Botryosphaeria rhodina
பூஞ்சைக்காளான்
பூஞ்சை பாட்ரியாஸ்பேரியா ரொடீனாவால் பாதிக்கப்பட்ட மாமரங்களில், உலர்ந்த கிளைகளில் பூஞ்சை தன்னை வெளிப்படுத்தி, இலை உதிர்வுக்கு வழிவகுக்கும். நோய் தொற்றின் ஆரம்ப கட்டத்தில், மரபட்டைகள் நிறமாறி, கருத்து போகும். அதனைத் தொடர்ந்து இளம் கிளைகள் அதன் அடிப்பகுதியில் உலர தொடங்கி, இலைகள் பாதிக்கப்படும் வரை வெளிப்புறமாக பரவும். இலை நரம்புகள் பழுப்பு நிறமாகும்போது, இலைகள் மேல்நோக்கி சுருண்டு, இறுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து விடும். நுனி கருகல் நோயின் இறுதி கட்டங்களில், கிளைகள் மற்றும் அடி மரங்களில் பசை போன்ற திரவப்பொருட்கள் சுரக்கும். ஆரம்பத்தில், சிறிய பசை போன்ற நீர்த்துளிகள் தோன்றும், ஆனால் நோய் அதிகரிக்கையில் கிளை அல்லது தண்டுகள் முழுவதும் மூடிவிடும். கடுமையான சந்தர்ப்பங்களில், மரப்பட்டை அல்லது முழு கிளைகளும் இறந்து, விரிசலுடன் காணப்படும்.
உடனடியாக பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடவும். நோய்க்கிருமிகளின் முழுமையான அழிப்பை உறுதி செய்ய சுற்றியுள்ள ஆரோக்கியமான கிளைகள் சிலவற்றை அறுத்து விடவும்.
சீரமைப்புக்கு பிறகு, காயங்கள் மீது 0.3% செறிவான காப்பர் ஆக்ஸிகுளோரைடு பயன்படுத்தவும். மரங்களில் ஏற்படும் தொற்று விகிதத்தை குறைக்க போர்டாக்ஸ் கலவையை வருடத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள். பூஞ்சைக்கொல்லிகள் தியோபானேட்-மெத்தில் போன்றவற்றை கொண்டிருக்கும் தெளிப்பான்கள் பி. ரொடினாவுக்கு எதிராக பயனுள்ளதாக உள்ளன.மரங்கள் மீது பைஃபெந்திரின் அல்லது பெர்மெத்ரினைப் பயன்படுத்துவதன் மூலம் மரப்பட்டை வண்டுகள் அல்லது கம்பளிப்பூச்சி துளைப்பான்களைக் கட்டுப்படுத்தவும்.
பாட்ரியாஸ்பேரியா ரொடினா தாவர திசுக்களில் நீண்ட காலத்திற்கு வாழக் கூடியது. இது தண்டு மற்றும் கிளைகளில் உள்ள காயங்கள் மூலம் மாம்பழ மரங்களின் இரத்தநாள அமைப்பைத் தாக்குகிறது. தொற்றுக்கான துல்லியமான செயல்முறை முழுமையாக அறியப்படவில்லை. பூச்சிகள் (வண்டுகள்) அல்லது வயல் வேலைகளில் நிகழும் இயந்திர சேதங்களால் ஏற்படும் காயங்கள் இந்த நோய் தொற்றின் சாத்தியமான நுழைவு தளங்கள் ஆகும். நோய்த்தாக்கத்தின் முதன்மை ஆதாரம், கிளைகளின் இறந்த மரப்பட்டைகளில் காணப்படும் வித்துக்களாக இருக்கலாம். அவை வளரும் பருவத்தில் தாவரங்களில் இருந்து, அறுவடை பருவத்தில் பரவுகிறது. இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு ஆகியவற்றின் குறைபாடு நோய் பரவுவதை ஆதரிக்கக்கூடும். தண்ணீர் மற்றும் உறைபனி அழுத்தம் ஆகியவையும் இந்த நோயுடன் தொடர்புடையவையாக உள்ளன. இந்த நோய் எந்த நேரத்திலும் நிகழக்கூடும் ஆனால் வளரும் பருவத்தின் பிந்தைய நிலைகளில் அதிகமாக ஏற்படுகிறது.