கோதுமை

செப்டோரியா டிரிடிகி ப்ளாட்ச்

Zymoseptoria tritici

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • முதலில், சிறிய வெளிறியப் புள்ளிகள் அடிப்புற இலைகளில் தோன்றும்.
  • அவை பெரிதாகும்போது, இந்தப் புள்ளிகள் இலேசானது முதல் அடர் பழுப்பு நிறத்தில் முட்டை அல்லது பட்டை வடிவக் கொப்புளங்களாக மாறும்.
  • சிதைவுகளுக்குள் சிறிய கருப்பு புள்ளிகள் காணப்படும்.
  • பின்னர், இந்தக் கொப்புளங்கள் பழுப்பு நிறமாகி, பெரிதாகி மற்றும் முழு இலைகளையும் விழுங்கிவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

செப்டோரியா டிரிடிகி ப்ளாட்ச்சின் முதன்மை அறிகுறிகள், சிறிய வெளிறிய தோற்றப் புள்ளிகள் அடிப்புற இலைகளில் தோன்றுவதாகும், இவை நாற்றுக்கள் முளைக்க ஆரம்பித்த உடனே ஏற்படும். அவை பெரிதாகும்போது, இந்த புள்ளிகள் இலேசானது முதல் அடர் பழுப்பு நிறத்தில் முட்டை அல்லது பட்டை வடிவக் காயங்களை இலையின் கூர்பகுதிகள் வரை ஏற்படுத்தும். இத்தோற்றம் தண்டுகள் மற்றும் தலைப்பகுதியிலும் காணப்படும், ஆனால் சிறிதளவு மட்டுமே காணப்படும். மிகச்சிறிய கருப்பு பழ உடல்தோற்றம் சிதைவுகளுக்குள் இருப்பதால் ஒருவிதமான வித்தியாசமான வண்ணங்களாலான புள்ளிகளைக் கொண்டிருக்கும். பின்னர், பெரிய, துரு போன்ற காயங்களால் முழு இலைகளும் மூடப்பட்டு விடும், மற்றும் சிறிய தீவு போன்று ஆங்காங்கே பச்சை திசுக்கள் எஞ்சியிருக்கும், அவை பிரகாசமான மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். இறுதியாக, இலைகள் உலர்ந்து மற்றும் இறந்துவிடும். கருப்புப் பழத் தோற்றம் உடலமைப்பு இல்லாதிருந்தால், இதன் கொப்புள அறிகுறிகள், அலுமினியம் நச்சுத்தன்மை அல்லது துத்தநாகப் பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கும் அல்லது மற்றொரு நோயால் ஏற்படும் அறிகுறிகளை ஒத்ததாக இருக்கும். நோய் பாதித்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், பயிரின் பிந்தைய வளர்ச்சி நிலையில் இந்த அறிகுறிகள் தோன்றும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மைகோஸ்பாரெல்லா க்ராமினிகோலா பூஞ்சைகளுக்கு எதிராக உயிரிக் கட்டுப்பாடு காரணிகள் கட்டுப்பாடான சூழலில் நல்ல பலனைப் தரும். டிரைகோடெர்மா குழுவினைச் சேர்ந்த பூஞ்சைகள் மற்றும் சில சூடோமோனாட்ஸ் மற்றும் பாசில்லஸ் உயிரிகள் இலைப்புள்ளி நோய்க்கு எதிராகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குகின்றன அல்லது நோய் பரவுவதை தடுக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அதிக எண்ணிகையிலான மைகோஸ்பாரெல்லா க்ராமினிகோலா பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்புத்திறனை விரைவாக படிப்படியாக உருவாக்கிக்கொள்கின்றன, குறிப்பாக ஸ்ட்ரோபிலுரின் வகை இரசாயனங்களுக்கு எதிராக உருவாக்கிக்கொள்கின்றன. இவற்றை பயன்படுத்துவதற்கான சூழல் பூஞ்சைக் கொல்லிகளுக்கான செலவு, கோதுமையின் சந்தை மதிப்பு மற்றும் எதிர்பார்க்கப்பட்ட மகசூல் இழப்புக்கள் போன்றவற்றினைப் பொறுத்து அமையும். அஸோல்ஸின் குழு தொடர்புடைய பூஞ்சைக்கொல்லிகளை இலைவழியே தெளித்தல் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழிமுறையாகும். கார்பாஃக்ஸமைட் அல்லது பென்ஸோபெனோன் போன்றவை மாற்றுப் பூஞ்சைக்கொல்லிகளாக, எதிர்ப்புத்திறன் உருவாவதை குறைக்க உதவுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

மைகோஸ்பாரெல்லா க்ராமினிகோலா எனும் பூஞ்சைகளால் இந்த நோய் ஏற்படுகிறது. மணல் பரப்பில் உள்ள பயிரின் எஞ்சிய பாகங்கள், புரவலன் புற்கள், தானாக வளர்ந்த பயிர்கள் மற்றும் இலையுதிர் கால அறுவடைப் பயிர்கள் ஆகியவற்றில் இப்பூஞ்சைகள் உயிர்வாழ்கின்றன. இந்த வித்துக்கள் மழைச்சாரல்கள் மற்றும் காற்றின் மூலம் வெகுதூரம் வரை பரவுகின்றன. முதன்மை அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தென்படும் மற்றும் வித்துக்கள் மேற்புறங்களில் பரவுவதால், காயங்கள் மேல்புற இலைப் பகுதிகளில் தோன்ற ஆரம்பிக்கும். கொடியிலை மற்றும் அடியிலுள்ள இரு இலைகளும் பாதிக்கப்பட்டால், மகசூலில் குறைவு ஏற்படும். வெப்பநிலையினைப் பொறுத்து, இப்பூஞ்சைகளின் வாழ்க்கைச் சுழற்சி முடிய 15-18 நாட்கள் வரை அமையும். 15-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் அதிக தண்ணீர் அல்லது நீண்ட காலமாக அதிக ஈரப்பதம் இருப்பது போன்றவை இப்பூஞ்சைகளுக்கு ஏதுவான சூழ்நிலையாகும். 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழ் இதன் வாழ்க்கைச் சுழற்சி நிறுத்தப்பட்டுவிடும். நோய்த் தொற்று முழுமை பெற சுமார் 20 மணி நேரம் அதிக ஒப்பு ஈரப்பதம் அவசியம் இருக்க வேண்டும். ஈரமான வசந்தகாலம் மற்றும் கோடைக்காலம் இவற்றிற்கு ஏற்ற காலமாகும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதிகளில் கிடைக்கும் தாங்கும் திறன் கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
  • பருவ காலத்தில் தாமதமாக நடவு செய்வது சிறந்தது.
  • சிறந்த காற்றோட்டம் பயிர்களுக்கு கிடைக்க பயிர்களுக்கு நடுவே போதுமான இடைவெளிவிட்டுப் பயிரிடவும்.
  • வளர்ச்சி ஒழுங்குப்படுத்திகள் மற்றும் தேவையான நைட்ரஜனை போதுமான அளவில் அளிக்கவும்.
  • தொடர்ச்சியாக நிலத்தினை கண்காணிக்கவும்.
  • தேவையற்ற களைகள் மற்றும் பயிர்களை நீக்கவும்.
  • புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சியினை 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு செய்யவும்.
  • நன்கு ஆழமாக உழுது, பயிரின் எஞ்சிய பாகங்களை மண்ணிற்குள் புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க