பருத்தி

பருத்தியின் விதைப்புள்ளி நோய்

Glomerella gossypii

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளில் கரிய நிற சிதைந்த ஓரங்களுடன், சிவப்பிலிருந்து இளம் பழுப்பு வரையான சிறிய புள்ளிகள் தோன்றும்.
  • தண்டுகளில் ஏற்படும் காயங்கள் தாவரமே இறந்துவிடக் காரணமாகலாம்.
  • காய்களில் காணப்படும் சிறிய நீர் தோய்த்த புள்ளிகள், பின்னர் பெரிதாகி குழிவான மஞ்சள் நிற சிதைவுகளாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

பருத்தியில் அன்த்ராக்னோஸ், தாவரத்தின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் ஏற்படலாம். மேலும் இது அனைத்துத் திசுக்களையும் பாதிக்கக் கூடும். நோய்க்கிருமி நாற்றுகளைப் பாதித்துவிட்டால், வித்திலைகளிலும், முதன்மையான இலைகளிலும், கரிய நிற சிதைந்த ஓரங்கள் கொண்ட சிவப்பிலிருந்து இளம் பழுப்பு வரையான நிறத்தில் சிறிய புள்ளிகளைத் தோற்றுவிக்கும். காலர் பகுதியில் சிதைவு உருவாகும்போது, தண்டு நடுகட்டுற்று, நாற்றுகளையும் இளம் செடிகளையும் வாடி அழிந்துவிடச் செய்துவிடும். முதிர்ந்த செடிகளில், தண்டில் நோய் தொற்றுவதாலும், அது பரவுவதாலும், மரப் பட்டைகள் துண்டுகளாகப் பிரிந்து உதிர நேரலாம். பாதிக்கப்பட்ட காய்கள், வட்ட வடிவத்தில் நீரில் தோய்ந்த சிறிய புள்ளிகளைக் கொண்டுள்ளன. இவை ஈரப்பதமான சூழல்களில், விரைவாகவே, மஞ்சளிலிருந்து பழுப்பு வரையிலான நிறத்தில் உள்ளிறங்கிய சிதைவுகளாக பெருகிவிடுகிறது. பஞ்சு ஒழுங்கற்று, மெலிதான இழைக் கூட்டம் போல் ஆகி, மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறுகிறது. நோய்த் தொற்றிய காய்கள் தொடர்ந்து வளராமல், உலர்ந்து முன்கூட்டியே வெடித்துவிடுவதும் பொதுவானது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கு எதிராகக் கிடைக்கும் ஏதேனும் உயிரியல் கட்டுப்பாட்டு முறையைப் பற்றி இன்றளவும் நாங்கள் அறியவில்லை. அறிகுறிகளின் நிகழ்வையோ வீரியத்தையோ குறைக்க ஏதாவது வெற்றிகரமான முறையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். கேப்டான், கார்பாக்ஸின் அல்லது திராம் (வழக்கமாக 2 கிராம் / கிலோ விதைகளுக்கு) போன்ற பூஞ்சைக் கொல்லிகளை விதைகளில் பயன்படுத்துவது, நோயின் நிகழ்வுகளைக் குறைக்க உதவுகிறது. மான்கோஸெப், காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இலைகளின் தெளிப்புகளை, காய்கள் உருவாகும் கட்டத்தில் பயிர்களில் பயன்படுத்துவதன் மூலம் அறிகுறிகளின் வீரியத்தைக் குறைக்கலாம் (2.5 மிலி/லி தண்ணீர்).

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் கலெக்ட்டோட்ரிகம் கோசீபியம் என்னும் பூஞ்சையினால் ஏற்படுகின்றன, இது குளோமெரல்லா கோசிபி எனவும் அழைக்கப்படுகிறது. இதனால், மண்ணில் பாதிக்கப்பட்ட விதைகளிலோ செயலற்ற நிலையிலோ பருவங்களைக் கடந்து உயிர் வாழ முடியும். பிறகு சாதகமான வெப்பநிலைகளில் தன் வளர்ச்சியைத் தொடர்கிறது. இது, பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகள், அழுகிய காய்கள் அல்லது மாசுபட்ட விதைகளின் மூலம் நீண்ட தூரத்திற்கும் பரவுகிறது. வயலுக்குள், காற்று, மழை, மழைச் சாரல் மற்றும் பூச்சிகளின் மூலம் சிதறப்படும் வித்துக்களின் மூலம் இரண்டாம்நிலை தொற்று ஏற்படுகிறது. களை மூலங்களான அரிஸ்டோலோச்சியா பிரக்டியாடா மற்றும் ஹைபிஸ்கஸ் டைவர்சிஃபோலியஸ் ஆகியவற்றிலும் இந்த நோய்க் காரணிகள் உயிர் வாழ்வதாக அறியப்படுகிறது. அதன் வளர்ச்சிக்கு மிதமான ஈரப்பதமான வானிலை (29 முதல் 33 டிகிரி செல்சியஸ்), காய்கள் உருவாகும் காலத்தில் தொடர்ந்த மழை அல்லது நெருங்கிய நடவு ஆகியவை சாதகமானவை.


தடுப்பு முறைகள்

  • உங்கள் நாட்டில் இருக்கக்கூடிய சாத்தியமான தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும்.
  • ஆரோக்கியமான நோய்க்கிருமிகளற்ற விதைகள் அல்லது நாற்றுகள் மட்டுமே பயன்படுத்தவும்.
  • உங்கள் பகுதியில் இந்த நோய்க்கான தடுப்பு சக்தி கொண்ட தாவர வகைகள் கிடைக்கிறதா என சரிப்பார்க்கவும்.
  • முன்னரே பஞ்சு நீக்கப்பட்ட விதைகளை விதைக்கவும்.
  • வயலில் நல்ல வடிகால் வசதி இருப்பதனை உறுதி செய்துக்கொள்ளவும்.
  • மண்ணை செறிவூட்டுவதற்கும், தாவரங்கள் இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியினை பெறுவதற்கும் மண்ணில் எருவை சேர்க்கவும்.
  • வயலில் நீர் தேங்கி நிற்பதையும், அதிகப்படியான நீர்ப்பாசனத்தையும் தவிர்க்கவும்.
  • தெளிப்பு அல்லது மேல்நிலை நீர்ப்பாசன அமைப்பை தவிர்க்கவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது வயலில் பணி செய்வதை தவிர்க்கவும்.
  • களைகளையும், சாத்தியமான மாற்று புரவலன்களையும் அகற்றி விடவும்.
  • பழுக்கும் பழங்கள் மண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
  • அறுவடைக்குப் பின் மண் மேற்பரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட தாவர குப்பைகளை அகற்றவும்.
  • 2-3 ஆண்டுகளுக்கு எளிதில் பாதிக்காத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சியினை திட்டமிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க