மாங்கனி

மாங்கனி சாம்பல் நோய்

Oidium mangiferae

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • இலைகள், மலர்கள் மற்றும் பழங்கள் மீது வெள்ளை நிறத்தில், மாவு போன்ற திட்டுக்கள்.
  • இலைகள் மற்றும் பழங்களின் உருச்சிதைவு.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

நோய்த்தொற்றுடைய தாவர பாகங்கள் வெள்ளை, நுண்துகள் கொண்ட பண்புகளுடன் பூஞ்சை வளர்ச்சியின் சிறிய திட்டுக்களாக காணப்படும். நோயின் பிந்தைய நிலைகளில், பூஞ்சை காளான் திசுக்களின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும். பழைய இலைகள் மற்றும் பழங்களில் ஊதா-பழுப்பு நிறமாற்றம் காணப்படலாம். இளம் இலைகள் மற்றும் பூக்கள் முற்றிலும் வெள்ளை பூஞ்சை சிதல்களால் மூடப்பட்டு, பழுப்பு நிறமாகி, உலர்ந்து, இறுதியில் இறந்துவிடுகின்றன.அவற்றுள் உருமாற்றமும் காணப்படலாம் எ.கா. ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கொள்ளுதல். பழங்கள் வெண்மை நிற துகள்களால் மூடப்பட்டிருக்கும் மற்றும் ஆரம்ப கட்டங்களில் அவை வெடித்து மற்றும் தக்கைப்போன்ற திசுவையும் வெளிப்படுத்தக்கூடும். பாதிக்கப்பட்ட பழங்கள் சிறியதாகவும், சிதைந்ததாகவும் இருக்கும், மேலும் அவை முதிர்ச்சி அடைவதில்லை.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பேசில்லஸ் லிசேனிபார்மிஸ் கொண்டிருக்கும் உயிர்-பூஞ்சைக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் சாம்பல் நோய் தொற்றுக்களை குறைக்கலாம். ஒட்டுண்ணி பூஞ்சை அம்பெலோமைசெஸ் குய்ஸ்குவாலிஸ் அதன் வளர்ச்சியை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சல்பர், கார்போனிக் அமிலம், வேப்ப எண்ணெய், கொயானின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றின் அடிப்படையிலான இலைவழி தெளிப்பான்கள் கொண்டு தாவரங்களுக்கு சிகிச்சை அளிப்பது கடுமையான தொற்றுநோயைத் தடுக்கிறது. மேலும், பால் ஒரு இயற்கை பூஞ்சைக்கொல்லியாகும். பாலாடை வடிவத்தில் இதனை உபயோகப்படுத்துவதன் மூலம் சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். மோனோபொட்டாசியம் உப்புக்கள், ஹைட்ரொடிசல்புரைஸ்ட் மண்ணெண்ணெய், அலிபாட்டிக் பெட்ரோலிய கரைப்பான், மான்கோஜெப் மற்றும் மைக்லோபுடானில் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளை மாங்கனி மீதான சாம்பல் நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம். உகந்த விளைவுகளுக்கு, பூக்கும் முன் அல்லது பூக்கும் ஆரம்ப நிலைகளில் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். 7-14 நாட்கள் இடைவெளியில் தொடர்ச்சியான பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த இலைகளில் அல்லது செயலற்ற மொட்டுகளில் பருவங்களுக்கிடையே நோய் கிருமி வாழ்ந்து வருகிறது. தண்டு மற்றும் வேர்களைத் தவிர அனைத்து மர கூறுகளின் இளம் திசுக்களும் பூஞ்சைகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சாதகமான சூழ்நிலைகளின் போது, இலைகள் அல்லது மொட்டுக்களின் கீழ் வசிக்கும் நோய் கிருமிகள் விதைமூலங்களை வெளியிடுகின்றன மற்றும் அது காற்று அல்லது மழையின் மூலம் பிற மரங்களுக்கு பரவுகின்றன. 10-31° செல்சியஸ் இடையேயான சூடான தினசரி வெப்பநிலை மற்றும் குறைந்த இரவு நேர வெப்பநிலையுடன் கூடிய 60-90% ஈரப்பதம், சாதகமான சூழ்நிலைகளாகும்.


தடுப்பு முறைகள்

  • அதிக ஏற்பமைவு அல்லது எதிர்க்கும் திறன் கொண்ட வகைகள் கிடைக்கப்பெற்றால் அதனை தேர்வு செய்யவும்.
  • உலர்ந்த, நன்கு காற்றோட்டமான பகுதிகளில் மா மரங்களை வளர்க்கவும்.
  • பூஞ்சை நோயைக் குறைப்பதற்கு மரங்களை நறுக்கி திருத்தும் செய்யவும் மற்றும் உயரமான களைகளை அகற்றவும்.
  • புரவலன் அல்லாத பிற மர வகைகளை கொண்டு ஊடுபயிர் செய்யவும்.
  • சமச்சீர் ஊட்டச்சத்துக்களை உறுதி செய்து, உயர் நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை நீக்கி, ஏதேனும் தாவரக் கழிவுகளை அழிக்கவும்.
  • பொட்டாசியம்-பாஸ்பேட் கொண்ட உரங்களை கொண்டு தாவரங்களுக்கு சிகிச்சை அளிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க