சோளம்

சோளத்தின் சொரசொரப்பான இலைப்புள்ளி நோய்

Ascochyta sorghi

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • சிறிய சிவப்பு நிறப் புள்ளிகள் இலைகளில் வீங்கி மற்றும் சிறிய கருப்பு நிறக் கொப்புளங்களாக உருவாகும்.
  • அவை உடையும் போது வெள்ளை நிறப் பள்ளம் கொண்டு கருப்பு நிற ஓரங்களால் சூழப்பட்டிருக்கும்.
  • மிகச்சிறிய, கரு நிற, கடினமான மற்றும் வளர்ந்த பூஞ்சை உடல்கள் சிதைவுகளில் காணப்படும், இது அவற்றுக்குச் சொரசொரப்பான தோற்றத்தினை அளிக்கும்.
  • இறுதி நிலையில், இலைகள் இறந்து உதிரக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோளம்

அறிகுறிகள்

நோய் தொற்றின் ஆரம்ப நிலைகளில், சிறிய சிவப்பு நிறப் புள்ளிகள் இலைகளில் தோன்றும். இந்த புள்ளிகள் படிப்படியாக வீங்கி மற்றும் சிறிய கருப்பு நிறக் கொப்புளங்களாக உருவாகும், இது முக்கியமாக இலையின் மேற்பரப்பில் காணப்படும். அவை உடையும் போது வெள்ளை நிறப் பள்ளம் கொண்டு கருப்பு நிற ஓரங்களால் சூழப்பட்டிருக்கும். நோய் பாதிப்பின் பிந்தைய நிலைகளில் இந்தச் சிதைவுகள் பெரிதாக நீள்வட்டமாக மாறும் மற்றும் அடர் சிவப்பு முதல் ஊதா வரையில் நிறமாற்றம் பெற்ற மையத்தினைக் கொண்டிருக்கும். இவையனைத்தும் ஒன்றாக இணைந்து பெரிய காயங்களை ஏற்படுத்தும், இதனைச் சுற்றி குறுகிய, அடர் சிவப்பு ஓரங்கள் இருக்கும். மிகச்சிறிய, கருப்பு, கடினமான மற்றும் வளர்ந்த பூஞ்சை உடல்கள் சிதைவுகளில் காணப்படும், இது அவற்றுக்கு சொரசொரப்பான தோற்றத்தினை அளிக்கும். இது பிக்னிடியா என்றழைக்கப்படும், இது சிலவேளைகளில் ஆரோக்கியமான பச்சை பகுதிகளைக் கொண்ட இலையின் கூர்முனைகளிலும்கூட காணப்படும். இதே போன்ற சிதைவுகள் இலை உறைகள் மற்றும் சிலவேளைகளில் தண்டுகளிலும்கூட காணப்படலாம். இறுதி நிலையில், இலைகள் அழிந்து கீழே விழுலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், அஸ்கோசைடா சோர்கி எனும் இந்த நோய்க்காரணிக்கு எதிராக எவ்வித உயிரியல் சிகிச்சை முறைகளும் தற்போது எங்களிடம் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். போர்டெஃக்ஸ் கலவை போன்ற காப்பரை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி நோய் பரவுவதைக் குறைக்கலாம். இருப்பினும், இது நச்சுத்தன்மை விளைவுகளை தாவரங்களில் ஏற்படுத்தலாம் என்பதை மனதில் கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அஸ்கோசைடா சோர்கி என்னும் பூஞ்சைகளால் இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன, இவை பயிரின் எஞ்சிய பகுதிகளில் உயிர்வாழ்கின்றன. அதிக ஈரப்பதமானது கொப்புளங்களில் இருக்கும் வித்துக்கள் வழியாக நோய்த்தொற்றை ஆதரிக்கிறது. இந்த நோய்க்காரணிகள் அனைத்துவிதமான சோளம் வளரும் பகுதிகளிலும் காணப்படுகின்றன, அவற்றுள் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படுகின்றன. இருப்பினும், ஏ. சோர்கி பூஞ்சைகள் பயிர்களில் குறைவாக பயிர்சேதத்தினை ஏற்படுத்துகிறது மற்றும் மொத்த சோளம் பயிர்ப்பயனாக்கத்தில் சிறிய அளவில் மட்டுமே மகசூல் பாதிப்பிருக்கும். இந்தக் குணதிசயங்களின் காரணமாக பொருளாதார ரீதியாக இவை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. சோளம் தவிர, அஸ்கோசைடா சோர்கி ஜான்சன் புல் (சோர்கம் ஹாலேபென்ஸ்), சூடான் புல் (சோர்கம் சூடானென்ஸ்) மற்றும் பார்லி (ஹோர்டெயும் வல்கரே) பயிர் வகைகளையும் பாதிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • சுத்தமான மற்றும் ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தவும்.
  • நோய் பாதிப்பிற்குரிய சோள வகைகள் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
  • நல்ல காற்றோட்டத்திற்காக போதிய இடைவெளிகளில் பயிர்களைப் பயிரிடுவதில் கவனமாக இருக்கவும்.
  • நோய் அறிகுறிகள் குறித்து தொடர்ச்சியாக நிலத்தினைக் கண்காணிக்கவும்.
  • அதிகப்படியாக நீர்ப்பாசனம் அளித்தல் மற்றும் பயிர்கள் மூழ்கும் அளவிற்கு நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • தொன்மைவாய்ந்த பயிர் சுழற்சி முறைகளை மேற்கொள்ளவும்.
  • சூடான் புல், பார்லி அல்லது ஜான்சன் புல் போன்ற மாற்றுப் புரவலன்களை நிலத்திற்குள் மற்றும் நிலத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளருவதைத் தவிர்க்கவும்.
  • இலையின் மேற்பரப்புகள் ஈரமாக இருக்கும்போது களப்பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
  • தரமான சுகாதாரத்தை நிலத்தில் பராமரிக்க வேண்டும்.
  • பயிர்களின் எஞ்சிய பகுதிகளில் நோய்க்காரணிகள் நிலைப்பதைத் தவிர்க்க அல்லது குளிர்கால வாழுதலைத் தவிர்க்க நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க