கோதுமை

கோதுமையின் தானியக் கருகல் நோய்

Tilletia indica

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • கதிரின் சில தானியங்கள் கருகியது போன்ற தோற்றம் பெறும்.
  • தானியங்கள் கருப்பு நிற பொடி போன்ற துகள்களால் நிரம்பியிருக்கும்.
  • தானியங்களை கசக்கும்போது அழுகிய மீன் போன்ற துர்நாற்றம் வரும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கோதுமை

அறிகுறிகள்

ஆரம்ப நிலைகளில், ஒரு கதிரில் உள்ள சில தானியங்களின் அடிப்பகுதியில் கருப்பு நிற பகுதிகள் உருவாகும். சிறிது சிறிதாக, தானியங்கள் முழுவதும் நீக்கப்பட்டு, கருப்பு நிற பொடி போன்ற துகள்களால் முழுவதும் அல்லது பாதியளவு நிரப்பப்படும். இதனால் தானியங்கள் வீங்குவதில்லை மற்றும் உமிகள் பாதிக்கப்படுவதில்லை. இந்த நோய் பரவும்போது, பிற கதிர்களின் தானியங்கள் பாதிக்கப்படும். இவற்றினை கசக்கும்போது அழுகிய மீனின் துர்நாற்றத்தினைக் கொடுக்கும். இருப்பினும், ஒரு கதிரில் சுமார் 5 அல்லது 6 தானியங்கள் மட்டுமே கருகிய தோற்றம் பெற்றிருக்கும். பாதிக்கப்பட்ட பயிர்கள் குட்டையாகிவிடும். கோதுமை மகசூலில் இவை சிறிதளவே பாதிப்பினை ஏற்படுத்தவல்லவை ஆனால், தரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அல்லது வித்துக்கள் இருப்பதினால் விதைகள் மறுக்கப்படக்கூடும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மன்னிக்கவும், டில்லெடியா இன்டிகா எனும் இப்பூஞ்சைகளுக்கு எதிராக தற்போது எங்களிடம் எவ்வித மாற்று சிகிச்சை முறைகளும் இல்லை. எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம் இதுகுறித்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொண்டு பிறருக்கும் உதவவும். உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும்.. எந்தவித விதை சிகிச்சைகளும் நூறு சதவிகித பலனளிப்பதில்லை ஆனால் பூஞ்சைகள் வளர்ச்சி மற்றும் தானியங்களில் ஏற்படும் பாதிப்புகளை நிறுத்தும் வகையில் பலவிதமான சிகிச்சை முறைகள் உள்ளன. கார்பாஃக்ஸின்-திரம், டைஃபெனோகோனஸோல், மெஃபெனோஃக்ஸாம் அல்லது டெபுகோனஸோல் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தி, களத்தில் காற்று வழி பரவும் நோயினைக் குறைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

கோதுமையின் தானியக் கருகல் நோய் விதைவழியே பரவும் பூஞ்சைகளான டில்லெடியா இன்டிகா என்பவற்றால் ஏற்படுகிறது. இவை மண்ணில் சுமார் 4-5 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இவற்றின் வித்துக்கள் சுகாதாரமற்ற மண் அல்லது எஞ்சிய பயிர்களில் தங்கியிருந்து ஆரோக்கியமான பயிர்கள் மற்றும் மஞ்சரிகளுக்கு பரவும். பூக்கும் பருவம் முழுவதும் நோய் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம், ஆனால் கதிர்கள் வளரும் காலத்தில்தான் இவை அதிகம் பாதிக்கப்படுகின்றன. வளரும் விதைகளில் குடியேறும் பூஞ்சைகள், அவற்றிலிருக்கும் பொருட்களை படிப்படியாக வெளியேற்றுகின்றன. நோய் அறிகுறிகள் அதிகரிப்பதில் காலநிலை முக்கியப்பங்காற்றுகிறது. தானியங்கள் உருவாகும்போது ஈரமான வானிலை (>70%) மற்றும் 18-24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போன்றவை நோய் வளர ஏதுவான சூழ்நிலைகளாகும். பண்ணைக் கருவிகள், இயந்திரங்கள், துணிகள் மற்றும் வாகனங்கள் மூலமாகக் கூட வித்துக்கள் பரவலாம்.


தடுப்பு முறைகள்

  • சான்றளிக்கப்பட்ட மூலங்கள் அல்லது ஆரோக்கியமான பயிர்களின் விதைகளைப் பயன்படுத்தவும்.
  • தடுப்பு வகை பயிர்கள் கிடைத்தால் அவற்றை பயிரிடவும்.
  • நிலத்தினைச் சுற்றி மாற்று புரவலன்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்.
  • அதிகளவிலான பயிர் சுழற்சியினை புரவலன் அல்லாத பயிர்களுடன் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளவும்.
  • விதைத்தல் நேரத்தினை சரிசெய்துகொள்வதன் மூலம், பூஞ்சைகளுக்கு ஏதுவான காலநிலைகளில் கதிர்கள் உருவாவதை தடுக்கலாம்.
  • சிறந்த வடிகால் முறையினைக் கையாளவும் மற்றும் பூக்கும் பருவத்தில் அதிகளவிலான உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • அதிகளவிலான நைட்ரஜன் உரமளித்தலைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பண்ணை கருவிகள் மற்றும் மண் போன்றவற்றின் பரிமாற்றங்களை தவிர்க்கவும்.
  • பிளாஸ்டிக் தழைக்கூளத்தினைப் பயன்படுத்தி மண்ணின் வெப்பநிலையினை அதிகரிக்கலாம் மற்றும் பூஞ்சைகள் பரவுவதைக் குறைக்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க