சோளம்

விதைப்புள்ளி இலைக் கருகல் நோய்

Colletotrichum graminicola

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழுப்பு நிற மையப்பகுதிகளை உடைய புள்ளிகள் மற்றும் கருஞ்சிவப்பு நிற ஓரங்கள் காணப்படும்.
  • கருகிய திட்டுக்கள் இலை முழுவதும் படரும்.
  • உச்சி கருகிப்போகும்.
  • தண்டு அழுகிப்போகும்.

இதிலும் கூடக் காணப்படும்


சோளம்

அறிகுறிகள்

பயிரின் வகை, சுற்றுப்புறச் சூழ்நிலைகள் மற்றும் நோய்க்காரணிகளின் வலிமை போன்றவை நோய் பாதிப்பின் அளவினைத் தீர்மானிக்கின்றன. சந்தேகத்திற்குரிய பயிர்களில் நோய்த்தொற்று மூன்று தனித்தனிக் கட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது: இலை கருகிப்போகுதல், மேற்புறம் அழிந்துபோகுதல் மற்றும் தண்டு அழுகிப்போகுதல். சிறிய, நீள்வட்ட, நீர் தேங்கிய சிதைவுகள் இலைகளின் ஓரங்கள் அல்லது மைய நரம்புகளுக்கு அருகே கீழ்ப்புற இலைகளில் முதலில் தோன்றும் மற்றும் பின்பு இலையின் மேற்பகுதியில் தோன்றும். இவை தோல் நிற மையப்பகுதிகள் மற்றும் ஊதா ஓரங்களுடன் ஒளிபுகக்கூடிய புள்ளிகளாக உருவாகி, குறுகிய திட்டுக்களாக மாறி, முழு இலையிலும் படரும் (இலை கருகல்). சூழ்நிலைகள் ஏதுவாக அமைந்திருந்தால், பயிர்களின் பிந்தைய வளர்ச்சி நிலைகளில் அடர் நிறத்தில், உப்பிய புள்ளிகள் இறந்த திசுக்களில் காணப்படும். தண்டுகள் மற்றும் தளிர்களில் காயங்கள் ஏற்படுவது, உள்புற திசுக்களில் காலணி போன்ற அமைப்புகள் உருவாகச் சாதகமாகிறது, இது உச்சி அழிதல் மற்றும் தண்டு அழுகல் ஏற்படுவதற்கு ஏதுவாக அமையும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விதைப்புள்ளி இலைக்கருகல் நோய்க்கு எதிராக, தற்போது எங்களிடம் எவ்வித சிறப்பான சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இதுநாள் வரை இந்நோய்க்கு வலுவான பூஞ்சைக் கொல்லிகள் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

நோய்க்குக் காரணமான பூஞ்சைகள் மண்ணில் உயிர்வாழும், அங்கிருந்து பயிர்களின் அடிப்புற இலைகளுக்கு காற்று மற்றும் வசந்த காலத்தில் மழைச்சாரல்களின் மூலம் பூஞ்சைகள் பரவுகிறது. இலையின் கூர்முனைப் பகுதிகளில் ஏற்படும் சிதைவுகளின் மூலம் இரண்டாம் நிலை நோய்த்தொற்று மேற்புறத்தில் இருக்கும் இலை அல்லது தண்டுகளுக்கு செல்கிறது. தண்டுகளில் ஏற்படும் பாதிப்புகளால் உள்புற திசுக்களில் காலனி போன்ற அமைப்பு உருவாகலாம். சுற்றுப்புறச் சூழல் ஏதுவாக அமைந்தால் அதாவது பிற பாதிப்புகளான உச்சி அழிதல் மற்றும் தண்டு அழுகல் போன்ற அறிகுறிகள் அதன் விளைவாகத் தோன்றும். சூடான வெப்பநிலை (20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை), நீண்ட காலத்திற்கு அதிகப்படியான ஒப்பு ஈரப்பதம் மற்றும் அடிக்கடி ஏற்படும் மழைப்பொழிவு போன்றவைகளால் நோய்க்காரணியான பூஞ்சைகளின் வாழ்க்கைச் சுழற்சி (மற்றும் நோய்) ஏதுவாக அமையும். இந்தப் பூஞ்சைகள் நாற்றுகளாக இருக்கும் நிலையில் பயிர்களைத் தாக்கும் ஆனால் சரியான உரங்களைப் பயன்படுத்தினால் அரிதாக கணிசமான மகசூல் இழப்பு ஏற்படுகிறது. வேகமாக விரிவடையும் இலைகளில் நோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைவு.


தடுப்பு முறைகள்

  • உங்களின் சந்தைப் பகுதிகளில் நோய்த்தடுப்புவகை பயிர்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றினைப் பயிரிடவும்.
  • பயிர் சுழற்சியைப் புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு (சோயா பீன்ஸ் அல்லது புல்வகை அல்லாத பயிர்கள்) வெகுகாலத்திற்குத் திட்டுமிட்டுச் செய்யவும்.
  • நோய் அறிகுறிகள் குறித்துத் தொடர்ச்சியாகக் களத்தினைக் கண்காணிக்கவும்,உதாரணமாக தண்டு அழுகுதல்.
  • மண்ணின் மலட்டுத்தன்மையினைச் சரிசெய்வது மற்றும் நிலையான ஹைட்ரஜன் அயனிச்செறிவினைப் பெறச் செய்வது போன்றவற்றைப் பராமரிக்கவும்.
  • சரியான வடிகால் அமைத்து நிலத்தினை வளம்பெறச் செய்யவும்.
  • நிலத்திற்குள் மற்றும் அதனை சுற்றியுள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பின்னர் நன்கு ஆழமாக உழுது, பயிர்களின் எஞ்சிய பாகங்களை புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க