வாழைப் பழம்

வாழையின் விதைப்புள்ளி நோய்

Colletotrichum musae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழங்களில் அடர் பழுப்பிலிருந்து கருப்பு நிறம் வரையிலான, அமிழ்ந்த புள்ளிகள் தோன்றும்.
  • அவற்றின் மையப் பகுதியில், ஆரஞ்சிலிருந்து சால்மனின் இளஞ்சிவப்பு வரையிலான நிறத்தில் பூஞ்சை வளர்ச்சி தோன்றும்.
  • பழங்கள் முன்கூட்டியே பழுக்கக்கூடும் மற்றும் அழுகிப்போகக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

இந்தப் பூஞ்சை, அடர் பழுப்பிலிருந்து, கருப்பு வரையிலான நிறத்தில், அமிழ்ந்த புள்ளிகளை பாதிக்கப்பட்ட பழங்களின் தோலின் மீது ஏற்படுத்துகிறது. ஆரம்ப அறிகுறிகள் பச்சை பழங்களில் (காய்வட்டுக் கனிகளில்) காணப்படுகின்றன. மேலும் அடர் பழுப்பிலிருந்து கருப்பு வரையிலான நிறத்தில், வில்லை வடிவ, வெளிறிய ஓரங்களைக் கொண்ட, சிதைவுகளை ஏற்படுத்துவது இதன் இயல்பாகும். மஞ்சள் நிற பழங்கள் மீது, இந்தச் சிதைவுகள் பல அளவுகளிலும் தோன்றி, அவை ஒருங்கிணைந்து கணிசமான அளவில், கருப்பு நிறத்தில் அமிழ்ந்த திட்டுகளாகக் கூடும். மையப் பகுதியில், ஆரஞ்சிலிருந்து சால்மனின் இளஞ்சிவப்பு வரையிலான நிறத்தில் பூஞ்சை வளர்ச்சி தோன்றும். பூவில் முன்பிருந்த நோய்த் தொற்றின் விளைவாக அறிகுறிகள் பழத்தின் நுனிகளில் கூட தோன்ற ஆரம்பிக்கலாம். பாதிக்கப்பட்ட பழங்கள் முன்கூட்டியே பழுத்து, பழத்தின் சத்து, கொஞ்சம் கொஞ்சமாக அழுகலால் பாதிக்கப்படக் கூடும். அறுவடைக்கு நீண்ட நேரம் கழித்து, போக்குவரத்து அல்லது சேமிக்கும் கட்டங்களிலும் கூட முதல் அறிகுறிகள் தோன்றலாம்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

10% அரேபிய கோந்து உடன் 1.0% சிடோசன்-ஐ (சிட்டினின்-இலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது) அடிப்படையாகக் கொண்ட உயிர்-பூஞ்சைக் கொல்லிகளை கொண்டு, அறுவடையின் போது பழங்களைப் பதனிடுவதன் மூலம், சேமிக்கும் போது ஏற்படும் நோயின் ஒரு பகுதியை கட்டுப்படுத்தலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிட்ரிக் சாறுகள், ஸிங்கிபேர் ஆஃபீஸ்னாலே ரைசோம் சாறுகள் மற்றும் அகாசியா அல்பீடியா, பொலிஅல்தியா லொங்கிஃபோலியா மற்றும் கிளெரோடேண்ட்ரம் இனெர்மே-யின் இலைகளின் சாறுகள் உள்ளிட்ட பல்வேறு விதமான தாவரம் சார்ந்த கலவைகளை, நோயின் வளர்ச்சியைத் தவிர்ப்பதற்கு பயன்படுத்துவதும் ஓரளவு பலனளித்துள்ளன. இந்த நம்பிக்கையைத் தரும் தகவல் இன்னும் வயல்வெளிகளில் நடத்தும் சோதனைகளில் உறுதி செய்யப்பட வேண்டும். 2 நிமிடங்களுக்கு 55 டிகிரி செல்சியஸ்-இல் தண்ணீரில் பச்சைப் பழங்களை மூழ்க வைப்பதும் நோய் தாக்கத்தைக் குறைக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். சாகுபடி செய்யும் போது, வாழைப்பழக் குலைகளின் மேல் மான்கோசெப் (0.25%) அல்லது பென்சீமிடசோல்ஸ் (0.05%) கொண்ட தயாரிப்புகளை தெளித்து பின்னர் மாசுபடாமல் தவிர்க்க மூடி வைக்கலாம். அறுவடை செய்யப்பட்ட பழங்களை, பென்சீமடைசோல் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளில் மூழ்க வைத்து எடுக்கவோ, தெளிக்கவோ செய்யலாம். உணவு தர இரசாயன பொருளான ப்யூட்டிலேட்டட் ஹைட்ராக்ஸியானிசோல் (BHA) கொண்டு பழங்களை பூசுவதால், இந்த பூஞ்சைக் கொல்லிகளின் செயல்பாடுகள் அதிகரிக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

கோலெட்டோட்ரைகம் மியூஸே என்னும் பூஞ்சையால், விதைப்புள்ளி நோய் ஏற்படுகிறது. இது பட்டுப் போன அல்லது அழுகும் இலைகளிலும் பழங்களிலும் உயிர் வாழும். அதன் வித்துகள் காற்று, நீர், பூச்சிகள், மற்றும் வாழைப்பழங்களை உணவாகக் கொள்ளும் பறவைகள் மற்றும் எலிகளின் மூலம் பரவலாம். அவை பழத்தோலின் சிதைவுகளின் மூலம் பழத்திற்குள் நுழைந்து, பின் முளைத்து, அறிகுறிகளின் வெளிப்பாட்டைத் தொடங்குகின்றன. தொற்றுநோய்க்கான சாதகமான சூழ்நிலைகள், உயர்ந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் அடிக்கடி மழைப்பொழிவதும் ஆகும். மரக் குலைகளில் பழுக்கும் பழங்களிலோ, அறுவடைக்குப் பின் சேமிக்கும்பொழுதோ அறிகுறிகள் தோன்றலாம். இது போக்குவரத்தின் போதும், சேமிப்பின் போதும் வாழைப் பழங்களின் தரத்தைப் பாதிக்கும் முக்கிய நோய் ஆகும்.


தடுப்பு முறைகள்

  • அறுவடையின் போதும், தொகுத்தல் மற்றும் சேமிப்பின் போதும் வாழையின் திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
  • மாசுபடுதலில் இருந்து அவற்றை பாதுகாக்க, குலை வந்தவுடனேயே பிளாஸ்டிக் உறைகளைப் பயன்படுத்துங்கள்.
  • அறுவடைக்குப் பின் மாசடைவதைத் தடுக்க, சுத்திகரிப்பு நிலையங்களையும், சேமிப்பு வசதிகளையும் சுத்தம் செய்யவும்.
  • தோலிலிருந்து பூஞ்சை காளான்களின் வித்துகளை நீக்க, நீரால் கழுவவும்.
  • சிதைந்த இலைகளையும், மீதமுள்ள பூவின் பகுதிகளையும் அகற்றிவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க