மற்றவை

பைலோஸ்டிக்டா இலைப் புள்ளி நோய்

Nothophoma arachidis-hypogaeae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகளில் வட்ட வடிவிலிருந்து ஒழுங்கற்ற வடிவம் வரையிலான இளம் பழுப்பு நிற சிதைவுகள் சிவந்த பழுப்பு நிற விளிம்புகளால் சூழப்பட்டிருக்கும்.
  • நோய் வளரத் தொடங்கும்போது, சிதைவுகள் சாம்பல் வண்ணமாக மாறி, உலர்ந்து.
  • பின்னர் இந்த சிதைவுகள் உதிர்ந்து, துளைகள் ஏற்படுத்தி, இலைகளுக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

இலைகளில் வட்ட வடிவிலிருந்து ஒழுங்கற்ற வடிவம் வரையிலான இளம் பழுப்பு நிற சிதைவுகள் (1.5 முதல் 5 மி.மீ வரையிலான) சிவந்த பழுப்பு நிற விளிம்புகளால் சூழப்பட்டிருக்கும். நோய் வளரத் தொடங்கும்போது, சிதைவுகளின் மையப்பகுதி சாம்பல் வண்ணமாக மாறி, உலர்ந்து. பின்னர் இந்த சிதைவுகள் உதிர்ந்து, துளைகள் ஏற்படுத்தி, இலைகளுக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை கொடுக்கும். இந்த சிதைவுகள் ஒன்றுசேர்ந்து பெரிய அளவிலான ஒழுங்கற்ற வடிவம் கொண்ட சிதைந்த திட்டுக்களை உருவாக்கும். கருப்பு மிளகு போன்ற புள்ளிகள் கொண்ட பூஞ்சைகள், நோய் தாக்கப்பட்ட திசுக்களைக் கொண்ட இலையின் இருபுறங்களிலும் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், பைலோஸ்டிக்டா அராச்சிடிஸ் ஹைபோகே நோய்க்கு தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சாத்தியமான உயிரியல் சிகிச்சைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்நோய் குறைந்தபட்ச அளவே பாதிப்பினை ஏற்படுத்துவதால் இதற்கென பூஞ்சைக் கொல்லிகள் குறைந்தளவே பரிந்துரை செய்யப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

பூஞ்சைகள் மண்ணில் உள்ள பாதிக்கப்பட்ட பயிர் கழிவுகளில் ஓராண்டு வரை வாழக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. இப்பூஞ்சைகள் மண்ணிலிருந்து, ஏற்கனவே பிற நோய்களினால் பாதிக்கப்பட்ட அல்லது களப்பணியில் சேதமடைந்த (இரண்டாம்நிலை பாதிப்பு, சிதைந்த தாவரங்களின் திசுக்கள் தாக்கும் பண்புடையது. பின்னர் வளமுடன் இருக்கும் திசுக்களைத் தாக்கி நோய்க்கான தனிப்பட்ட அறிகுறிகளைக் கொடுக்கும். வெப்பநிலை 25-30 டிகிரி செல்சியஸாக இருப்பது மற்றும் மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவு 5.5-6.5 ஆக இருப்பது இப்பூஞ்சைகள் பரவவும், செடிகளில் பாதிப்பினை ஏற்படுத்தவும் சாதகமான சூழ்நிலைகள் ஆகும். பைலோஸ்டிக்டா இலைப் புள்ளி நோய் வேர்க்கடலையின் முக்கிய நோயாக கருதப்படுவதில்லை.


தடுப்பு முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகள் கிடைத்தால் அவற்றை பயன்படுத்தவும்.
  • களப்பணிகளின் போது செடிகளை சிதைத்துவிடாது காப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • சிதைவுற்ற பயிர்களை அறுவடைக்குப் பின் அகற்றி எரித்துவிடவும்.
  • மண்ணில் சுண்ணாம்பை பயன்படுத்தி அதன் ஹைட்ரஜன் அயனிச்செறிவு மதிப்பினை அதிகரிக்கச் செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க