றும் மண் மேற்பரப்பை பராமரிக்க அடிக்கடி நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்கவும்.
  • தழைச்சத்து கொண்ட உரங்கள் அல்லது எருக்களின் அதிகப்படியான பயன்பாட்டை தவிர்க்கவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது தோட்டத்தில் வேலை செய்ய வேண்டாம்.
  • தாவர மிச்சங்களை அகற்றி பருத்தித் தோட்டத்திற்கு தொலைவில் எரித்துவிடவும்.
  • தானியங்கள் போன்ற மூலப் பயிர் அல்லாதவையோடு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி முறையைச் செயல்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க