Macrophomina phaseolina
பூஞ்சைக்காளான்
நாற்று நடும் நிலையில், மண் மூலம் பரவும் பூஞ்சை வேர்களைத் தாக்கி மற்றும் எவ்வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் தண்டுக்குள் நுழையும். பின்னர் முதிர்ந்த தண்டுகளின் உள்புறத் திசுக்களில் கருப்பு நிற வண்ணமாற்றம் ஏற்பட்டு இதன் கரித்தண்டு அழுகல் எனும் பெயர்க்கு ஏற்ப கருகிய தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த அழுகல் மெதுவாக செல் குழாய் திசுக்களைத் தாக்கி குடியேறும் மற்றும் கடினமான இழைமத் திசுக்கள், கருப்பு நிறத் தூசிக்களுடன் கணுவிடைப் பகுதிகளுக்குள் காணப்படும். போக்குவரத்து திசுக்களின் அழிவு நீர் குறைபாடு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. முதிரும் முன்னரே பயிர்கள் பக்குவ நிலையினை அடைந்துவிடும் மற்றும் இதனால் பலமிழந்த தண்டுகள் உடைந்து விடும் அல்லது சாய்ந்துவிடும். மேற்புற இலைகள் முதலில் மஞ்சள் நிறமாகும் மற்றும் பின்னர் காய்ந்துவிடும். பழுப்பு நிற, நீர் தேங்கிய சிதைவுகள் வேர்களில் காணப்படும். கடுமையான நோய்த்தொற்றுகளின்போது, 50 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் அழியும்.
பண்ணை உரங்கள், வேப்ப எண்ணெய்ச் சாறுகள் மற்றும் கடுகு கேக் போன்றவற்றினைக் கொண்டு செய்யப்படும் கரிமச் சிகிச்சைகளினால் இந்த மேக்ரோஃபோமினா நோய் கட்டுப்படும். முத்து திணை மற்றும் களைகளை அடிப்படையாகக் கொண்ட மக்கிய உரங்களுடன் மேற்கொள்ளப்படும் மண் திருத்த செயல்முறைகளினால் மண்ணில் உள்ள பூஞ்சைகள் 20-40% வரை குறையும்.விதைகள் விதைக்கும்போது டிரைக்கோடெர்மா விரிடே (250 கிலோ வெர்மிகாம்போஸ்ட் அல்லது எஃஃப்ஒய்எம் இல் 5 கிலோ செறிவூட்டுதல்) என்பவற்றை மண்ணில் பயன்படுத்துதலும் உதவக்கூடும்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். முதல் அறிகுறிகள் ஏற்படும்போதே, பயிர்கள் ஏற்கனவே பாதிப்படைந்திருப்பதால் இலைவழி பூஞ்சைக் கொல்லி முறையினைப் பயன்படுத்துவது பலனளிக்காது. பூஞ்சைக் கொல்லிகள் கொண்டு சிகிச்சை செய்யப்பட்ட விதைகள்(உதாரணமாக மான்கோஜெப் உடன்), நாற்றுக்கள் வளரும் காலத்தில் பாதுகாப்பளிக்கும். எம்ஓபி என்பவற்றை 80 கிலோ / எக்டர் என்ற அளவில் இரு பிரிவுகளாகப் பயன்படுத்துதல் தாவரங்களுக்கு உறுதி அளித்து மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான தாங்கும்தன்மையைத் தாவரங்களுக்கு அதிகரிக்கிறது.
இந்நோய் மாக்ரோஃபோமினா பாசியோலினா எனும் பூஞ்சைகளால் ஏற்படுகிறது, இது சூடான மற்றும் உலர்ந்த காலகட்டங்களில் வாழும். புரவலன் பயிர் கழிவுகள் அல்லது மண்ணில் இந்தப் பூஞ்சைகள் மூன்றாண்டுகள் வரை செயலற்ற நிலையில் இருக்கும். வேர்கள் மற்றும் தண்டுகளுக்குச் சத்துக்களை கொண்டு செல்லும் திசுக்கள் பாதிக்கப்படுவதால், சத்துக்கள் மற்றும் நீர் பயிர்களுக்குச் செல்வதில் பாதிப்புகள் நேரிடும், இதனால் பயிரின் மேற்புறப் பாகங்கள் பாதிக்கப்படும், முதிரும் முன்னரே பயிர்கள் பக்குவ நிலையினை அடைந்துவிடும் மற்றும் இதனால் பலமிழந்த தண்டுகள் உருவாகும். பூச்சிகள், பாதிக்கப்பட்ட வேர்கள் மற்றும் தளிர்கள் மற்றும் பிறவகை நோய்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகளில் இந்நோய் பரவும் நிலை அதிகரிக்கும். வறட்சிக் காலங்கள், உயர்த்தப்பட்ட மண் வெப்பநிலை (28 டிகிரி செல்சியஸ்க்கு மேல்) மற்றும் பயிரின் பிந்தைய வளர்ச்சி காலத்தில் அதிகப்படியாக உரமளித்தல் போன்றவற்றினால் நோய் அறிகுறிகள் மிக மோசமடையும்.