அரிசி

நெற்பயிரின் உறை கருகல் நோய்

Rhizoctonia solani

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • தண்டுகளில், நீள்வட்டமான பச்சை முதல் சாம்பல் நிறத்தில் நீர் தேங்கிய சிதைவுகள் காணப்படும்.
  • பழுப்பு நிற ஓரங்களுடன் ஒழுங்கற்ற, சாம்பல் முதல் வெள்ளை நிற சிதைவுகள் இலைகள் மற்றும் தண்டுகளில் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

தண்ணீர் அளவிற்கு அருகேயுள்ள தண்டுகளில் நோய்த் தொற்றின் முதன்மையான அறிகுறிகள் தோன்றும். இந்த காயங்கள் 1-3 செமீ நீளத்தில், நீள்வட்டமான பச்சை முதல் சாம்பல் நிறத்தில் நீர் தேங்கிய சிதைவுகளாக காணப்படும். இவை ஒழுங்கற்ற வடிவில் சாம்பல் முதல் வெள்ளை சிதைவுகளாக பழுப்பு நிற ஓரங்களுடன் வளரும். நோய் அதிகரிக்கையில், தாவரங்களின் மேல்பகுதிகள் பாதிக்கப்படும். இந்த பாகங்களில், வேகமாக வளரும் சிதைவுகள் காணப்படும், அத்துடன் முழு இலையும் பிரகாசமாகும். இது இலைகள் மற்றும் மொத்த பயிர்கள் அழிந்துவிடுவதில் கொண்டு போய் முடிக்கும். மேலும் பூஞ்சைக் கொப்புளங்கள் பயிரின் மேற்பரப்பில் உருவாகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

துரதிர்ஷ்டவசமாக, ரிசோக்டோனியா சோலனிக்கு எதிராக திறன்வாய்ந்த சிகிச்சை முறைகள் எதுவும் தற்போது இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய்த்தொற்றைத் தடுக்க, பின்வரும் பூஞ்சை கொல்லிகளைப் பயன்படுத்துங்கள்: ஹெக்ஸாகோனசோல் 5 ஈசி ( 2 மில்லி /லி) அல்லது வாலிடமைசின் 3 எல் ( 2 மில்லி/லி) அல்லது ப்ராபிகோனசோல் 25 ஈசி ( 1 மில்லி/லி) அல்லது ட்ரைஃப்ளோக்ஸிஸ்ட்ரோபின் + டெபுகோனசோல் ( 0.4 கிராம்/லி). 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மாறி மாறி தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

அதிக வெப்பநிலை 28 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது, அதிகளவில் நைட்ரஜன் உரமளிப்பது மற்றும் ஒப்பு ஈரப்பதம் 85-100% அதிகமாக இருப்பது அரிசியின் உறை கருகல் நோய்களுக்கான உகந்த நிலையாகும். முக்கியமாக மழைக்காலங்களில், நோய் பரவுதல் மற்றும் நோய் பாதிப்பு அதிகமிருக்கும். மூடப்பட்ட கவிகைகள் ஈரப்பதமான நிலைமைகள் மற்றும் தொடர்புக்கு வழிவகுக்கிறது. நோய்க்குக் காரணமான பூஞ்சைகள் பூசண நூல்கற்றைகளாக, பல ஆண்டுகள் மண்ணில் ஓய்வு நிலையில் இருக்கும். நிலத்தில் நீர்வரத்து அதிகரிக்கும்போது இப்பூஞ்சைகள் மேற்பரப்பிற்கு மிதந்துவரும். நெற்பயிரை அடைந்தவுடன் இப்பூஞ்சைகள் இலை உறைகளுக்குள் நுழைந்து, நோய்த்தொற்றுக்கான செயல்முறையை தொடங்கும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான விதைகளையும், சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து விதைகளை வாங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் பகுதியில் கிடைத்தால், இந்த நோயை எதிர்க்கும் வகைகளைப் பயன்படுத்துங்கள்.
  • உங்கள் நெற்பயிர் நாற்றுகளை தாமதமாக நடவு செய்வதை திட்டமிடவும்.
  • நடவு நேரத்தில் விதைப்பு விகிதங்களைக் குறைக்கவும் அல்லது தாவரங்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவும்.
  • பயிருக்கு ஏற்றவாறு சீரான உரமிடும் திட்டத்தையும், தழைச்சத்துக்களை பிரித்தும் பயன்படுத்தவும்.
  • பயிர் நிறுவப்படுவதற்கு உகந்த அடர்த்தியைப் பராமரிக்கவும் (நேரடி விதைப்பு அல்லது நடவு).
  • புரவலன் களைகளை கட்டுப்படுத்தவும், குறிப்பாக ஊடுசெல் பாதையில்.
  • தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்காக பருவத்தின் ஆரம்பத்தில் வயலின் நல்ல வடிகாலினை உறுதி செய்யவும்.
  • அறுவடைக்குப் பிறகு பயிர்த்தாள்கள் மற்றும் பிற தாவர கழிவுகளை அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க