Fusarium oxysporum
பூஞ்சைக்காளான்
வாழையின் இனம், நோயின் வலிமை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து அறிகுறிகள் சற்றே மாறுபடும். இந்த நோய் ஆரம்பத்தில் பழைய இலைகளைப் பாதிக்கிறது. பின்னர் படிப்படியாக மேலே நகர்ந்து இளம் இலைகளை அடைகிறது. இலைகளும் காம்புகளும் மஞ்சளுற்று வாடுவதும், தண்டுகள் பிளவுபடுதலும், இந்த நோயின் இயல்புகளாகும். நோயுற்ற இலைகள் பழுப்பு நிறமாக மாறி, காய்ந்து இறுதியில் காம்பின் அருகே ஒடிந்து, தண்டுகளை சுற்றி "பாவாடை" போல் உருவாகிவிடும். .தண்டுகளில், மஞ்சளிலிருந்து சிவப்பு வரையான நிறத்தில் வரிகள் காணப்படுகின்றன, அவை அடிமட்டத்தில் மிகவும் தீவிரம் அடைகின்றன. குறுக்கு வெட்டு பிரிவுகளில் தெரியும், சிவப்பிலிருந்து அடர்-பழுப்பு வரையான நிற மாற்றம் கொண்ட தண்டுகளின் உட்புற திசுக்கள், பூஞ்சை வளர்ச்சியையும், திசு அழுகுவதையும் குறிக்கிறது. இறுதியில், நிலத்துக்கு மேலேயும் கீழேயும் இருக்கும் அனைத்துப் பாகங்களும் அழுகி இறந்துவிடும்.
டிரைகோடெர்மா விரிடே என்ற பூஞ்சை அல்லது சுடோமோனஸ் ஃப்ளூரோசன்ஸ் என்ற பாக்டீரியா, போன்ற உயிரியல் சார்ந்த கட்டுப்பாட்டு உபகரணங்களை மண்ணில் பயன்படுத்துவது, நோய் ஏற்படுவதையும், அதன் தீவிரத்தையும் குறைப்பதற்கான பயனுள்ள முறைகள் ஆகும்.
உயிரியல் சிகிச்சைகளோடு, தடுப்பு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து கிடைத்தால், அத்தகைய அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். வாழையில் வரும் மற்ற பூஞ்சை நோய்களைப் போல் அல்லாமல், ஃப்யுசேரியம் வாடல் நோயை ஒருமுறை கண்டுபிடித்துவிட்டால், பூஞ்சைக் கொல்லிகளைக் கொண்டு கட்டுப்படுத்திவிட முடியாது. நடவு செய்து 6 மாதங்களில் ஆரம்பித்து, ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் குறிப்பிட்ட பூஞ்சைக்கொல்லிகளில் (10 கிராம் / 10 லிட்டர் தண்ணீரில்) வாழைக் கன்றுகளை மூழ்கவைத்து பின் நிலத்தில் நீரை நிறைத்துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
பனாமா நோய் (ஃப்யுசேரியம் வாடல் நோய் என்றும் அழைக்கப்படுகிறது) ஃப்யுசேரியம் ஆக்ஸிபோரம் என்னும் பூஞ்சையின் கிளையினத்தால் ஏற்படுகிறது, இது பல தசாப்தங்களாக மண்ணில் வாழக்கூடியது. இது வேரின் சிறிய முடிகளின் மூலம் பயிருக்குள் நுழைகிறது, இதற்கு லேசான, மோசமான வடிகால் கொண்ட மண் சாதகமாகிறது. மேற்பரப்பு நீர், வாகனங்கள், கருவிகள் மற்றும் காலணிகளால் குறுகிய தூரங்களுக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நடவு பொருட்கள் தான், நோய் நீண்ட தூரங்களுக்குப் பரவுவதற்கான, மிகவும் பொதுவான வழியாகும். நோய் தாக்கத்திற்கு உயர்ந்த வெப்பநிலை ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. தண்டுகளில் உள்ள போக்குவரத்து திசுக்களின் சிதைவின் காரணமாக, இலைகளில் சோகையும், பயிரின் வீரியமின்மையும், ஏற்படுகிறது, இதனால் நீர் மற்றும் ஊட்டச்சத்தின் போக்குவரத்து பாதிப்படைய நேர்கிறது. இந்த அனைத்து நிலைமைகளும் நேர்ந்துவிட்டால், ஃப்யுசேரியம் வாடல் நோய் வாழையில் மிகவும் அழிவுண்டாக்கும் நோய் ஆகும்.