செம்புற்றுப்பழம்

போட்ரிடிஸ் பிளைட் (கருகல்நோய்)

Botrytis cinerea

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகள், தளிர்கள், பழங்கள் அல்லது காய்களின் மீது சாம்பல் நிற பூசணம் தோன்றும்.
  • திசுக்களில் முடி போன்ற, சாம்பல்-பழுப்பு நிற திட்டுக்களாக பூஞ்சை வளர்ச்சி காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்கள் வாடி, பழுப்பு நிறமாகி, இறக்கக் கூடும்.
  • மரப் பயிர்களில், கிளைகள் பட்டுப்போவது, மற்றும் சொறிநோய் உருவாக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதிலும் கூடக் காணப்படும்

27 பயிர்கள்
பாதாம் பருப்பு
ஆப்பிள்
விதையவரை
முட்டைக்கோசு
மேலும்

செம்புற்றுப்பழம்

அறிகுறிகள்

இலைகள், தளிர்கள், காய்கள் அல்லது பழங்கள் மீது மிகுதியாகத் தோன்றும் பூஞ்சை வளர்ச்சியே மிகவும் கவனிக்கத்தக்க அறிகுறியாகும். ஆரம்பத்தில், மண்ணுடன் தொடர்புடைய அல்லது அடிபட்ட தாவர வகைகளில், சிதறிய, தோல்-பழுப்பு நிறத்தில், நீரில் நனைத்த சிதைவுகள் தோன்றும். இந்தத் திசுக்களில் அதிக அளவில், ரோமம் நிறைந்த, சாம்பல்-பழுப்பு நிற பூஞ்சை வளர்ச்சியின் திட்டுகள் ஏற்படுகின்றன. பின்னர், இளம் பழங்களிலும், காய்களிலும் இந்த பூஞ்சை வளர்ச்சி ஏற்பட்டு, ஒரு மங்கிய தோற்றத்தைத் தருகிறது. இதைத் தவிர, சேமிப்பின் போதும் அறிகுறிகள் தோன்றும். இரண்டு சந்தர்ப்பங்களிலும், கடும் இழப்புக்களை எதிர்பார்க்கலாம். பாதிக்கப்படக்கூடிய தோட்டப் பயிர்களில் அடிப்பகுதியின் இலைகளும், தண்டுகளும் அழுகி மொத்த பயிர் தோல்விக்குக் காரணமாகின்றன (பூசணத்தாக்கத்தால் அழிவு). எப்போதாவது, மரப் பயிர்களில், கிளைகள் பட்டுப்போவது மற்றும் சொறிநோய் (கேன்கர்) உருவாக்கம் காணப்படுகின்றன.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

போட்டி பூஞ்சையான டிரைகோடெர்மா ஹார்ஸியானம் கொண்ட உயிரியல் பூஞ்சைக் கொல்லிகள், மிகுந்த அளவிலான பயிர்களில், சாம்பல் பூஞ்சைக்கு எதிராகச் செயல்படுகின்றன. ஸ்ட்ரெப்டோமைசஸ் கிரைசியோவைரைடுகளின் அடிப்படையிலான தயாரிப்புகளும் கீரை வகைகள் மீது பயன்படுத்துவதற்கு கிடைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அறுவடை நேரம் நெருங்கும் போது மூலப் பயிர்களை பூஞ்சைகள் ஆக்கிரமிக்கலாம். இதனால் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதும் கடினம் ஆகிவிடுகிறது. நோய்த்தொற்றின் ஆரம்பிக் காலத்தில், குளோரோதலோனில் கொண்ட இலைத்திரள் தெளிப்பான்களை (ஃபோலியார் ஸ்ப்ரேக்கள்) பயன்படுத்தி, அவை பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். ஃப்ளூசினம் மற்றும் தையோஃபான்டே-மெத்தில் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற பூஞ்சைக் கொல்லிகளும் வேலை செய்யக்கூடும். பூஞ்சைக் கொல்லிகளை தீவிரமாகப் பயன்படுத்தினால் எதிர்ப்பு சக்தி தோன்றிவிடுவதும் பொதுவானதே.

இது எதனால் ஏற்படுகிறது

மண் மூலம் பரவும் பூஞ்சையான போட்ரிடிஸ் ஸினெரியா என்பதன் மூலம் அறிகுறிகள் ஏற்படுகிறது. இதனால் அனைத்துத் தாவர பாகங்களிலும் வளர்ந்து, பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஈரப்பதமான வானிலை, அடிக்கடி பெய்யும் மழை மற்றும் குளிர் வெப்பநிலை ஆகியவை அறிகுறிகள் தென்படுவதற்கு சாதகமாகின்றன. பூஞ்சையின் வளர்ச்சி, தாவர ஆக்கிரமிப்பு மற்றும் நோயின் முன்னேற்றத்திற்கான உகந்த வெப்பநிலையின் வரம்பு 15-20 டிகிரி செல்சியஸ் ஆகும். வயல் வேலையின் போது இயந்திரங்களால் அல்லது ஆலங்கட்டி மற்றும் உறைபனியினால் காயமடைந்த இலைகள் அல்லது தாவர பகுதிகளில் முதன்முதலில் அறிகுறிகள் தோன்றும். கீழ்ப்பகுதியிலுள்ள இலைகள் மிகவும் பாதிக்கப்படும். அதிகப்படியான நீர்ப்பாசனம் மற்றும் அடர்த்தியான விதானம் பூஞ்சை வளர்ச்சிக்குச் சாதகமான ஈரப்பதமான, அடர்த்தியான சூழலை அளித்து நோயின் நிலையை அதிகரிக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • சான்றிதழ் பெற்ற ஆதாரங்களிலிருந்து ஆரோக்கியமான நடவு பொருள்களைப் பெற்று பயன்படுத்தவும்.
  • எதிர்ப்பு சக்தியும், சகிப்புத் தன்மையும் கொண்ட வகைகளைப் பயிரிடவும்.
  • சீக்கிரம் நடவு செய்யும் வகைகளையும், சீக்கிரம் முதிர்ச்சி அடையும் வகைகளையும் பயிரிடவும்.
  • தாவரங்கள் இடையே போதுமான அளவு இடைவெளி விடவும்.
  • போதுமான வரிசை அமைப்பையும், தாவரங்கள் நிமிர்ந்து நிற்பதையும் உறுதி செய்யவும்.
  • பூஞ்சைக் காளானின் வாழ்க்கைச் சுழற்சியை பாதிக்கும் வகையில் தழைக்கூளத்தைப் பயன்படுத்தி காரணி பொருளைக் குறைக்கவும்.
  • வயலில் நல்ல வடிகால் அமைத்து, பொருத்தமற்ற பாசனத்தை தவிர்க்கவும்.
  • வயலைக் கண்காணித்து, அழுகும் தாவர திசுக்களை நீக்கிவிடவும்.
  • தாவரங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
  • பயிர்களுக்கு அதிக உரமிடுதல் வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க