மற்றவை

ரின்கோஸ்போரியம்

Rhynchosporium secalis

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • வெளிறிய, ஒழுங்கற்ற அல்லது வைர வடிவம் கொண்ட சிதைவுகள் முதிர்ந்த இலைகளில் காணப்படும்.
  • சிதைவுகளின் மையப் பகுதி காய்ந்து மற்றும் வண்ணமிழந்து காணப்படும், ஓரங்கள் பழுப்பு நிறமாக மாறும்.
  • சிதைவுகள் பெரிதாகி ஒன்று சேர்ந்து இலையின் பெரும்பகுதியினை மூடிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பார்லிகோதுமை

மற்றவை

அறிகுறிகள்

குருத்து உறைகள், இலைகள், இலை உறைகள், உமியடிச்செதில், பூவடிச்செதில் மற்றும் தூரிகை முடி (சிறு பூக்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் முடி) ஆகியவற்றில் தனிப்பட்ட காயங்கள் ஏற்படுவது இந்த ரின்கோஸ்போரியம் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் முதலில் வெளிறிய, ஒழுங்கற்ற அல்லது சாய்சதுர வடிவம் (1-2 செமீ) கொண்ட சிதைவுகளாக முதிர்ந்த இலைகளின் அடுக்குகள் அல்லது அவற்றின் அச்சில் காணப்படும். பின்னர் சிதைவுகள் பழுப்பு நிறமாகி நீர் தேங்கியது போன்று காட்சியளிக்கும். சிதைவுகளின் மையப் பகுதி காய்ந்து மற்றும் வண்ணமிழந்து, வெளிர் பழுப்பு அல்லது வெள்ளையாகக் காணப்படும். ஓரங்கள் அடர் பழுப்பு நிறமாக மாறி மஞ்சள் நிற ஒளிவட்டங்களைக் கொண்டிருக்கும். சிதைவுகள் பெரிதாகி ஒன்று சேர்ந்து முட்டை வடிவில் இருந்து நீண்ட நீள்வட்டமாக மாறும், இதற்கு இலையின் நரம்புகளும் விதிவிலக்கல்ல. நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது, இளம் இலைகள் மற்றும் பூங்கொத்துக்களும் சேர்த்து பாதிக்கப்படும். பூக்களின் பாதிப்புகளை வெளிர் பழுப்பு மைய பகுதிகள் மற்றும் தூரிகையின் அடிப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அடர் பழுப்பு ஓரங்களின் மூலம் அறியலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், ரின்கோஸ்போரியம் செகலிஸ் எதிராக எவ்வித மாற்றுச் சிகிச்சை முறைகளும் இல்லை. இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஏதேனும் தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூஞ்சைக் கொல்லிகள் கொண்டு விதைச் சிகிச்சை அளித்தல், பருவக்காலத்தின் ஆரம்பத்தில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும். ஸ்ட்ரோபிலுரின் மற்றும் அனிலினோபைரிமிடின் குழுவிலிருந்து பெறப்பட்ட வெவ்வேறு செயல்திறன் கொண்ட பூஞ்சைக் கொல்லி கலவைகளை பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

ரின்கோஸ்போரியம் விதை வழியே பரவும் பூஞ்சைகளால் ஏற்படும் நோயாகும். இப்பூஞ்சைகள் பாதிக்கப்பட்ட பயிர்களின் எஞ்சிய பாகங்கள் அல்லது களைகள் போன்றவற்றில் சுமார் ஓராண்டு காலம் வரை வாழக்கூடியவை. மழைச்சாரல் மூலம் அருகிலுள்ள பகுதிகளுக்கு இப்பூஞ்சைகளின் வித்துக்கள் பரவும் மற்றும் காற்றின் மூலமும் சிறிதளவு பரவும். வித்துக்கள் உருவாக்கம் மற்றும் நோய் தொற்று 5 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை நடைபெறும். 15 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை மற்றும் 7 முதல் 10 மணி நேரம் வரையிலான இலை ஈரப்பதம் போன்ற சூழ்நிலைகள் நோய்க்கு சாதகமான சூழ்நிலைகளாகும். கொடியிலை மற்றும் மற்றும் அதற்கு அடியில் உள்ள இரு இலைகளும் பாதிக்கப்பட்டிருந்தால், விளைச்சல் குறைந்து விடுவதே இதன் விளைவாக இருக்கும். அறிகுறிகள் அல்லாத மறைந்த தொற்று நோயாக அமைந்திருந்தால் நோய்க்காரணி ஒரு பருவம் முதல் அடுத்தடுத்த பருவங்கள் வரையிலும் பயிர் கழிவுகளில் உயிர்வாழும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதிகளில் உள்ள சகிப்புத் தன்மை கொண்ட பயிர்களை பயன்படுத்தவும்.
  • குளிர்கால பார்லி மற்றும் கம்பு பயிர்களை தாமதமாக விதைக்கவும்.
  • விளைநிலங்களில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள களைகளை அகற்றவும்.
  • நோய் தொற்று ஏற்பட ஏதுவான சூழ்நிலைகள் இருக்கும்போது, பயிர்கள் அல்லது நிலத்தினை ஆய்வு செய்யவும்.
  • பிற பயிர்களைக் கொண்டு மறுபயிரிடலைச் செய்யவும்.
  • நன்றாக ஆழமாக உழுவதன் மூலம் பயிர்களின் எஞ்சிய பகுதிகளை மண்ணில் புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க