மக்காச்சோளம்

தென்னிந்திய துரு நோய்

Puccinia polysora

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • முதிர்ந்த இலைகளின் மேல்புறத்தில் சிறிய, சிவந்த-ஆரஞ்சு நிறத்தில், தூளான, அடர்த்தியான கொப்புளங்கள் திரளாகக் காணப்படும்.
  • பின்னர், இவை இளம் இலைகள் மற்றும் தாவரங்களின் பிற பாகங்களில் தோன்ற ஆரம்பிக்கும்.
  • சிதைந்த திட்டுக்கள் மற்றும் திசு அழுகல் இலைகளிலும் காணப்படும்.
  • ஆரோக்கியமற்ற தாவரங்கள் தண்டு அழுகல், தண்டு கீழே சாய்தல் மற்றும் தானியங்களின் தரம் குறைதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

தென்னிந்திய துரு நோயின் அறிகுறிகளானது, இலைகளின் மேல்பகுதியில் சிறிய, சிவந்த-ஆரஞ்சு நிற, குண்டூசி தலை போன்ற கொப்புளங்கள் காணப்படும், இவை இலைகளின் கீழ்ப்புறங்களில் அரிதாகக் காணப்படும். இந்தக் கொப்புளங்கள் தூள் போன்ற, வட்டம் முதல் நீள்வட்ட வடிவில், உப்பிய மற்றும் அடர்த்தியான கொத்துக்களாகக் காணப்படும். நோய்களின் பிந்தைய நிலைகளில், இவை அடர்த்தியாக படர்ந்து காணப்படும், மேலும் இவை இளம் இலைகள், இலை உறைகள், உமி மற்றும் தண்டுகளிலும் காணப்படும். சிதைவுகள் (மஞ்சள் நிறத்தில்) திட்டுக்கள் மற்றும் திசு அழுகல் (பழுப்பு நிறத்தில்) போன்றவையும் இலைகளில் காணப்படும். இளம் இலைகள் முதிர்ந்த இலைகளை விட அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவை, இதனால் தாமதமாக நடப்பட்ட தாவரங்கள் எளிதில் நோயால் பாதிக்கப்படக்கூடும். ஆரோக்கியமற்ற தாவரங்கள் தண்டு அழுகல், மற்றும் தண்டு கீழே சாய்தல் மற்றும் தானியங்களின் தரம் குறைதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இதன் பரவும் தன்மை கணிசமான விளைச்சல் இழப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வித்துக்கள் முளைப்பதைத் தடுக்க, குவாகோ (மிக்கானியா குளோமெராட்டா) என்பவற்றின் சாற்றை பயன்படுத்தவும். குவாகாவின் முழு இலைகளையும் வடிகட்டிய நீரில் மூழ்கி, 24 மணி நேரத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் இந்தக் கரைசலை வைப்பதன் மூலம் இந்தச் சாற்றைத் தயாரிக்கலாம். பின்னர், வடிகட்டும் காகிதத்தில் சாற்றை வடிகட்டி, அது 5% செறிவாக்கம் அடையும் வரை நீரில் கலந்து, மற்றும் இலைகளின் மேல்புறத்தில் தெளிக்க வேண்டும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை பூஞ்சைக்கொல்லிகளின் பயன்பாட்டினால் குணப்படுத்த முடியாது, எனவே ஆரோக்கியமான தாவரங்களில் மற்றும் ஆரோக்கியமான தாவரங்களுக்கிடையே பரவுவதைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கையாக மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும். தாவரங்களின் வயது, நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு, வானிலை சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்து இவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்துதல் மிகவும் முக்கியமானது. மான்கோசெப், சைப்ரோகோனஸோல், ஃப்ளுட்ரியாபோல் + ஃபுளுக்ஸாடிரோபின், பைராக்லோஸ்டிரோபின், பைராக்லோஸ்டிரோபின் + மெட்கோனஸோல், அஸாக்ஸிடிரோபின் + புரோப்பிகோனாஸோல், டிரைஃப்ளோக்ஸிடிரோபின் + புரோப்பிகோனாஸோல் இவற்றின் கலவைகள் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகள், நோயின் தாக்கத்தை நன்கு கட்டுப்படுத்த உதவும். ஒரு சிகிச்சையின் உதாரணம் : கொப்புளங்கள் தெரிய ஆரம்பித்தவுடன், ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் மான்கோசெப் தெளிக்கவும், இதை பூத்தல் நடைபெறும் வரை 10 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து செய்யவும்.

இது எதனால் ஏற்படுகிறது

தென்னிந்திய துரு நோயானது புசினியா பாலிசோரா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இந்த நோய் பொதுவாக வெப்ப மண்டலம் முதல் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் தாவர வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில் ஏற்படும். இந்த பிணைப்பு ஒட்டுண்ணிகளானது வாழும் தாவரப் பொருட்களில் மட்டுமே வாழக்கூடியது, தாவரக் கழிவுகள் அல்லது விதைகளில் அவற்றால் வாழ இயலாது. இதன் விளைவாக, ஒரு பருவகாலத்தில் ஏற்படும் நோய் தொற்று அடுத்துவரும் பருவங்களிலும் ஏற்படும் என்ற அவசியம் கிடையாது. பிற வயல்கள் அல்லது பகுதிகளில் இருந்து காற்றில் பறக்கும் வித்துக்கள் இந்த நோய்த் தொற்றின் முதன்மை மூலங்களாகும். இது பின்னர் காற்று மற்றும் தண்ணீர் மூலம் ஒரு தாவரத்திலிருந்து பிறவற்றுக்குப் பரவுகிறது. 27 ° செல்சியஸ் மற்றும் 33 °செல்சியஸ் ஆகியவற்றுக்கு இடையேயான வெப்பநிலை மற்றும் உயர் ஈரப்பதம் ஆகியவை மிகவும் கடுமையான நோய்த்தாக்குதலுக்கான உகந்த நிலைமைகளாகும். வளரும் காலப்பகுதியின் ஆரம்பத்தில் ஏற்படும் நோய்த்தொற்று, விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க தாவரச் சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உள்ளூரில் கிடைக்கும் எதிர்ப்புத் திறன் அல்லது சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
  • பருவக்காலத்தின் பிற்பகுதியில் மக்காசோளத்தை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பயிர்களை வலுப்படுத்த சமநிலையான உரமிடும் முறைகளை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
  • வளர்ச்சி நிலைகளின் பிற்பகுதியில் வயல்களில் மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க