Alternaria macrospora
பூஞ்சைக்காளான்
இலைகளில் ஆரம்பத்தில் ஏற்படும் நோய்த்தொற்றானது ஊதா நிற ஓரங்களுடன், 1 முதல் 10 மிமீ வரை மாறுபடும் விட்டத்தை கொண்ட சிறிய,வட்ட வடிவ, பழுப்பு நிற புள்ளிகளை உருவாக்குகிறது. இந்த புள்ளிகள் பெரும்பாலும் பொதுவான மையங்களை உடைய வளையங்களுடன் அடர்த்தியான வளர்ச்சியைக் கொண்டு இலைகளின் மேல் பரப்பில் தெளிவாக காணப்படுகிறது. இவை வளர்ச்சி அடைகையில், அவற்றின் நடுப்பகுதி படிப்படியாக உலர்ந்து, சாம்பல் நிறமாக மாறி, சில நேரங்களில் வெடிப்பு ஏற்பட்டு , கீழே விழுந்து விடும் (குண்டடி பட்ட துளை போன்ற விளைவு). இந்த புள்ளிகள் ஒருங்கிணைந்து, இலை பரப்பின் நடுப்பகுதிகளில் ஒழுங்கற்ற இறந்த பகுதிகளை ஏற்படுத்தும். இருப்பினும், ஈரப்பதமான சூழல்க நிலவும்போது, பூஞ்சையானது கணிசமான அளவிலான வித்துக்களை உற்பத்தி செய்து, வெளியிடும், இது புகை போன்ற கருமையான புண்களை ஏற்படுத்தும். தண்டுகளில், சிறிய நீர் தோய்ந்த புள்ளிகளாக இந்த புண்கள் வளர்ச்சி பெற்று, பின்னர் சொறி போன்று உருவாகி, பிளவு ஏற்பட்டு, திசுக்களை விரிசலடையச் செய்யும். கடுமையான நோய்த்தொற்றுகளில், மலர் மொட்டுகள் உதிர்ந்து கீழே விழக்கூடும். இது இறுதியில் பருத்தி காய்கள் உருவாக முடியாமல் செய்து விடும்.
சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் (10 கிராம் / கிலோ விதைகள்) முதலிவற்றுடனான விதை சிகிச்சை பயிர்களுக்கு ஓரளவு பாதுகாப்பினை வழங்கும். சூடோமோனாஸ் ஃப்ளோரசென்ஸின் கரைசலை ஒவ்வொரு 10 நாட்களுக்கும் 0.2% தெளிப்பது தொற்றுநோயைக் கணிசமான அளவு குறைக்கும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வழக்கமாக, இந்த நோய் குறிப்பிட்ட பூஞ்சைக்கொல்லி சிகிச்சையை பயன்படுத்தும் அளவிற்கு விளைச்சலை குறைக்கவில்லை. கடுமையான நோய்த்தொற்றின்போது, மான்கோசெப் உள்ள மானெப் (2.5 கிராம்/லிட்டர்), ஹெக்ஸ்சாகொனாஜொல் (1 மிலி/லிட்டர்), டெபுகோனாசொல் மற்றும் டைஃபெநோகோனாசொல் போன்ற பூஞ்சைக்கொல்லிகளை ஆல்டெர்னரியா இலை புள்ளி நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். ஸ்டிராபிலுரின்ஸ் (எ.கா. டிரிஃப்லாக்சிஸ்டிரோபின்) அல்லது ஸ்டெரோல் உயிரியல் தொகுப்பு எதிர்ப்பிகள் (எ.கா. ட்ரையாடிமெனோல், இப்கோனாசொல்) முதலியவற்றுடனான விதை சிகிச்சை, விதைகளை நோய்க்கிருமிகளுக்கு எதிராகத் தடுக்கும்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆல்டெர்னரியா மேக்ரோஸ்போரா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது உயிர்வாழும் திசுக்கள் அல்லது மாற்று புரவலன்கள் இல்லாதபோது, பருத்தி கழிவுகளில் உயிர்வாழுகிறது. நோய்க்கிருமிகள் ஆரோக்கியமான தாவரங்களுக்கு காற்றில் பரவும் வித்துக்கள் மற்றும் நீர் துளிகள் மூலம் பரவுகிறது.ஈரமான வானிலை மற்றும் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஆகியன இலைப்பகுதிகளுக்கள் நடைபெறும் வித்துக்களின் உற்பத்தி மற்றும் நோய்த்தொற்றின் செயல்முறைக்கு சாதகமாக உள்ளன. நாற்று உருவாகும் நிலை மற்றும் பருவத்தின் பிற்பகுதியில் இலைகள் முதிர்ச்சியடையும் போது, தாவரங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. கீழ்ப்பகுதியை விட மேல்புற பருத்தி இலைகளில் நோய்த்தொற்று ஆபத்து குறைவு. பூஞ்சைக்கு சாதகமான நிலைமைகளின் கீழ், நோய்த்தொற்றால் பாதிக்கப்படக்கூடிய பருத்தி வகைகள் அதிக இலைகளை விரைவாக இழக்கின்றன (இலை உதிர்தல்), குறிப்பாக காய்கள் பாதிக்கப்பட்டிருக்கும் காம்புகளில் உள்ள இலைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கூடுதலாக, தாவரங்களுக்கு ஏற்படும் பாகங்கள் ரீதியான அழுத்தம் அல்லது ஊட்டச்சத்து அழுத்தம் நோய்த்தொற்றின் அறிகுறிகளை அதிகரிக்கிறது எ.கா. கனமான பழச்சுமை அல்லது முன்கூட்டியே முதிர்ச்சி அடைதல் போன்றவை.