கோதுமை

தோல் நிற புள்ளி நோய்

Pyrenophora tritici-repentis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சரியாக வரையறுக்கப்பட்ட பழுப்பு சிதைவுகள் மஞ்சள் நிற ஓரங்களுடன் மேற்புற மற்றும் கீழ்ப்புற இலைகளின் கூரிய பகுதிகளில் காணப்படும்.
  • சிதைவுகள் விளிம்புகளில் இருந்து இலைகளின் பிற பகுதிகளுக்கு படரும்.
  • இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்திலான தானியங்கள் அல்லது கருப்பு நிற வண்ணமாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

இலைகளில் சிதைவுகள் அல்லது வெளிறிய தோற்றம் அல்லது இரண்டும் சேர்ந்தும் கூட அறிகுறியாகத் தென்படும். பழுப்பு நிற சிதைந்த புள்ளிகள் இலைகளின் மேற்புறம் மற்றும் கீழ்புறத்தில் முதலில் தோன்றும். பின்னர் லென்ஸ் போன்ற வடிவில் விரிவுபெற்று, வெவ்வேறு அளவுகளில், வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் நிற வெளிறிய ஓரங்களுடன் தோல் போன்ற சிதைவுகளை ஏற்படுத்தும். இந்தச் சிதைவுகளின் மையப்பகுதி உலர்ந்து சாம்பல் நிறமாகும். ஈரமான இலைகளுடன் கூடிய அதிக ஈரப்பதமான சூழ்நிலையில் இந்த சிதைவுகள் அடர் மையங்களுடன் காட்சியளிக்கும். ஆரம்ப புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய கொப்புளங்களாக ஒன்றிணையும். இது இலைகளின் அழிவு மற்றும் பயிர்களில் இலை உதிர்தலை ஏற்படுத்தும். தானியங்களில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற கறைகள்8 அல்லது பிற பூஞ்சைகளுடன் இணைந்து கருப்பு நிறமாற்றத்தினை நோய்க்காரணிகள் ஏற்படுத்தலாம். இருப்பினும், உமிகள் பாதிக்கப்படுவதில்லை.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூஞ்சைகளுக்கு எதிரான நுண்ணுயிரிகள் மண்ணில் நிலைபெற சமச்சீரான உரங்களை அளித்தல் வேண்டும். அல்டெர்னரியா அல்டெர்னாடா, ஃபுசேரியம் பல்லிடோரோசியம், அசினெடோபாக்டர் கால்கோசிடிகஸ், செர்ரடியா லிக்யூஃபசியன்ஸ் மற்றும் வெள்ளை ஈஸ்ட் போன்ற உயிரிகளை புள்ளி நோய் பூஞ்சைகளுக்கு எதிராகப் பயன்படுத்தி திருப்திகரமான வகையில் நோய் குறைவதைக் காணலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பைராக்ளோஸ்ட்ரோபின், பிகோஃக்ஸ்ட்ரோபின், ப்ரோபிகோனஸோல் மற்றும் ப்ரோதியோகோனஸோல் போன்றவற்றினை அடிப்படையாக் கொண்ட பூஞ்சைக்கொல்லிகளை இலைவழியே தெளித்தல் முறையில் புள்ளி நோய்க்கு எதிராகப் பயன்படுத்தி சிறந்த பலனைப் பெறலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

பரென்னோபோரா டிரிடிசி-ரெபென்டிஸ் எனும் பூஞ்சைகளால் நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. கோதுமையின் வைக்கோல் அல்லது விதைகளில் குளிர்காலத்தில் இவை உயிர்வாழ்கின்றன. வசந்த காலத்தில், வித்துக்கள் உருவாகி, முதிர்ந்த பின்பு அவை வெளியேறுகின்றன. பின்னர் இவை காற்று மற்றும் மழைச்சாரல்களின் மூலம் பரவுகின்றன. அவற்றின் பெரிய அளவின் காரணமாக இவை குறைந்த தூரத்திற்கு மட்டுமே பரவும். அடிப்புற இலைகளை பாதிக்கும் இவை அங்கு வளர்ந்து மேலும் வித்துக்களை உருவாக்கும். இந்த வித்துக்கள் மேற்புற இலைகள் மற்றும் பிற பயிர்களை பாதிக்கும். பூஞ்சைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்கள் காரணமாக சிதைவுகள் மற்றும் வெளிறியத் தோற்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த செயல்முறை வெளிச்சத்தினைப் பொறுத்து மாறுபடக்கூடியவை. 95% க்கு மேலான ஈரப்பதம் வித்துக்களின் உற்பத்திக்கு ஏதுவானவை. இலைகளின் ஈரப்பதம், அதிக ஒப்பு ஈரப்பதம் மற்றும் 10 டிகிரி செல்சியஸிற்கு மேலான வெப்பநிலை இரு நாட்களுக்கு இருப்பது போன்றவை இரண்டாம்நிலை நோய் தொற்றுக்களுக்கு ஏதுவாக அமையும். 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை புள்ளி நோய் பரவுவதற்கு ஏதுவான வெப்பநிலையாகும்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்கவும், ஏனெனில் இப்பூஞ்சைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட விதைப் பொருட்கள் மூலமே பரவுகின்றன.
  • தடுப்புவகை பயிர்கள் கிடைத்தால் அவற்றை வளர்க்கவும்.
  • பூஞ்சைகளின் வளர்ச்சியினைக் குறைக்க, பயிர்களுக்கு இடையே அதிகமான இடைவெளிவிட்டு பயிரிடவும்.
  • அறுவடை செய்த பிறகு, நிலத்தை நன்கு உழுதல் புள்ளி நோய் ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கும்.
  • ஏனெனில் அந்த பூஞ்சைகள் மண்ணிலுள்ள நுண்ணியிரிகளால் பாதிக்கக்கூடியது.
  • புரவலன் அல்லாத பயிர்களான கடுகு, ஆளிவிதை, கிராம்பே அல்லது சோயாபீன் போன்றவற்றை ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பயிர் சுழற்சியினை மேற்கொள்ளவும்.
  • தளிர்விடும் காலம் மற்றும் பூக்கும் காலங்களுக்கிடையே பயிர்களை நன்கு கவனமாக கண்காணிக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர் ஆழமாக உழுது பயிரின் எஞ்சிய பகுதிகளை அழிக்கவும்.
  • சமநிலையிலான அளவில் உரமளித்து பயிர்களின் தடுப்புத் திறனை அதிகரிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க