வாழைப் பழம்

மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா

Mycosphaerella sp.

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • முதலில், இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.
  • குறுகிய, மஞ்சள் நிற ஒளிவட்டத்துடன் கூடிய கோடுகளை இலைகளின் நரம்புகள் வரை தோற்றுவிக்கும்.
  • பெரிய சிதைந்த பகுதிகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

இரு சிகடோகா பூஞ்சைகள் தாக்கியதன் ஆரம்ப அறிகுறிகள் 3-வது மற்றும் 4-வது திறந்த இலைகளில் காணப்படுகின்றன. சிறிய, இளம் மஞ்சள் நிறமுள்ள புள்ளிகள் (1-2 மிமீ நீளம்) இலைகளின் மேல் பகுதியில், இரண்டாம் நிலை நரம்புகளுக்கு இணையாகவும் (மஞ்சள் சிகடோகா) மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிற திட்டுக்களாக அடிப்புறத்திலும் (கருப்பு சிகடோகா) காணப்படும். இந்தப் புள்ளிகள் பின்னர் சுழல் வடிவத்துடன் குறுகிய, பழுப்பு அல்லது அடர் பச்சை புள்ளிகளாக உருவாகும். இந்தச் சிதைவுகள் பின்னர் நரம்புகளுக்கு இணையாக விரிவடைந்து, நீரில் தோய்ந்த மையங்களும், மஞ்சள் நிற ஒளிவட்டமும் (நீளம் 4 முதல் 12 மி.மீ.) கொண்ட நீளமான துருப்பிடித்த சிவப்பு நிறம் கொண்ட கோடுகளாக உருவாகின்றன. கோடுகளின் மையங்கள் படிப்படியாக, சிதைவின் அறிகுறியாகச் சாம்பல் பழுப்பிலிருந்து, பழுப்பு நிறமாக மாறிவிடும். இலை ஓரங்கள் நெடுகிலும், அவை இணைந்து, மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்ட, பெரிய, கருப்பு அல்லது பழுப்பு நிற சிதைவுகளாக மாறுகின்றன. இலைகளில் விரிசல் விழுவது அவற்றுக்கு ஒரு கிழிந்த தோற்றத்தைத் தருகிறது.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைகோடெர்மா அட்ரோவிரிடே அடிப்படையிலான உயிரி-பூஞ்சைக் கொல்லிகளுக்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஆற்றல் உண்டு. மேலும் சாத்தியப்படும் துறைகளில் இவற்றின் பயன்பாடுகளுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கத்தரிக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் போர்டியாக்ஸ் தெளிப்பான்கள் இந்த தாவர பாகங்களில் நோய் பரவுவதைத் தடுக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய் பரவலாக இல்லாத போது மான்கோசெப், காலிக்ஸின் அல்லது குளோரோத்தலோனிலைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை இலைத்திரள் தெளிப்பானாக (ஃபோலியார் ஸ்ப்ரேஸ்) பயன்படுத்தலாம். பிரோபிகோனசோல், ஃபென்ப்யூகோனாசோல் அல்லது அஸோக்சிஸ்டிரோபின் போன்ற அமைப்புமுறை பூஞ்சைக் கொல்லிகளின் சுழற்சிகள் நன்றாக வேலை செய்கின்றன. பூஞ்சை, எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதை தடுப்பதற்கு பயிர் சுழற்சி முக்கியம்.

இது எதனால் ஏற்படுகிறது

மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகாவின் அறிகுறிகள் மைக்கோஸ்பெரெலா என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இது வாழைகளை பாதிக்கும் மிகவும் அழிவுகரமான நோய்களில் ஒன்றாகும். தாவரங்களின் இறந்த அல்லது உயிருள்ள பாகங்களின் திசுக்களில் இந்தப் பூஞ்சைகள் உயிர்வாழும். அங்கு அவை தோற்றுவிக்கும் வித்துக்கள் காற்று மற்றும் மழைச் சிதறல் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. தாவரங்களின் பாதிக்கப்பட்ட உறுப்புகள், குப்பைகள் அல்லது பாதிக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றின் மூலம் இவை பிற வழிகளில் பரவுகின்றன. இது அதிக உயரங்களிலும், குளிரான வெப்பநிலையிலும் அல்லது சூடான சூழல்களும், அதிக ஒப்பு ஈரப்பதத்துடனுமான மிதவெப்ப மண்டல வளர்ச்சிப் பிரதேசங்களில், மழைக்காலங்களில் மிகுதியாக இருக்கும். பூஞ்சையின் உகந்த வளர்ச்சி வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸ் ஆகும். மேலும் இளம் இலைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை ஆகும். இந்த நோய், தாவர உற்பத்தியைக் குறைக்கிறது. இது கொத்துக்களின் அளவுகளைப் பாதித்து பழங்களின் பழுக்கும் நேரத்தைக் குறைக்கிறது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும் (இது சுவையை எதிர்மறையாகப் பாதிக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்).
  • கடினமான களிமண் போன்ற வலுவான மண்ணைத் தவிர்க்கவும்; நல்ல வடிகாலின் மூலம் அதிக மண் ஈரத்தைத் தவிர்க்கவும்.
  • இலைகளை உலர்ந்ததாக வைத்திருக்க பொதுவான காற்று அல்லது காலை நேர சூரிய ஒளி பெறும்படி தாவரங்களை பயிரிடவும்.
  • நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்துவதற்குத் தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளிவிடவும்.
  • தாவரங்கள் மூழ்கும்படி நீர்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
  • வயல்களிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள களைகளை நீக்கவும்.
  • தாவரங்களுக்குச் சமச்சீரான ஊட்டச்சத்தை உறுதிபடுத்தவும்.
  • நோய்தொற்றைக் குறைக்க பொட்டாசியம் மிகுந்த உரங்களைப் பயன்படுத்தவும்.
  • மண்ணில் பூஞ்சை வளர்ச்சியைச் சமாளிக்க, நைட்ரஜனின் காரணியாக (தழைச்சத்துக்களின் ஆதாரமாக) யூரியாவைப் பயன்படுத்துங்கள்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி, பின்னர் தோட்டத்திற்கு வெளியே எரித்து விடவும் அல்லது புதைத்து விடவும்.
  • தாவர எச்சங்களை நீக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க