மாங்கனி

பப்பாளி மற்றும் மாம்பழத்தின் விதைப்புள்ளி நோய்

Colletotrichum gloeosporioides

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • பழங்களின் மீது பெரிய, கரும் பழுப்பு நிற சிதைவுகளுடன், அடிக்கடி நீர் தோய்ந்த தோற்றத்துடன் காணப்படும்.
  • இளஞ்சிவப்பு முதல் ஆரஞ்சு நிற புள்ளிகள் சிதைவுகளுக்குள் மைய முறையில் வளர்கின்றன.
  • பழங்கள் பழுப்பதற்கு முன்னரே கீழே விழுந்துவிடுகின்றன.
  • அறுவடைக்குப் பிறகும் அறிகுறிகள் தோன்றலாம், குறிப்பாக பழங்களை குளிர்பதன பெட்டியில் வைத்திருந்தால் தோன்றும்.

இதிலும் கூடக் காணப்படும்


மாங்கனி

அறிகுறிகள்

விதைப்புள்ளி நோய் இலைகள் மற்றும் இலைக்காம்புகளின் மீது தானாகவே வெளிப்படுகின்றன, ஆனால் இது முக்கியமாக ஒரு பழ நோயாகும். இலைகளில் காணப்படும் அறிகுறிகள் இருண்ட விளிம்புகளுடன் சாம்பல் மற்றும் பழுப்பு நிற புள்ளிகளுடன், ஒளிவட்டத்தை சுற்றி மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. புள்ளிகள் பின்னர் பெரிதாகி, ஒன்றுடன் ஒன்று இணைந்து கணிசமான சிதைவு பகுதிகளை ஏற்படுத்துகின்றன. சிறிய, வெளிர் நிற புள்ளிகள் பழங்களின் தோலில் முதலில் தோன்றும். முதிர்ச்சியடைந்தவுடன், புள்ளிகளின் அளவு (5 செ.மீ) வரை பெரிதாக வளர்ந்து, வட்டமான பழுப்பு நிற சிதைவுகளாக மாறி, பெரும்பாலும் நீர் தோய்ந்த தோற்றத்துடன் காணப்படுகின்றன. இளஞ்சிவப்பு முதல் ஆரஞ்சு நிற புள்ளிகள் செறிவான முறையில் சிதைவுக்குள் வளர்கின்றன. "சாக்லேட் புள்ளிகள்" என குறிப்பிடப்படும் சிறிய, சிவந்த-பழுப்பு நிற (2 செ.மீ. வரை) புள்ளிகளும் காணப்படுகின்றன. பழங்கள் பழுப்பதற்கு முன்னரே கீழே விழுந்து விடுகின்றன. அறுவடைக்கு பின்னும் இந்த அறிகுறிகள் தோன்றலாம், குறிப்பாக பழங்கள் குளிர்பதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தால் தோன்றும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சாதகமான பருவநிலை சூழ்நிலையில் , உயிர் பூஞ்சைக்கொல்லிகள் சார்ந்த பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது பேசில்லஸ் மைலோலிக்ஃபேசியன்ஸ் நன்றாக வேலை செய்யும். விதைகள் அல்லது பழங்களை (48° செல்சியஸில் 20 நிமிடங்கள்) சூடான நீரில் சிகிச்சை அளித்தல் எல்லா வகையான பூஞ்சைகளையும் கொன்று, வயலில் அல்லது போக்குவரத்தின் போது நோய் பரவுவதை தடுக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருதுங்கள். அஜாக்சிஸ்ட்ரோபின், குளோரோத்தலோனில் அல்லது காப்பர் சல்பேட் ஆகியவற்றைக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகள் நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்க 10 - 12 நாட்கள் இடைவெளியில் 3 நாட்களுக்கு தொடர்ந்து தவறாமல் தெளிக்கலாம். இந்த சேர்மங்களுடன் விதை சிகிச்சையும் செய்யலாம். இறுதியாக, வெளிநாட்டு சந்தைகளுக்கு பழங்கள் அனுப்பப்படும் போது, இத்தகைய தொற்றுகளை தவிர்க்க அறுவடைக்குப் பிந்தைய பூச்சிக்கொல்லிகளுடன் உணவு-தர மெழுகு சேர்த்து பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

விதைப்புள்ளி நோய் உலகளாவிய ஒரு முக்கிய நோயாகும். இது மண்ணில் தோன்றும் பூஞ்சை கோலெட்டோட்ரிகம் குளோயோஸ்போரைடுகளால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை விதைகளில் அல்லது மண்ணில் இருக்கும் பயிர் கழிவுகளில் வாழ்கின்றன. இது சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்போது, காற்று மற்றும் மழையின் மூலம் வயலில் உள்ள பாதிப்படையாத, முதிர்ச்சியடையாத பசுமையான பழங்களுக்கு பரவுகிறது. நோய்க்கான மாற்று புரவலன்களுள் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் அவொகெடோ முதலியனவும் அடங்கும். மிதமான வெப்பநிலை (18 முதல் 28° செல்சியஸ் வரை), மிக அதிக ஈரப்பதம் (97% அல்லது அதற்கும் அதிகமான) மற்றும் குறைவான பிஹெச் (5.8 முதல் 6.5 வரை) வயலில் நோய் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது. உலர் வானிலை, உயர் சூரிய கதிர் அல்லது வெப்பநிலை உச்சம், அதன் வளர்ச்சியை தடுக்கிறது. பூஞ்சை அதன் வாழ்க்கை சுழற்சியை முழுமையாக்குவதற்கு அது பரவுகின்ற பழம் ஒரு குறிப்பிட்ட அளவு பழுத்திருக்க வேண்டும்.


தடுப்பு முறைகள்

  • குறைந்த மழைப்பொழிவு கொண்ட தளங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தாவர தடுப்பு வகைகள் மற்றும் ஆரோக்கியமான விதைகளை பயன்படுத்தவும்.
  • தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி விடவும்.
  • சிட்ரஸ் பழங்கள் அல்லது காபி போன்ற புரவலன் அற்ற தாவரங்களை வயல்வெளிகளில் அல்லது அதன் சுற்றுப்புறத்தில் நடவும்.
  • காற்றோட்டத்தை அதிகரிக்க வருடாவருடம் கிளைகளை அகற்றி சுத்தம் செய்யவும்.
  • வயலில் கீழே விழுந்திருக்கும் பழங்கள் மற்றும் இலைகளை அகற்றவும்.
  • வயல்களில் உள்ள களைகளை அகற்றி விடவும்.
  • நல்ல வடிகால் முறைகளை செயல்படுத்தவும்.
  • மிக மோசமான அறிகுறிகளைத் தவிர்ப்பதற்கு ஆரம்பத்திலேயே அறுவடை செய்ய வேண்டும்.
  • நல்ல காற்றோட்டமான சூழலில் பழங்களை சேமித்து வைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க